தமிழ் 'நீட்'டும் உயர்வு தரும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:00

இந்தியாவில் அமலாகியுள்ள நீட் தேர்வு பற்றி இன்று வரை சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள், நீட் தேர்வு பற்றிக் கலங்காமல் களமிறங்கி, தேர்ச்சி பெற்று வருகிறார்கள். தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களும், நீட் தேர்வை நம்பிக்கையுடன் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்வழியில் படித்து, நீட் தேர்வில் வெற்றிபெற்று தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ள மாணவி நந்தினியிடம் பேசினோம்.
“நான் தமிழ்வழி கல்வியில்தான் படித்து நீட் தேர்வு எழுதினேன். மருத்துவப் படிப்பில் சேர போட்டிகள் இருக்கும் என்பதை முன்னமே புரிந்து கொண்டேன். கடந்த ஆண்டு நான் பிளஸ் 2 முடித்துவிட்டு, உடனடியாக நீட் தேர்விற்கான பயிற்சியில் சேர்ந்துவிட்டேன். தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள, அரசு உதவிபெறும்
என்.எஸ்.கே.பி. (NSKP) உயர்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியைப் படித்தேன். படிப்பு முடிந்ததும் தமிழ்வழியில் எங்கெல்லாம் நீட் தேர்விற்குப் பயிற்சி கொடுக்கிறார்கள் என்பதைத் தேடிவந்தேன். அதில் நல்ல வகுப்பு ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றேன்.
காலை 5:30 மணிக்கு படிக்கத் தொடங்குவேன். இரவு 10:30 வரை வகுப்புகள், தேர்வுகள் என நேரம் ஓடும். இடையிடையே சில மணிநேரம் ஓய்வும் எடுப்பேன். தமிழ்வழிக் கல்வியில் படித்தாலும், ஆங்கிலத்தையும் புரிந்துகொள்ள ஆங்கிலப் பாடப் புத்தகங்களையும் படிப்பேன். ஒரு பாடப்பிரிவுக்கு ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் நம்பாமல் பல புத்தகங்களைப் படித்து, சந்தேகங்களை உடனே கேட்டுத் தெளிவு பெறுவேன். ஓராண்டு முழுவதும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தினால், நிச்சயம் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
நான் பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றிருந்தாலும், நீட் தேர்வு எழுதுவது என்றவுடன் பயமாக இருந்தது உண்மைதான். ஆனால், என்னை நானே தேற்றிக்கொண்டு, தமிழில் 'நீட்' தேர்வு எழுதத் தயாரானேன். என்னுடைய நோக்கம் முழுவதும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதாகவே இருந்தது. நினைத்ததை முயற்சியின் மூலம் சாதித்து நீட்டில் 529 மதிப்பெண்கள் பெற்றேன். உங்களுடைய கனவில் உறுதியாய் இருந்தால் நிச்சயம் ஜெயிப்பீர்கள்" என்றார் நந்தினி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
27-ஜூலை-201923:08:38 IST Report Abuse
Bala சூர்யா போன்ற நடிகர்களின் நீட் தேர்வை பற்றிய கருத்துக்கு , இந்த மாணவி நந்தினியின் வெற்றி ஒரு செம்மட்டி அடி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X