உழைப்புக்கு கிடைத்த வெகு'மதி'!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
00:00

'வரலாறு முக்கியம் அமைச்சரே...' என்று, ஒரு படத்தில், வடிவேலு சொல்லும் வசனத்தை நம்மில் பலர் நித்தம், பயன்படுத்துவதைக் கேட்கலாம்.
இன்றைய, 'டிக் டாக், வாட்ஸ் - ஆப்' செயலிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நம் வரலாற்றை அறிய முனைப்பு காட்டுவதில்லை.
ஓட்டப்பந்தயம் போல், ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு மத்தியில், 'அட... இப்படியும் ஒரு நபரா...' என்று புருவம் உயர்த்த வைக்கிறார், நீலகிரி மாவட்டம், ஊட்டி, காந்தள் பகுதியை சேர்ந்த, மதிமாறன்.
புகைப்படக் கலைஞரான இவர், 12 ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும், பண்டைய பழங்குடி மக்களான, தோடர், இருளர், குரும்பர், கோத்தர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர்களின் வாழ்க்கை முறைகளை புகைப்படமாக எடுத்துள்ளார். மேலும், அவர்களது, கலை, பண்பாடு, விழாக்களை, புகைப்படம் மற்றும் பதிவுகளாக சேகரித்து வைத்துள்ளார்.
அரிய வகை புகைப்படங்களை, பழங்குடி ஆராய்ச்சி மையம், இவரிடம் கேட்டு பெற்றிருப்பது, கூடுதல் சிறப்பு.
தான் மட்டும் அறிந்து கொண்டால் போதாது... மற்றவர்களுக்கும், இவர்களின் வாழ்க்கை முறை தெரிய வேண்டும் என்பதற்காக, பள்ளி, கல்லுாரி மற்றும் முக்கிய விழாக்களில் காட்சிப்படுத்தி வருகிறார். இதுவரை, தன் சொந்த செலவில், நீலகிரியில் இருந்து சென்னை வரை, 6,001 கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
'இவர்களிடம் எது கவர்ந்தது...' என்று, மதியிடம் கேட்டபோது, 'பண்டைய பழங்குடி மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வு தான்...' என்றார்.
மேலும், மதிமாறன் கூறுகையில், 'பழங்குடி மக்கள், இயற்கையை காயப்படுத்து வதில்லை. நதி, மரம், பூ மற்றும் பறவை ஆகியவற்றின் பெயரை, தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுகின்றனர். இவர்கள் வைத்திருக்கும், ஒவ்வொரு எருமைக்கும், ஒரு பெயர் இருக்கும்.
'பழங்குடி மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில், பலர் ஆர்வம் காட்டுவதில்லை. இதை வெளிக்கொணர முயற்சி எடுத்து, தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறேன்.
'புகைப்பட கலைஞராக சம்பாதிக்கும் ஊதியத்தில், ஒரு பங்கை, கண்காட்சிக்கு செலவிடுகிறேன். 'இதெல்லாம் வேண்டாத வேலை...' என்று, என் காதுபடவே பலர் பேசி, அவமானப்படுத்தி இருக்கின்றனர்.
'இந்த பேச்சுகள் தான், இன்னமும், என்னை ஊக்கப்படுத்துகிறது. மிகப்பெரிய வரலாற்றை, ஒரு புகைப்படம் சொல்லி விடும். கடந்த கால, பல நினைவுகள் இதை உணர்த்தி இருக்கின்றன. அதனால் தான், புகைப்படமாக பதிவு செய்து, கண்காட்சி நடத்துகிறேன். வேலைக்கு செல்லும், மனைவியும், என் பணிக்காக, ஒரு சிறு தொகையை கொடுத்து உதவுகிறார்...' என்றார்.

ரா. வினோத்குமார்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஆக-201903:17:47 IST Report Abuse
skv srinivasankrishnaveni வாவ் வெரி பெஸ்ட் சார் , நம்ம குடும்பங்களிலேயே எவ்ளோ பெருக்கு தன் முன்னோர்களின் பெயராவது தெரிஞ்சுருக்கும் , இந்தக்கால பசங்களுக்கு சினிமாகாராலின் வாழ்க்கை வரலாறும் கிரிக்கெட் வீரர்களின் லைப் ஹிஸ்டோரியும் தெரியும் ஆனால் தாய்வழி உறவுகளோ தந்தைவழிஉறவுகளோ தெரியாது தெரிஞ்சுக்கும் ஆர்வம் கிடையாது அன்று நம்ம திருமணங்களில் வயசுலே பெரியவா எல்லோருக்கும் பாத பூஜை செய்தாங்க நானே பாத்துருக்கேன் என் குடும்பங்களில் இப்போதும்கூட கண்ணா தெலுங்கா மராட்டியர் இந்த வழக்கம் பின்பற்றுகிறாங்க தமிழ்நாட்டுலே சாஸ்திரம் ஸம்ப்ரதாயமெல்லாம் குப்பைக்கலாமா எல்லா கெட்டவழக்கம்களும் செய்யும் கட்ச்சிக்கார தலைவனை வச்சுண்டு திருமணம் நடத்துறானுக எவ்ளோ திருமணம் வெற்றி தெரியுமா? தானாவே பண்ணிக்கும் திருமணங்களும் அப்படியேதான் போவுது பெரிய தனக்காரன் வீட்டுப்பொண்ணு கண்டவனையும் கட்டிண்டு திரும்பிவரதுங்க சிலதுகளை கட்டிண்டவென் ப்ராத்தல்லே விற்றுவிடுகிறான் அரசியவியாதி நடத்தும் திருமணங்களில் பலகாசமுசாக்கள் இருக்கு , ஒருகாலத்தில் ஒரு சமூகத்துபொண்ணுகளை தாங்க அனுபவிச்ச பிறகே அவளை தன் கணவனுடன் வாழ வச்சானுக பல உயர் சாதி கஸ்மாலங்கள் (பொதுக்கித்தனமான செயல் )அந்தக்கொடூரத்தை தொடரவே விடாமல் செய்தவர் ஒரு பெரியவர் ஐயா என்று அவரை தொழுறாங்க பொண்ணுன்னா என்னடா ஆண்களுக்கெல்லாம் அவ்ளோகேவலமா வெட்கமே இல்லாதவர்களே தான் அந்த பெரிய மனுஷ ஜந்துகள் எல்லோருமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X