வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2010
00:00

கோடு போட்டு அழகு பார்க்க :
வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம்.
இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (–) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும். மூன்று சமன் (=)அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும். இதே போல டில்டே (நு) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும். இதே போல (#) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும். இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது? கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம். இதனை மாற்ற Tools  மெனு திறக்கவும். பின் அதில் Auto corrections  என்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.
அழகான வடிவங்களில் டேபிள்கள்:
வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், டேபிள் எனப்படும் அட்டவணைகள் பலவற்றை நாம் அமைக்கிறோம். தகவல்களை அதனைப் பார்ப்போர் எளிதாகவும், விரைவாகவும் புரிந்து கொள்ள இவை உதவுகின்றன. பல பாராக்களில் சொல்ல வருவதை ஒரு சிறிய டேபிளில் டேட்டாவை அமைப்பதன் மூலம் காட்டிவிடலாம். இந்த டேபிளை அமைக்க ஆரம்பத்தில் நாம் டேபிள் மெனு சென்று, நெட்டு வரிசைகளையும், படுக்கை வரிசைகளையும் தேவைப்படும் அளவில் அமைத்து அமைக்கிறோம். சாதாரண கோடுகளில் இவை அமைக்கப்படுகின்றன. இவற்றை வண்ணமயமாகவும் அழகான வடிவங்களிலும், கட்டங்களிலும் இன்னும் பல வகைகளிலும் அமைக்கலாம். இதற்கான விருப்பத்தேர்வுகளை (ஆப்ஷன்ஸ்) டேபிள் மெனுவிலேயே தரப்படுகின்றன. இவற்றை பெற்று எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
முதலில் ஒரு டேபிளை உருவாக்குங்கள். பின் கர்சரை அந்த டேபிள் உள்ளே வைத்து Table  மெனு சென்று அதில் Table AutoFormat என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இங்கு பல பிரிவுகளில் டேபிள் எப்படி தோற்றமளிக்கும் எனக் காட்டப்படும். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய டேபிள் அதே தோற்றத்தில் அமைவதைக் காணலாம். டேபிள்களுக்கான நிறைய ஸ்டைல்கள் உங்களுக்கு ஆப்ஷனாகக் காட்டப்படும். இதனால் உங்களின் டேபிள் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுவதனைக் காணலாம். குறிப்பாக இவற்றை பிரிண்ட் எடுக்கும்போது இவை அமைக்கப்படும் விதத்தைக் கண்டு அசந்து போவீர்கள்.
டேபிளில் பேக் ஸ்பேஸ் / டெலீட் கீகள்
வேர்டில் அட்டவணை ஒன்றைத் தயாரித்துள்ளீர்கள். இதில் செல்கள், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை முற்றிலுமாக அழிக்க என்ன செய்கிறீர்கள்? அழிக்க வேண்டியதைத் தேர்ந்தெடுத்த பின்னர் டெலீட் கீயினை அழுத்துகிறீர்களா? என்ன நடக்கிறது? அழிய மறுக்கிறதா? இதற்குத்தான் மெனு வழி இருக்கிறதே. டேபிள் தேர்ந்தெடுத்து எந்த வகை வரிசையோ அதனைத் தேர்ந்தெடுத்து டெலீட் கொடுத்தால்தான் அழிந்து விடுமே என்று நீங்கள் எண்ணுவது தெரிகிறது. ஆனால் இத்தனை படிகள் தாண்டவேண்டுமே என இன்னொருவர் கூறுவதும் கேட்கிறது. இதற்கு மாற்று கீயாக (மருந்தாக) இன்னொரு கீ உள்ளது. அதுதான் பேக் ஸ்பேஸ் கீ. தேவையான வரிசைகளைத் தேர்ந்தெடுத்து பேக் ஸ்பேஸ் கீ அழுத்தினால் வரிசைகள் நீக்கப்படும். டேட்டா முதற்கொண்டு அனைத்தும் அழிந்துவிடும்.
காலமும் நேரமும்:
நம் கையிலா காலமும் நேரமும் உள்ளது என்று சிலர் அலுத்துக் கொள்வார்கள். வெளியே எப்படியோ! வேர்டில் இவை நம் கைகளில் தான் இருக்கின்றன. எப்படி? எந்த வேர்ட் டாகுமெண்ட்டிலும் Alt + Shift + D அழுத்தினால் அன்றைய தேதி உடனை கர்சர் உள்ள இடத்தில் அமைக்கப்படும். Alt + Shift + T அழுத்தினால் அப்போதைய நேரம் அமைக்கப்படும்.
வேர்ட் டேபிள் டெக்ஸ்ட்:
வேர்ட் டாகுமெண்ட்களில், டேபிள்களை உருவாக்குகையில், சில செல்களில் எழுத்துக்களை வழக்கத்திற்கு மாறாக அமைக்க விரும்புவோம். எடுத்துக் காட்டாக, வழக்கமாக சொற்களை படுக்கை வரிசையில் அமைப்போம். மாறாக நெட்டு வரிசையில் எழுத்துக்களை அமைத்து, சொற்களை அமைக்க எண்ணுவோம். இந்த வகையிலும் அமைக்க வழி உள்ளது. அதனை இங்கு காணலாம்.
1. எந்த செல்லில் உள்ள சொல் அமைப்பை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த செல்லில் கர்சரைக் கொண்டு செல்லவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்குள்ள சொல் தவறாக டைப் செய்யப்பட்டிருந்தால், ஸ்பெல்லிங் தவறு இருந்தால், அதற்கான சரியான சொல் பட்டியலிடப்படும். இதை விலக்கி காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இப்போது காண்டெக்ஸ்ட் மெனு (Context Menu) கிடைக்கும்.
2. காண்டெக்ஸ்ட் மெனுவில் Text Direction என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்தால், டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் மூன்று வகைகளில் கட்டம் கிடைக்கும். படுக்கையாக, கீழிருந்து மேலாக மற்றும் மேலிருந்து கீழாக என இவை காட்டப்படும். எந்த பிரிவு உங்களுக்கு விருப்பமாக உள்ளதோ, அதனைத் தேர்ந்தெடுத்தால், அதேபோல டெக்ஸ்ட் அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கும் போது செல் நீளம் அதற்கேற்றபடி அமையும். பெரும்பாலும் நீட்டிக்கப்படலாம். எனவே இதனை ஏற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
3. அனைத்தும் உங்கள் விருப்பப்படி அமைந்து விட்டால், ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களிடம் வேர்ட் 2007க்கு முந்தைய தொகுப்பு இருந்தால், Tables and Borders  டூல் பார் மூலம் இதனை மேற்கொள்ளலாம். இந்த டூல்பாரில் Change Text Direction  என்ற பிரிவில் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் வகையில், கோணத்தில் இதனை அமைக்கலாம்.
வேர்ட் 2007 தொகுப்பினை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், ரிப்பன் லே அவுட் டேப் மூலம் இதனை மேற்கொள்ளலாம். ரிப்பனில் லே அவுட் டேப் தேர்ந்தெடுக்கப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும். இங்கு கிடைக்கும் Alignment குரூப்பில் உள்ள Text Direction  என்பதில் கிளிக் செய்து, இந்த மாற்றத்தை அமைக்கலாம். இங்கும் நாம் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை கிளிக் செய்து, பின் ஓகே கிளிக் செய்து செட் செய்திடலாம்.
கமெண்ட்ஸ் மொத்தமாக நீக்கம்:
சிலர் வேர்ட் டாகுமெண்ட்களில், நிறைய கமெண்ட்ஸ் அமைப்பார்கள். அதன் அடிப்படையில் திருத்தங்களை மேற்கொண்டு, மற்றவர்களுக்குக் காட்டுவார்கள். மொழி பெயர்ப்பு டாகுமெண்ட்கள், நிறுவனங்களில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட்கள், இந்த வகையில் அமைக்கப்படும். இறுதியில் இந்த கமெண்ட்களை நீக்க வேண்டும். ஒவ்வொன்றாகச் சென்று நீக்கலாம். ஆனால் டாகுமெண்ட் பெரிதாக இருந்தால், இது சற்று சிரமமான காரியம். இதற்கு வேர்ட் தொகுப்பு தரும் பைன்ட் அண்ட் ரீபிளேஸ் டூல் வழி தருகிறது.
1. டாகுமெண்ட்டைத் திறந்து கொண்டு பின்னர் கண்ட்ரோல் + எச்  (Ctrl+H) அழுத்தவும். இப்போது பைண்ட் அண்ட் ரீபிளேஸ் கட்டத்தில் ரீபிளேஸ் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டம் கிடைக்கும்.
2. இதில் Find What என்ற பாக்ஸில் சீச் என டைப் செய்திடவும். (இதில் உள்ள கேரட் (சீ) சிம்பல் எண் 6க்கான கீயை ஷிப்ட் உடன் அழுத்திப் பெறலாம்)
3. அடுத்து Replace With பாக்ஸ் காலியாக இருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
4. அடுத்து Replace With என்பதில் கிளிக் செய்தால், அனைத்து கமெண்ட்ளும் நீக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X