அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 24 வயது பெண். எனக்கு ஒரு தம்பி. பள்ளி இறுதி ஆண்டு படித்து வருகிறான். அப்பா, தனியார் நிறுவன எழுத்தர்; அம்மா, இல்லத்தரசி. கடன் வாங்கி, என்னை, நர்சிங் படிக்க வைத்தார், அப்பா.
தற்சமயம், மருத்துவமனை ஒன்றில் பணிபுரிகிறேன். வீட்டின் பொருளாதாரம் ஓரளவு முன்னேற ஆரம்பித்துள்ளது.
எனக்கு திருமணம் செய்ய விரும்பினர், பெற்றோர். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டுமே வைத்தேன். அதாவது, என் சம்பளத்தை மூன்றாக பிரித்து, ஒரு பகுதி, பெற்றோருக்கும், இரண்டாவது பகுதி, தம்பி படிப்புக்கும், மூன்றாவது பகுதியை, கணவர் வீட்டிற்கும் கொடுக்க சம்மதிக்கும் மாப்பிள்ளையாக பார்க்க சொன்னேன்.
என் கோரிக்கையை கேட்ட பெற்றோர், முதலில் எதிர்ப்பு காட்டினர். நான் பேசி, சமாதானப்படுத்தினேன்.
என்னை பெண் பார்க்க வந்த மூன்று வரன்களிடமும், என் கோரிக்கையை வைத்தேன்; பின்வாங்கி விட்டனர்.
'இப்படியே போனால், வயதாகி விடும், பிறகு திருமணம் நடப்பது சிரமம்...' என்று கூறினர்; இருந்தும், அடுத்த பெண் பார்க்கும் படலத்துக்கு ஏற்பாடு செய்ய, தடை போட்டேன்.
'தம்பி படித்து முடித்து, வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்ததும், நான் திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று கூறி விட்டேன்.
ஆண் பிள்ளைகள், குடும்ப பாரத்தை சுமப்பது போல், எனக்காக கஷ்டப்பட்ட பெற்றோருக்கு உதவுவதில் என்ன தவறு இருக்கிறது... திருமணத்தின் மீதே வெறுப்பு ஏற்படுகிறது.
நான் என்ன செய்யட்டும், அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
இப்போதெல்லாம் திருமணம் செய்யும் பெரும்பாலான ஆண்கள், வேலை பார்க்கும் பெண்களை தான் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். இரண்டு சம்பளம் வந்தால் தான், குடும்பத்தை பொருளாதார சிக்கல் இல்லாமல் ஓட்ட முடியும் என, திருமணம் செய்யும் இருவருமே நம்புகின்றனர்.
வேலை பார்க்கும் பெண்கள் என்றால், சம வயதினராய், பார்க்க சுமாராய் இருந்தாலும் திருமணம் செய்து கொள்ள தயார் என்கின்றனர், பெரும்பாலான ஆண்கள். திருமணத்திற்கு பின், மனைவியின் சம்பளம் பைசா குறையாமல் தனக்கு சேர வேண்டும் என்றும் விரும்புகின்றனர், சில ஆண்கள்.
திருமணம் செய்யப்போகும் ஆணிடம், நிபந்தனைகளை விதிப்பது, கதைக்கு உதவாத செயல். பெண் கேட்டு வரும் ஆண்கள், உன் நிபந்தனையை கேட்டு தலைதெறிக்க ஓடி விடுவர்.
உன் குடும்பம் ஒன்றும் வறுமையில் வாடவில்லை. தவிர, உன் பிறந்த வீடு, ஏழெட்டு குடும்ப அங்கத்தினர்கள் உள்ள பெரிய குடும்பம் அல்ல. நீ இல்லாமல், உன் குடும்பத்தில் மூன்றே அங்கத்தினர்கள்.
தாயார், அதிக மருத்துவ செலவுகள் ஆகும் நோயாளி இல்லை. தந்தை, வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கவில்லை. குறைந்தபட்சம், 30 ஆயிரம் சம்பளம் வாங்கும் வேலையில் இருக்கிறார்.
வேலை வாய்ப்பு அதிகம் உள்ள ஏதாவது ஒரு படிப்பில், உன் தம்பி சேர்தல் போதுமானது. அதற்கு, கல்வி கட்டணம், ஆண்டிற்கு, 30 ஆயிரம் ரூபாய் தாண்டாது. கடன் வாங்கி, உன்னை, நர்சிங் படிக்க வைத்ததாக குறிப்பிட்டிருந்தாய். கல்வி கடன் என்றால், ஒரு லட்ச ரூபாயை தாண்டாது.
உனக்கு, இப்போது, 24 வயது ஆகிறது. மூன்று ஆண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடு. இப்போது, 20 - 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவாய். மாத செலவிற்கு, 5,000 ரூபாய் எடுத்துக் கொள். மீதி, 15 - 20 ஆயிரம் ரூபாயை, 36 மாதங்களுக்கு கணக்கிடு. ஐந்து அல்லது ஏழு லட்சம் ரூபாய் வரும்.
இந்த பணத்தை வைத்து, உன் படிப்பு செலவுக்கான கடனை அடை. தம்பியின் கல்வி செலவை ஈடுகட்டு. மொத்தத்தில், குறைந்தபட்சம், ஐந்து லட்ச ரூபாயை, உன்னை படிக்க வைத்த குடும்பத்துக்கு நன்றி கடனாக கொடு.
குடும்ப நலனுக்கு, மூன்று ஆண்டு சம்பளத்தை கொடுக்கிறேன் என்பதை, ஒரு உழைப்பாளி அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார். 'வருங்கால கணவனுக்கு, நீ நிபந்தனையும் விதிக்க வேண்டாம். உன் திருமணத்தை, 27 வயது வரை தள்ளியும் போட வேண்டாம்...' என்பார், உன் தந்தை.
உன் சம்பளத்தை நேரடியாக தந்தையிடம் தராமல், நீயே கடனை அடைக்கலாம். தம்பியின் பெயரில் வங்கி கணக்கு ஆரம்பித்து, அவனுக்கான கல்வி செலவை அதில் சேமிக்கலாம்.
எந்த நிபந்தனையும் இல்லாமல் திருமணம் செய்து கொள். கணவன் மனம் கோணாமல் குடும்பம் நடத்து. பிறகு, அவனே உன் குடும்பத்திற்கு உதவியாக இருப்பான்.
கடிதத்தை பார்த்ததும், உன் மீது, எனக்கு ஒரு மரியாதை வந்தது. உன் அன்பும், பாசமும், பொறுப்புணர்ச்சியும் குடும்பத்திற்கான சொத்து. உன் பெற்றோர், புண்ணியம் செய்தவர்கள். இக்கால பெண்களுக்கு, நீ ஒரு நல்ல, 'ரோல் மாடல்!'
உன் நல்ல எண்ணத்திற்கு, நல்ல குணவான், கணவனாய் அமைவான். திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.

என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-ஆக-201919:06:56 IST Report Abuse
D.Ambujavalli தாய் வீட்டுக்கு ஒரு அவசர நிலை ஏற்பட்டு , வீடே ஏலத்தில் போகும் நிலை வந்தாலும், ஐந்து லக்கத்தில் சம்பாதிக்கும் மனைவி சேமிப்பிலிருந்து கொடுத்து உதவ கணவன் வீட்டார் சம்மதிக்க மாட்டார்கள் விள்ளாமல் விரியாமல், மனைவியின் சம்பளம் கைக்கு வர வேண்டுமாம் அவளை படிக்க வைத்து, இந்தக் காலத்தில் லஞ்சமும் கொடுத்து பெற்றவர்கள் வேலை வாங்கித்தர வேண்டும், இவன் நோகாமல் வாரிக்கொள்ளுவான் என்ன நியாயம் இது ?
Rate this:
Valaikuda Vallal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-201910:12:54 IST Report Abuse
Valaikuda Vallalஅப்படி பட்டவர்களை ஏன் திருமணம் செய்ய வேண்டும்..? அவ்வாறான மாப்பிள்ளைகளை நிராகரியுங்கள் .....
Rate this:
Girija - Chennai,இந்தியா
09-ஆக-201916:33:13 IST Report Abuse
Girijaஇது கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் அல்லது நடந்த விஷயம் என்று புரிந்து கொள்ளவும். அப்போது அந்த பெண் எப்படி நிராகரிக்க முடியும்? ஆனால் அப்படி ஒரு கணவன் செய்தால் அந்த மனைவி உடனே எதிர்த்து போராடாவிட்டாலும் மனதளவில் கணவனை ஒதுக்கி விடுவாள். அதற்கு பின் அவளது கணவன் ஒரு ஜடம் தான். அவன் இறந்தாலும் அதிக வருத்தப்பட மாட்டாள்....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
05-ஆக-201907:26:38 IST Report Abuse
Girija இல்லறத்தில் கணவனின் ஆண்மை கருவாக மாறி வளரும்போது "சவ்வுடு பரவுதல்" கோட்பாட்டின்படி கணவனின் வாசம் மனைவியின் சுவாசத்தில் கலந்து இருக்கும், வாந்தி மயக்கம் போன்ற போன்றவைகளும் அவளுக்கு ஏற்படுகின்றன. அப்பொழுது சிறிது அவஸ்தைப்பட்டாலும் அதுதான் மனைவிக்கு அலாதியான இன்பம், பிள்ளை பெற்றவர்களுக்கு தெரியும். முழுமையான குழந்தைவரம் என்பது "ஈர் உயிர் ஓர் உயிராய் ஒன்றற கலந்து ஈன்றெடுப்பது". என்னதான் செயற்கை கருத்தரிப்பு என்றாலும் அந்த கரு பெண்ணின் கருப்பைக்குள் சென்றவுடன் மேற்சொன்ன "சவ்வுடு பரவுதல் " கோட்பாட்டின்படி அந்த ஆண்மைக்கு சொந்தக்காரன் வாசம் அப்பெண்ணின் சுவாசத்தில் இருக்கும். கடைக்கு சென்று ரீபில் பேக் போல் ஆண்மையை வாங்கி பெற்றுக்கொண்டாலும் அந்த ஆணின் வாசம் அந்தப்பெண்ணின் சுவாசத்தில் இருக்கத்தான் செய்யும். எனவே இல்லறத்தை நல்லறமாக போற்றி வாழுங்கள்.
Rate this:
Valaikuda Vallal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஆக-201910:15:01 IST Report Abuse
Valaikuda Vallal?? மணிரத்னம் படம் பார்த்த effect ......
Rate this:
Cancel
வழிப்போக்கன் - Somerville, MA,யூ.எஸ்.ஏ
05-ஆக-201900:50:49 IST Report Abuse
வழிப்போக்கன் அது என்ன "சம்பளம் வந்தால் - சுமாராக இருக்கும் பெண் கூட - " என்ற வாக்கியம் .. மிகவும் எரிச்சலூட்டும் ஒரு மனோபாவம் இதனை மீண்டும் மீண்டும் திணித்து (நடைமுறை , பிராக்டிகல் என்று வேறு சேர்த்து கொள்வார்கள்) பெண்களை என்னமோ ஆண்கள் மணப்பது அவர்களுக்கு "வாழ்க்கை தருவதாக " இறுமாந்து இருக்கும் எண்ணம் அப்படியே இருக்க உதவுகிறார்கள் .. இன்று ஆண்கள் வெறும் விந்தணு உற்பத்தி சாலைகள் அவ்வளவே .. அதுதான் அவர்கள் உண்மையான (விலங்கு உலகில் கூட) வேலை .. மற்றபடி பெண்கள்தான் பெற்று வளர்த்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் சக்தி .. அதனை விட்டால் தனக்கு தானே தேவையான உணவை ஈட்டி கொள்ளும் சக்தி கொண்டவர்கள் (குழந்தை பெற்ற ஆறாவது வாரம் வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலோர் ). மற்றபடி ஆண்பிள்ளை எதற்கும் தேவை இல்லை .. இங்கு நான் பார்க்கிறேன் (அதுவும் கறுப்பினர் சமூகத்தில் மிக அதிகம் - நகர வாழ்க்கையில் அவர்கள் அதிகம் மற்றும் பல ஐரிஷ் சமூகத்தில் ) .. படுத்துவிட்டு குழந்தை தந்து விட்டு காணாமல் போகும் கணவர்கள் , அந்த சிறார்கள் தாயின் வளர்ப்பில் - ஒன்றா இரண்டா , அவரின் ஊதியத்தில் .. அதுதானே தமிழகத்திலும், எங்கள் வீட்டு வேலைக்காரியின் சம்பளத்தில் குடித்துவிட்டு (புணர மட்டும்) கணவன் .. என்ன சமூகம் அவளை - புருஷன் என்று சொல்லி அந்த கொடுமையில் உழல வைக்கிறது .. பாவம் அவர்.. தயவு செய்து ஆண்களை அவர்கள் உண்மையான ரோலை உணருங்கள் .. சுஷ்மிதா சென் சொன்னதை பாருங்கள் . சம்பாதிக்கிறார் , குழந்தைகளை தத்து எடுத்து கொண்டு தாயக வாழ்கிறார் .., வேண்டும் என்றால் குழந்தை கூட பெற்று கொள்ளலாம் , தாய்மையை உணர .. உடன் கணவன் என்ற நண்பன் (ஆம் நண்பன்) இருந்தால் மட்டுமே திருமணம் செய்யுங்கள் இல்லை என்றால் நீங்கள் அவரின் ஸ்பெர்ம் பெற மட்டுமே திருமண பந்தத்தில் .. அதில் உங்கள் தனித்தன்மை (சம்பளம் கூட) மறைந்த போக கூடாது .. இது ஈகோ அல்ல சுயமரியாதை .. பலர் இதனை ஆணவம் என்று கேலி பேசினாலும் கூட இதுதான் உண்மை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X