குருபார்வை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
00:00

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தால் எங்கு வேலைகள் கிடைக்கும்?
அன்பு, சென்னை

பொதுவாக இந்தப் படிப்பை முடிப்பவருக்கான வேலைகள் ஏவியேஷன் துறையில் கிடைக்கும். வெளிநாடுகளிலும் வேலை பெறலாம். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முடிக்கும் ஒருவருக்கான வேலை என்பது வெறும் தகுதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டது கிடையாது. அவரது டொமைன் திறன், சிறப்பான பகுத்தாராயும் திறன், மென் திறன்கள் ஆகியவற்றையும் பொறுத்தே வேலை பெற முடிகிறது. ஏர் இந்தியா போன்ற விமான சேவை நிறுவனங்கள், எச். ஏ. எல், ஏன்.ஏ.எல்., போன்ற சிவில் ஏவியேஷன் நிறுவனங்கள், இந்திய விமானப் படை மற்றும் சிவில் ஏவியேஷன் தொடர்பான எந்த ஒரு நிறுவனத்திலும் உங்கள் படிப்போடு தொடர்புடைய வேலைகள் கிடைக்கின்றன. நம்பிக்கையோடு அது தொடர்பான படிப்பில் சேர்க்கலாம்.

எஸ். எஸ். சி. , சி. ஜி. எல். மற்றும் வங்கி பி.ஓ. தேர்வுகளுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?
கணேஷ் மூர்த்தி, கோவை

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எஸ். எஸ். சி. , சி. ஜி. எல். தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? மறக்காமல் விண்ணப்பிக்கவும். உங்கள் கேள்விக்கான பதில் இதோ.....
பொதுவாக இந்த 2 தேர்வுகளுக்குமான பாடத் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில அடிப்படையான வித்தியாசங்களை மட்டும் காண்போம்.
*எஸ். எஸ். சி. தேர்வில் இடம் பெரும் பொது அறிவுப் பகுதியில் நடப்புச் செய்திகள் மட்டுமல்லாது ஸ்டாடிக் ஜி. கே எனப்படும் மாறாத பொது அறிவு கேள்விகளும் இடம்பெறுகின்றன. ஆனால் பி ஓ தேர்வில் வங்கிதுறை சார்ந்த நடப்புச் செய்திகள் இடம்பெறுகின்றன.
* எஸ்.எஸ்.சி., தேர்வின் கணிதப் பகுதியில் நீங்கள் அனைத்து பிரிவுகளில் இருந்தும் கேள்விகளை எதிர்பார்க்கலாம். ஆனால் பி. ஓ., தேர்வில் டாட்டா இன்டர்ப்ரிடேஷனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.
*சமூக பொருளாதார அடிப்படை களை கொண்ட கேள்விகளை பி.ஓ. பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கலாம். ஆனால் எஸ்.எஸ்.சி., தேர்வுக்கு இது தேவைப்படுவதில்லை.
* எஸ்.எஸ்.சி., தேர்வை விட பி.ஓ. தேர்வில் ஆங்கில கேள்விகளின் தரம் கடினமாக இருக்கின்றன.
எஸ்.எஸ்.சி., கணிதப் பகுதிக்கு நீங்கள் TRIGNOMETRY பகுதியில் அடிப்படைகளை அறிந்து தெரிந்து கொள்வது அவசியம். பி.ஓ. தேர்வில் இது அவசியம் இல்லை.
* பி.ஓ. தேர்வின் ஆங்கில பகுதியில் இலக்கணத்தை விட பிற பகுதிகளான ரீடிங் கம்ப்ரெஹென்ஷன், சென்டன்ஸ் அரேஞ்சிங் போன்றவற்றில் கேள்விகள் இடம்பெறுகின்றன. எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல். தேர்வில் அடிப்படையில் இலக்கணமே முக்கியத்துவம் பெறுகிறது.
* எஸ்.எஸ்.சி,தேர்வில் இடம் பெரும் ரீசனிங் கேள்விகள் ஒப்பீட்டளவில் சற்று எளிதானவை. பி.ஓ. தேர்வில் நீங்கள் அதிகம் இதில் பயிற்சி செய்ய வேண்டும்.

உலகின் தலைசிறந்த 10 மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களைக் கூறலாமா?
லட்சுமணன், மதுரை

இந்தியாவில் தற்போது கிடைக்கும் கல்வியின் தரத்தை பன்னாட்டு நிறுவனங்களோடு ஒப்பிடும் போது அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை அறிவீர்கள் அல்லவா? உங்களது நோக்கம் வெளிநாட்டுக் கல்வி உயர்வு என்ற அடிப்படையில் என்றால் அதை மாற்றிக் கொள்ளவும். ஆனால் அடிப்படையில் உங்களது நோக்கம் வெளிநாட்டுக் கல்வியை பெற வேண்டும் என்ற அடிப்படையிலான வெகு நாள் ஆசை என்றால் உங்களுக்காக உலகின் தலை சிறந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களை இங்கே பட்டியல் இடுகிறோம்.
மசாசுசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
ஸ்டான்போர்ட் பல்கலைகழகம்
யுனிவர்சிடி ஆப் கலிபோர்னியா
யுனிவர்சிடி ஆப் கேம்பிரிட்ஜ்
கல்போர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
இம்பீரியல் காலேஜ் லண்டன்
யுனிவர்சிட்டி ஆப் டோக்கியோ
சுவிஸ் பெடரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
யுனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட்
நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்

பிளஸ் 2 முடித்த பின் இந்திய தரைப்படையில் பெண்கள் நேரடியாக அதிகாரியாக சேர முடியுமா?
வனிதா, விழுப்புரம்

இந்திய விமானப் படையிலோ தரைப்படயிலோ பெண்கள் நேரடியாக பெண்கள் பிளஸ் 2 வுக்குப் பின் நேரடியாக அதிகாரியாக சேர முடியாது. இந்திய தரைப் படையில் நடத்தப் படும் பின் வரும் தேர்வுகளில் ஒன்றில் தகுதி பெற்றால் பட்டப் படிப்பின் பின் பெண்கள் அதிகாரியாக சேரலாம்.
சி.டி.எஸ்., எனப்படும் Combined Defence Services தேர்வு மூலமாக பெண்கள் தரைப்படையில் அதிகாரியாக சேர முடியும். 19-25 வயது தகுதி.
பட்டப் படிப்பு ஒன்றில் வெற்றி பெற்றிருப்பதும் அவசியம். ஆண்டுக்கு இரண்டு தடவை இந்தத் தேர்வு நடத்தப் படுகிறது. இது Short Service Commission Non Technical Women என்று அழைக்கப்படுகிறது.
இன்ஜினியரிங் பட்டப் படிப்பு தகுதி பெற்றிருப்பவர்களுக்கு நடத்தப்படும் தேர்வானது Short Service Commission Technical Women என்று அழைக்கப் படுகிறது. டிசம்பர்/ஜனவரி மற்றும் ஜூன்/ஜூலை மாதங்களில் இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. 25 வயது தகுதி.
என்.சி.சி. சி சான்றிதழ் பெற்றிருப்பவருக்கான தேர்வு NCC (SPL) Entry Women என்று அழைக்கப்படுகிறது. எல்.எல்.பி., தகுதி பெற்றிருப்பவர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு தடவை நடத்தப்படுகிறது. முழு விபரங்களையும் http://indianarmy.gov.in/ என்னும் இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X