இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
00:00

பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு...
பள்ளி சீருடை அணிந்த மாணவனும், மாணவியும், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
பள்ளி ஆரம்பிக்கும் நேரம் தாண்டியும், அவர்கள் அங்கு நின்று பேசுவது, எனக்கு தவறாக பட்டது. அலுவலகம் சென்று கொண்டிருந்த நான், இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தி, கவனித்தேன்.
சிறிது நேரத்தில் கிளம்பி விட்டான், மாணவன். ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிருந்த இரண்டு ஆண்கள், அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர்.
சுதாரித்த நான், 'பாப்பா... இங்கே வா...' என்று சத்தமாக அழைத்தேன். உடனே, அந்த ஆட்கள், திரு திருவென்று விழித்து, அங்கிருந்து நழுவினர்.
அந்த மாணவியிடம் விசாரித்தேன்.
'தாமதமாக சென்றதால், பள்ளியிலிருந்து அனுப்பி விட்டனர். வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்... அதனால், பெரியம்மா வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறேன்...' என்றாள்.
வண்டியில் ஏற்றி, மாணவி கூறிய முகவரியில், இறக்கி விட்டேன்.
நேரம் தவறி பள்ளிக்கு வந்தால், பள்ளி மைதானத்தை இரண்டு சுற்று சுற்றி வர சொல்லலாம். மைதானத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய சொல்லலாம் அல்லது பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற சொல்லலாம்; உடலுக்கும், பள்ளிக்கும் நல்லது.
அதை விட்டு, வயது பெண்ணை, வீட்டுக்கு அனுப்புவது, ஏற்புடையதாக இல்லை. அவர்கள் தவறான வழியில் செல்ல, பள்ளி நிர்வாகமே வழிவகுத்து தருவது போல் உள்ளது, இந்த தண்டனை.
அதுமட்டுமல்ல, பெண் பிள்ளைகளுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளும், தொல்லைகளும் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாமல் இருக்காது. தனியார் பள்ளிகள் மட்டுமல்ல, அரசு பள்ளிகளும் இதையே பின்பற்றுவது, மிகவும் கொடுமையான விஷயம்.
மாணவ - மாணவியரின் நல்வாழ்வை மனதில் கொண்டு, அவர்களின் பாதுகாப்புக்கு ஏற்றவாறு, பள்ளி சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யலாமே...
பெற்றோரும், சரியான நேரத்திற்குள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது நல்லது.
எஸ். கல்பனா, சென்னை.

என்ன மனிதர்கள் இவர்கள்?
எங்கள் பகுதியில், சேர்த்து வைத்துள்ள குப்பைகளை, வீட்டிற்கே வந்து எடுத்துச் செல்லும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதற்காக, ஒவ்வொரு வீட்டிற்கும், மாதம், 30 ரூபாய் வசூலிக்கின்றனர். இதில், சில குடும்பங்கள் பிழைக்கின்றன.
சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு, எங்கள் தெருவில் உள்ள சில நபர்கள், அலுவலகம் செல்லும் நேரத்தில், வீட்டில் சேரும் குப்பைகளை ஒரு பையில் சேகரித்து, சாலை ஓரங்களில் எறிந்து செல்கின்றனர்.
இவர்கள் எறியும் குப்பைகளை யார் அப்புறப்படுத்துவர்...
30 ரூபாயை மிச்சம் பிடித்து, எதை சாதிக்க போகின்றனர்!
இவர்கள் செய்யும் செலவுகள் எல்லாம் நியாயமாகவும், அவசியமானதாகவும் உள்ளது என்று நினைக்கின்றனரா அல்லது வீட்டு குப்பையை, தானே சுமந்து செல்வது கவுரவம் என, நினைக்கின்றனரா!
- கீதானந்த், சென்னை.

சினிமா பாட்டுக்கு, ஆட விட்டுடாதீங்க...
இஸ்லாமிய நண்பர் ஒருவர், சொந்த தொழில் செய்கிறார். அவரது சிறு வயது மகனுக்கு, ஆடல், பாடல் உள்ளிட்டவற்றில் திறமை உள்ளது.
அதை வெளிக்கொணர, பள்ளி ஆசிரியையிடம், 'மகனின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு விழா போன்றவற்றில் வாய்ப்பு கொடுங்க... ஆனா, சினிமா பாட்டுக்கு மட்டும் ஆட விட்டுடாதீங்க...' என, வேண்டுகோள் வைத்தார்.
ஆசிரியை காரணம் கேட்டதற்கு, 'சின்ன வயசுலேயே, பசங்களை, சினிமா பாட்டுக்கு ஆடுறதுக்கு பழக்கி விட்டுடுறோம். இது ஒரு விதத்துல, அவங்களுக்கு, சினிமா மேல ஆர்வம் ஏற்படுத்தி விடுகிறது. வளர்ந்ததும், யாரோ ஒரு நடிகரின் ரசிகனாகி, 'கட் - அவுட்' வெச்சு, பாலாபிஷேகம் பண்றப்போ, தப்புன்னு குதிக்கிறோம்...
'ஆடல், பாடல்ங்கிற கலையை, கலையா பார்க்கற பக்குவம் எங்களுக்கும் இருக்கு. எவ்வளவோ தமிழ் மற்றும் நாட்டுப்புற பாடல்கள், கிராமிய கலைகள், முருகன், சிவன், அல்லா மற்றும் இயேசு பாடல்கள்ன்னு, எதுக்கு வேணாலும் என் மகன் ஆடட்டும்...' என்று, கூறியுள்ளார்.
நண்பர் கூறியதை கேட்டு ஆச்சரியப்பட்டு, 'உங்களின் கோரிக்கையை ஏற்கிறேன். மத வேறுபாடு பார்க்காத குணத்தையும் பாராட்டுகிறேன்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
இவ்விஷயத்தை நண்பர் சொன்னதும், எனக்கு பெருமையாக இருந்தது.
- சு. கணேஷ்குமார், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
13-ஆக-201918:54:16 IST Report Abuse
LAX "சினிமா பாட்டுக்கு, ஆட விட்டுடாதீங்க...." - சூப்பர் Parents.. இதே மாதிரி ஒவ்வொருவரும் நடந்துக்கிட்டாதான் இனி வரும் சந்ததிக்கு 'ஒழுக்கம்' னா என்னனு தெரியவரும்.. இதில் வீண் வாதம் - விதண்டாவாதம் தேவையில்லை..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
13-ஆக-201918:50:36 IST Report Abuse
LAX 2) சுத்தம், வசதி வாய்ப்புகள் என அனைத்துத் திட்டங்களுக்கும் பொது மக்களின் Co-Operation அவசியம்.. அதையெல்லாம் செய்யாமல், எதற்கெடுத்தாலும் சும்மா அரசாங்கத்தை மட்டுமே குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கறது வீண்..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
13-ஆக-201918:46:44 IST Report Abuse
LAX 1) எந்த விஷயமா இருந்தாலும் Parents 2 பேருக்கும் (2 பேரும் இருக்கும் பட்சத்தில்) தெரிவிப்பதே நல்லது.. ஒரு வேளை மாணவி காலையில் 'Special Class' என்று சொல்லி விட்டு வீட்டிலிருந்து சீக்கிறமே கிளம்பி, வெளியில் சுற்றிவிட்டு, School க்கு late ஆ வந்திருக்கவும் வாய்ப்பிருக்கு.. உண்மையாக parents delay பண்ணினதால, School க்கு late ஆ வந்திருந்தா.. தைரியமா வீட்டுக்கு திரும்பி போய் Parents கிட்ட கோச்சுக்கிட்டு, சீக்கிறமா கிளப்பி விடச் சொல்லி சண்டை போடலாமே..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X