இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2019
00:00

பெண்களே... 'பைக்'கில் செல்கிறீர்களா
அண்மையில், கணவருடன், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற, என் தோழி, தவறி விழுந்ததில், படுகாயம் அடைந்தாள்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.
விபத்து குறித்து விசாரித்தேன். கணவருடன், பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்லும் போதெல்லாம், மொபைல் போனில், 'வாட்ஸ் - ஆப், பேஸ்புக்' மற்றும் 'யூ - டியூப்' பார்த்தபடியே செல்லும் வழக்கத்தை வைத்திருந்தாளாம்; கணவர் எவ்வளவோ கண்டித்தும் கேட்கவில்லையாம்.
சம்பவம் நடந்த அன்று, பைக்கின் பின்னால் அமர்ந்து, இரண்டு கைகளிலும், மொபைல் போனை பிடித்து, 'பேஸ்புக்' பார்த்து, 'கமென்ட்' பண்ணிக் கொண்டிருந்திருக்கிறாள்.
கவனம் சிதறி, தான் வீட்டில் உட்கார்ந்திருப்பதான கற்பனையில், சோபாவில் சாய்வது போல் பின்னால் சாய்ந்துள்ளாள். சாலையில் விழுந்ததில், தலையில் அடிபட்டு விட்டது.
இனிய தோழிகளே... சாலையில், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது, பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் கவனம் தேவை என்பதை உணருங்கள். இல்லையென்றால், கவனச் சிதறல் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எச்சரிக்கை.
- பே. ராமலட்சுமி, ராஜபாளையம்.

உஷார்!
ஆசிரியையான நான், சமீபத்தில், அரசு தேர்வு, விடை தாள்கள் திருத்தும் பணிக்கு சென்றிருந்தேன்.
அங்கு வந்திருந்த வெளியூர் ஆசிரியர் ஒருவர், உணவு இடைவேளையின் போது, அனைவரும் கூடியிருக்கையில், தன் மனைவியை பற்றியும், தான் எவ்வளவோ விட்டுக்கொடுத்தும் இல்லறம் இனிக்கவில்லை என்றும், குறைபட்டுக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களில் சிலர், அவருக்கு ஆறுதல் கூறினர்.
ஒருநாள், சிறிது தாமதமாக உணவருந்தி, 'டிபன் பாக்சை' கழுவி எடுத்து வந்தேன். அப்போது, மேற்படி நபரும், அவர் நண்பரும், மரத்தடியில் புகைத்தபடியே பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது...
'ஏம்பா... உன் மனைவி, எவ்வளவு தங்கமானவங்க... அவங்களை போயி, இப்படி குறை கூறி பேசுறியே... இது சரியா...' என, நண்பர் கேட்க, அதற்கு, அந்த ஆசிரியர் சொன்ன பதில், அதிர்ச்சியை தந்தது.
'மாப்ள... இதெல்லாம் சும்மா ஒரு, 'டைம் பாஸ்...' வீட்டில், நான் தான் பெண்டாட்டிக்கு உதவியா, காய் நறுக்குவேன்... பாத்திரம் துலக்குவேன்னு, செய்யாததெல்லாம் செய்ததாக சொன்னா, யாருக்கு தெரிய போகுது... ஆனா, இப்படி சொன்னால் நம் மேல ஒரு பரிதாபம் வரும் பாரு... அது, நமக்கு, பல விஷயத்துல உதவும்.
'இப்படித்தான் ரெண்டு வருஷம் முன்னால, இதே ஊர்ல, வேற ஒரு பள்ளியில, இதே மாதிரி ஒரு கதையை அவுத்து விட்டேன்...
'வந்திருந்ததுல, ஒரு ஆசிரியை பயங்கரமா, 'இம்ப்ரஸ்' ஆகி, மறுநாள், அவங்க வீட்டுலேர்ந்து சாப்பாடு, டிபன், காபின்னு எடுத்து வந்து அமர்க்களப்படுத்திட்டா... ஆளு சும்மா, 'டக்கரா' இருப்பா...' என, புகை கசியும் பல்லை காட்டி சிரித்தபடியே கூற, நான், கூனிக் குறுகி போனேன்.
பெண்களே... இதுபோன்ற ஆ'சிறியன்'கள், உங்களிடையேயும், தம் வித்தையை காட்டக் கூடும். நாம் தான், உஷாராக இருக்கணும்!
- எஸ். கவுரிலட்சுமி, திருச்சி.

இதுவன்றோ நட்பு!
என் மகன், பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் உள்ள ஒரு வங்கியில், ஆபீசராக வேலை பார்த்தான். அவனது, 31வது வயதில், திடீரென மாரடைப்பால் இறந்த செய்தி கேட்டு, துடித்து போனோம்.
அவனுக்கு, மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் இருந்தது. மறுநாள் அதிகாலை விமானத்திற்கு, டிக்கெட் முன்பதிவு செய்து, நாங்கள், டில்லி போனோம். அங்கிருந்து, காரில், சண்டிகர் சென்று இறங்கியபோது, எங்களை வரவேற்றனர், மகனின் உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள்.
மகனின் இறுதி பயணம் எந்தவித தடங்களும் இல்லாமல் நடக்க, கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் செய்தனர்.
'அம்மா... கவலைப்படாதீர்கள்... உங்களுக்கு, நாங்கள் இருக்கிறோம்... உங்கள் மகனை, எப்போது பார்க்க விரும்பினாலும், உடனே போன் பண்ணுங்கள்; வந்து விடுவோம்... என்ன வேண்டுமானாலும் செய்கிறோம்...' என்று, அவர்கள் சொல்ல, உணர்ச்சி பொங்க அழுது கொட்டி விட்டேன்.
இதோ, என் மகன் இறந்து, 22 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றும், அடிக்கடி போன் செய்து, நலம் விசாரிக்கின்றனர். வயிற்றில் சுமக்காமல் கிடைத்த இக்குழந்தைகளை பெறுவதற்கு, 'என்ன தவம் செய்தேனோ...' இன்று வரை, சொன்ன சொல்லை காப்பாற்றுகின்றனர்.
இன்று, என் வயது, 80. இவர்களை நினைத்தாலே, மனதுக்கு சாந்தியும், ஆறுதலாகவும் உள்ளது. இதுவல்லவோ உண்மையான நட்பு; அன்பு!
சாவித்திரி, சென்னை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-201904:16:58 IST Report Abuse
தீதும் நன்றும் பிறர் தர வாரா மனைவியை பத்தி சும்மா ஜோக் சொல்வார்கள் ஆண்கள் அது எல்லா இடத்தில் உள்ளது.. ஆனால் முன் பின் தெரியாத ஆட்களிடம் எனக்கு தெரிந்து யாரும் எல்லா குறையையும் சொல்லி கொண்டு இருப்பார்கள் என நம்ப முடியவில்லை..நிறைய ஆண்கள் தங்கள் குறைகளை சொல்லாமல் அனுசரித்து கொண்டு போகிறவர்களும் இருக்கிறார்கள்.. சாப்டுக்காகவும் சைட் அடிப்பதற்காகவும் மற்றவர்கள் அனுதாபத்திற்காகவும் குறை சொன்னால் அது ஒரு மன நோய் மட்டுமே.. இது போன்ற ஆட்கள் விதி விலக்கு..
Rate this:
Girija - Chennai,இந்தியா
09-ஆக-201916:27:20 IST Report Abuse
Girijaஇது அப்பாவி பெண்களுக்கு வலைவிரிக்கும் தந்திரம்....
Rate this:
Cancel
Vijay - Bangalore,இந்தியா
05-ஆக-201909:56:57 IST Report Abuse
Vijay என் பிரண்டோட தோழி அவளோட ஒன்னு விட்ட சித்தப்பா மகளோட பையனோட வைப் இப்படித்தான் செல் போன் பாத்துட்டுட்டே கீழே போட்டுட்டா .. சண்டாளன் மெதுவா ஓட்ட கூடாது ..
Rate this:
Girija - Chennai,இந்தியா
07-ஆக-201919:22:50 IST Report Abuse
Girijaஜோசப் பெரியவரை பழிக்காதே...
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
09-ஆக-201906:58:05 IST Report Abuse
Vijayபெரியவர்கள் கண்ணியத்துடன் கருத்து பதிவு செய்தால் மதிக்கப்படுவர் .......
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
05-ஆக-201907:36:56 IST Report Abuse
Girija @பே. ராமலட்சுமி, ராஜபாளையம், உங்கள் ஊரில் ஹெல்மெட் போடவேண்டிய சட்டம் இன்னும் வரவில்லையா? உங்கள் தோழி பைக்கில் இருந்து விழுந்த காரணம் புதிதாக உள்ளது. பைக்கோ அல்லது காரோ கூட செல்பவர்கள், கார் என்றால் முன் சீட்டில் இருப்பவர், சாலையின் மீது கவனம் செலுத்தவேண்டும், சாலையில் செல்லும் பிற வாகனங்கள் வேகம், ஸ்பீட் பிரேக்கர், சிக்னல் போன்றவற்றை பேசி அலர்ட்டாக இருக்க வேண்டும், வண்டியில் தூங்கக்கூடாது அல்லது வண்டி ஓட்டுபவரை எரிச்சல் படவைக்கும் விதத்தில் பேசக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X