நலம் தரும் கசப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
00:00

தலைமுறைகளுக்கும் பயன் தரும் தாவரம், வேப்ப மரம். இது தெற்காசியாவை தாயகமாக கொண்டது; இதன் அறிவியல் பெயர், அஸாடிராக்டா இன்டிகா. மிலியேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. கடும் வெப்பத்தை தாங்கும்; வறட்சியிலும் வளமாக வளரும்.
இலையுதிர்ந்த உடனே, புது தளிர் புத்துணர்ச்சியுடன் வளரும். மார்ச், ஏப்ரல் மாதங்களில், நறுமணத்துடன் பூத்துக் குலுங்கும். காய், பச்சை நிறத்திலும், பழம், மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
இலை, இறகு வடிவமானது; பல சிற்றிலைகள், தொகுப்பாக ஒரு காம்பில் இணைந்திருக்கும். இதற்குள் வளரும் காம்புகளில், பூங்கொத்து, தொகுப்புகளாக அமையும்.
வெண்மை நிறமான, மிகச்சிறிய பூக்களை, தேனீக்கள் மொய்க்கும்.
வேப்பம் பூவில் வடகம், பச்சடி, ரசம் செய்யலாம்; மிக சுவையாக இருக்கும்.
வேப்ப இலை, தீமை செய்யும் கிருமிகளை தடுக்கும். வேப்பெண்ணெய், பயிர்களை பாதுகாக்கும்; பயிர் பாதுகாப்பு ரசாயனங்களில், ஒட்டு பொருளாக பயன்படும்.
* வயிற்றில் கிருமியால் அவதிப்படுவோர், வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிடலாம்
* வேப்பம் பூவை உலர்த்தி, பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து, உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், தோல் வியாதிகள் நீங்கும். பொடியை, தணலில் போட்டு, வீடு முழுக்க புகை பரவ விட்டால், விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைப்பூச்சி தொல்லை ஒழியும்
* வேப்ப இலைகளை நீரில் போட்டு, ஒரு மணி நேரத்திற்கு பின் குளித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும்.
வேப்பிலை படுக்கை, புத்துணர்ச்சி தரும். ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமாக வாழலாம். வருங்கால தலைமுறைக்கும் பயன்தரும்.
- வளர்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-ஆக-201914:14:45 IST Report Abuse
skv srinivasankrishnaveni வேப்பம்பூ காயவெச்சு வச்சுண்டால் எப்போது வயிற்றுப்போக்கோ டிசென்றியோ வந்தால் சூடான சாதம்லே நெய்யில் வெப்பம் பூவை வறுத்து சிறிது உப்பும் சேர்த்து பிசைஞ்சு சாப்பிட்டால் கடுமையான வயத்துப்போக்கு உடனே நிற்கும் வெப்பம் பூ ஒரு கப் காஞ்சது ரெண்டு ஸ்பூன் தனியா ஒருகைப்பிடி சுண்டைக்காய் வற்றல் மிளகு ஒரு ஸ்பூன் ஜீரகம் ஒருஸ்பூன் வெறும்கடாயில் வறுத்து மிக்சிலே உப்பு போட்டு அரைச்சுவச்சுண்டு வாரம் ஒருநாள் இந்தபொடியே பிசைந்து சாப்பிட்டால் வயறு காசிபிராப்லம் வராது வயறு அவ்ளோ சுகமாயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X