அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2019
00:00

அன்பு சகோதரிக்கு —
நான், 46 வயது பெண். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்துள்ளேன். என் கணவரின் வயது, 50. அரசு பணியில், உயர் அதிகாரியாக இருக்கிறார்.
திருமணம் ஆன நாள் முதல், என்னை, ஒரு பெண்ணாகவோ, மனைவியாகவோ, தோழியாகவோ நடத்தியதே இல்லை. அவரை பொறுத்தவரை, நான் சம்பளமில்லாத வேலைக்காரி; அவ்வளவே. மாமியார் - மாமனார், கணவரது சகோதரர் வீட்டில் வசிக்கின்றனர்.
எங்களுக்கு ஒரு மகள். கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.
திருமணமான புதிதில், வீட்டுக்கு வரும் உறவினர்கள் முதல், பால்காரர், மளிகை கடைக்காரர் வரை, எந்த ஆண்களிடம், சாதாரணமாக பேசினாலும் கூட, அவர்களுடன் சம்பந்தப்படுத்தி, அசிங்கமாக, சத்தமாக பேசுவார்.
அக்கம்பக்கத்தினர் காதில் விழுந்தால், மானம் போகும் என்று, மறு பேச்சு பேசாமல், அடங்கி போனேன். இது, அவருக்கு சாதகமாகி போனது. தொடர்ந்து, வார்த்தைகளால் என்னை சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்.
சமீபத்தில், அவர், புது மொபைல் போன் வாங்கவே, பழைய போனை என்னிடம் கொடுத்தார். அதில், எப்படி பாடல்கள் கேட்பது என்று, மகளிடம் கற்றுக்கொண்டேன்.
ஒருநாள், பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது, நடுவே, சில பெண்களுடன் நெருக்கமாக, என் கணவர் பேசிய உரையாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. அதைக் கேட்க கேட்க, உடலும், உள்ளமும் துடித்துப் போனது.
ஏற்கனவே, வாழ்க்கையில் சந்தோஷத்தையே அறியாத எனக்கு, இவ்வுரையாடல், பேரதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
அவர், வீடு திரும்பியதும், இது பற்றி கேட்டேன்.
'சரி... சரி... அதையெல்லாம் அழிக்க மறந்து, உன்னிடம் கொடுத்து விட்டேன் போலிருக்கு... அதனால் என்ன இப்ப... உன்னால் என்ன செய்ய முடியுமோ, செஞ்சுக்க...' என்று, ஆணவமாக பேசினார்.
மகளுக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டுமே என்று, அப்போதும் அடங்கிப் போனேன்.
அவரிடம் அன்பு தான் கிடைக்கவில்லை; சுயமரியாதையும் போய், அடிப்படை உரிமை கூட கிடைக்காமல், இதென்ன வாழ்க்கை என்று தோன்றுகிறது.
மகளின் திருமணத்திற்கு பின், அவரை விட்டு போய்விட வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். எனக்கு, அப்பா இல்லை; அம்மா மட்டும் கிராமத்தில், தம்பியுடன் வசிக்கிறார்.
வெளி உலகமே தெரியாமல், என்னை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருந்ததால், தனியாக என்னால் மீதி காலத்தை ஓட்ட முடியுமா என்ற தயக்கமும் உள்ளது.
எனக்கு, நல்ல வழி காட்டுங்கள்.
இப்படிக்கு,
சகோதரி.


அன்பு சகோதரி —
உன் கணவரின் நம்பிக்கை துரோகத்துக்கு, கீழ்கண்டவை காரணங்களாக இருக்கக்கூடும்.
* குறைந்தபட்சம், ஒரு இளங்கலை பட்டப் படிப்போ, அதிகபட்சம் ஒரு முதுகலை பட்டப் படிப்போ படிக்கவில்லை நீ
* தட்டிக்கேட்க இயலாத, வயதான மாமியார். அக்காளின் வாழ்க்கையில், தலையிட விரும்பாத, மைத்துனன்
* உயர் பதவி, கை நிறைய சம்பளம் வாங்கும் ஆணாதிக்க மனோபாவம் கொண்ட எல்லா ஆண்களும், திருமண பந்தம் மீறிய உறவுகளில் அதிகம் ஈடுபடுவர்; உன் கணவர் உட்பட
* உனக்கு, மகள் இருப்பதற்கு பதில், மகன் இருந்திருந்தால், தந்தையின் துர்நடத்தையை தட்டிக் கேட்டிருப்பான். எப்போது தப்பு செய்தாலும், மகள்கள், அப்பா பக்கம் தான் நிற்பர். காரணம், மரபியல் ஈர்ப்பு.
மகளின் திருமணத்திற்கு பின், கணவரை விட்டு பிரிந்து, எங்கு செல்லப் போகிறாய்... திருமணமான மகள்கள், அவரவர் அம்மாக்களை, ஆயா வேலை செய்ய வைக்கவே விரும்புகின்றனர். மீதி ஆயுளுக்கும், உன்னை வைத்து எப்படி பராமரிப்பாள்...
அவள் விரும்பினாலும், மருமகன் ஒத்துக்கொள்ள வேண்டுமே... பொருளாதார நிலையில் நலிந்து, கிராமத்தில் வசிக்கும் அம்மா, உன்னை வைத்துக் கொள்வாளா... தம்பி, உன்னை வைத்துக் கொள்வானா... அவன் ஒத்துக்கொண்டாலும், அவன் மனைவி ஏற்றுக் கொள்வாளா... யாருமே ஆதரிக்க வாய்ப்பிருக்காத போது, எங்கு போய் நிற்பாய்?
வீட்டை விட்டு வெளியேறுவதோ, கணவரை சட்டப்படி விவாகரத்து செய்வதோ, உனக்கு சரி வராது. வீட்டுக்குள்ளேயே ஒத்துழையாமை இயக்கம் நடத்து; கலகம் செய். கணவருக்கு எதிராக, அகிம்சாவழி போராட்டங்களை ஆரம்பி, கணவருடன் பேசாதே...
'திருமண பந்தம் மீறிய உறவுகளை, நீ துண்டித்துக் கொள்ளாவிட்டால், வீட்டில் சமைக்க மாட்டேன்...' என, அடம்பிடி.
'நான் வேலைக்காரி அல்ல. எனக்கும் சுயமரியாதையும், தன்மானமும் உண்டு. என் அடிப்படை உரிமைகளில் கை வைக்காதே. உன் துர்நடத்தையை தொடர்ந்தால், அலுவலகத்திற்கு வந்து புகார் செய்வதோடு, என்னை அடித்து துன்புறுத்துவதாக, காவல் நிலையத்திலும் புகார் செய்வேன். தினம் இரவு, உன் கைபேசியை சோதித்து பார்ப்பேன். திருத்திக் கொள்ளாவிட்டால், இனி, உனக்கு வீடு, நரகம் தான்...' என, உள்நாட்டு போர் பிரகடனம் செய்.
கல்நெஞ்சக்காரர்கள் கூட, அகிம்சாவழி போராட்டங்களில் நிலைகுலைந்து போவர். மனைவி ஒரு வாயில்லா பூச்சி என்ற, உன் கணவரின் அபிப்ராயத்தில் மண் விழும்.
கணவருடன், ஆயுதம் தரிக்காத போராட்டத்தை நடத்தியபடியே, மகளின் திருமணத்திற்கு முன், தொலைதுார கல்வி இயக்கம் மூலம், இளங்கலை பட்டப் படிப்பை முடி.
உன்னிடமுள்ள நகைகளில் ஒரு பகுதியை விற்று, 'ஜெராக்ஸ்' கடையோ, கைபேசி, 'ரீசார்ஜ்' கூப்பன்கள் விற்கும் கடையோ நடத்து.
வீட்டு வேலைகளை முடித்து, கடையை திற. உனக்கென தனியாக வங்கி கணக்கு ஆரம்பி. ஆதார், வாக்காளர் அட்டை, இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஏ.டி.எம்., அட்டை முதலியவற்றை, உன் பாதுகாப்பில் வை.
அகிம்சா வழி போராட்டங்கள் பயனளிக்கா விட்டால், சொந்த காலில் நிற்கும் வேலையை, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்துவிட்ட தைரியத்தில் இருக்கலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு சகோதரி.
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
12-ஆக-201916:21:20 IST Report Abuse
Girija @வழிப்போக்கன் - வாலறுந்த நரிகளுக்கு மட்டும் அம்மாவாசை அன்று நிலா தெரியும் என்று வாலறுந்த நரி பிற நரிகளை இனிமேலும் ஏமாற்ற முடியாது. இந்த பதில் உங்களை பொறுத்தவரை உங்களது MRI ஸ்கேன். புரிந்திருக்கும் என்று நினைக்கிறன் பறக்கவிட்டதை இன்று இனிமேல் பிடிக்க முடியாது, என்ன தான் படிக்கிறேன் கிடிக்கிறேன் என்று எழுதி வயதை மறைத்தாலும் குழப்பினாலும். சொந்த ஊருக்கே டூரிஸ்ட் விசாவில் மட்டும் வந்து செல்ல சொந்தங்கள் அனுமதிக்கிறது.
Rate this:
Share this comment
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
14-ஆக-201920:05:44 IST Report Abuse
HoustonRajaதனி மனித தாக்குதல்களால், உங்களின் கருத்து பலவீனமாகும்.. உங்களின் கருத்துகளை மேலும் உரக்கவும், ஒருவரின் கருத்திற்கு மறுப்பினை அழுத்தியும் தெரிவிக்கலாமேயன்றி, அதே வேகத்தில்/கோபத்தில் மற்ற வாசகர்களை தரம்தாழ்த்துவது சபை அழகன்று.. நன்றி......
Rate this:
Share this comment
Girija - Chennai,இந்தியா
15-ஆக-201922:26:34 IST Report Abuse
Girija@HoustonRaja - houston,யூ.எஸ்.ஏ - உங்கள் கருத்துதான் எனக்கும். நாலு பேருக்கு பண்பான, ஆரோக்கியமான, ஆறுதலான, கருத்துக்கள் பாராட்டுக்களை தெரிவிப்பதற்கு தான் இங்கு பதிவு செய்வேன். அதன் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடர்ந்த ஜோசப் வழிப்போக்கிகளுக்கு தான் அவர்கள் பாணியில் பதில் கூறுவேன், மற்ற சிலரின் அர்த்தமற்ற பதில் பதிவுகளை இக்னோர் செய்வது என் வழக்கம்....
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
12-ஆக-201909:03:37 IST Report Abuse
Vijay சகுந்தலா கோபிநாத் அவர்களே ,, ( திருமணமான மகள்கள், அவரவர் அம்மாக்களை, ஆயா வேலை செய்ய வைக்கவே விரும்புகின்றனர்.) இந்த மாதிரி உண்மைகளை பேசினால் நம்ம பெண் வாசகர் கண்மணிகள் கோசிப்பாங்க ..
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-ஆக-201903:06:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni பலபெண்கள் அன்று அதிகம்படிக்கமுடியலீங்க காரணம் 1வசதி இல்லே 2பொண்ணு பட்டம் பெற்றால் அவளைவிட படிச்சவனா பார்க்கணும் அதிகம் சிலவு ஆவும் ,3பிள்ளைக்கு கல்வித்தந்தால் வீட்டுக்கு உதவுவானாம் திருமணம் ஆனதுதானிக்குடித்தனம் போயிருவான் இது இன்று நடக்கும் ஒன்று(இப்போதெல்லாம் பாரினுக்கு போயிற்றானுக ) ஒரேபொன்னோ ஒன்பதுபொன்னோ பெற்றவா தன கடமைக்கு SSLC /மெட்ரிக் பாஸ்பண்ணதும் வரன் தேடி திருமணம் செய்துவைப்பா , 90 %ஓகே ஆயிடும் பொண்ணுகள் விட்டுக்கொடுத்து போறதால சிலது அவஸ்தைப்படும் இந்த ராகங்கள் எதுடனும் ஓட்டாமல் விட்டேத்தியா வாழ்ந்து முடிப்பாங்க சிலர் திருந்தவே திருந்தாத கணவனிடம் மாட்டிண்டு காலமெல்லாம் கண்ராவியே என்று வாழ்ந்துமுடிப்பாங்க (இந்தபொண்ணுகள் செத்தாதான் அவ புருசனுக்கு அறிவு வரும் ,) அப்பாவின் மகளே ஆனாலும் அவர் கண்டவள் பின்னாபோயிட்டு தன அம்மாவாய் உதாசீனம் செய்ததால் கண்டுக்காமல் போயிடுதுங்க அவளுக்கும் அவகுடும்பம் குழந்தைகள் என்று பாரம் இருக்கே . ஒரு இன்சிடென்ட் ஒரு தோழியின் கணவர் இப்படியேதான் PP (பொம்பளெபொறுக்கி)அவன் பெண்ணுக்குதிருமணம் ஆச்சு அவனுடைய ஒரு கன்ராவி அவனுக்குமுன்னாள் கீப் அவள் தான் அவன் மக்களுக்கு புக்ககதது ஆத்தைரெண்டும் திருமணத்தப்போ ஒன்னையொன்னுபார்த்து முழிச்சதுங்க அவள் ஒதுங்கிட்டா கண்டுக்காமல் போயிட்டா சொந்த அண்ணா ப்பிள்ளையைகட்டிக்கப்போறபொண்ணுன்னு . பொன்னின் அப்பா க்கு ஒரே குழப்பம் , அவன் திருமணம் முடிஞ்சதும் பொண்ணு வீட்டுக்கேபோறது நிறுத்திட்டான் குற்ற உணர்ச்சி , அவன் மனைவி தன்கணவனை திருத்தவேமுடியாது என்று சோகத்துலே ஹார்ட்லே ப்ராப்லம் வந்து செத்துட்டா அந்த தோழி அவனோ இன்று இருப்பது ஒருமுதியோர் இல்லமலே பொண்ணுக்கு பிறந்தகத்து ஆதரவே இல்லே ஆனால் புக்ககம் நன்னாயிருக்கு பொறுமையான அந்தப்பொண்ணும் பிளக்ஸிபிளா இங்லாஸ்கூட கணவனிடம் அன்பாகவே இருக்கா ஆனால் அந்த அத்தை மட்டும் பயந்துண்டு அதிகமா வராதே இல்லே ஒரே தெருவுளுஇருக்கோம் தெரியாதவை உண்டா பேசினால் வம்பு என்பார்கள் , நமக்கென்ன என்று ஒதுங்கிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X