இளஸ் மனஸ்! (8)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
00:00

அன்பு சகோதரி மெடோசுக்கு...
என் பிரச்னையை, உங்களால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
என் மகன், 10ம் வகுப்பில், 308 மதிப்பெண் பெற்றான்; பிளஸ் 1 படிக்கிறான். குழந்தை பருவத்திலிருந்தே, பயங்கர சேட்டை செய்வான். இப்போது, ஒழுங்காக படிப்பதில்லை. பாடங்களை கவனிக்காமல் மற்ற மாணவர்களுடன், பேசியபடி இருப்பதாக, வகுப்பு ஆசிரியர் புகார் கூறுகிறார்.
வகுப்பை கவனித்து படிக்க அறிவுரை சொன்னால், என்னையும், என் கணவரையும் அதட்டி, அடிக்க வருகிறான். அவனுக்கு, நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். அவனால், மன நிம்மதி இழந்து தவிக்கிறோம்; திருத்த, நல்ல வழி சொல்லம்மா!

அன்பு சகோதரிக்கு!
நன்றாக படித்து வந்த உன் மகன், கல்வியில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அவன் நடத்தைகளில் மாற்றம் தெரிகிறதா என்பதை உற்று கவனி; அவனுக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரி. அவன் கவனத்தை சிதறடிக்கும் விஷயத்தை அறிந்து, அதற்கான தீர்வை கையில் எடு.
இந்த காலத்து பசங்க, குடும்பத்தினர், நண்பர்களிடம் பேசுவதை விட, சமூக வலைதளங்களில், முகம் தெரியாத நபர்களிடம் தான் நட்பு கொள்ளவே விரும்புகின்றனர். அதில் ஒரு, 'த்ரில்' கிடைப்பதாக எண்ணுகின்றனர்.
பெற்றோர், நண்பர்களிடம் நேரடியாக கூற முடியாதவற்றை, முகமறியா, மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து, ஆறுதல் தேட முனைகின்றனர். இதனால், ஆபத்து வர வாய்ப்புள்ளது என்பதை உணருவதில்லை.
பெற்றோரின் ஆதரவும், அரவணைப்பும் தான், என்றும் நிரந்தரம் என்பது புரிவதில்லை; அறிவுரை சொன்னால் வேப்பங்காயாக கசக்கிறது. இவற்றை மாற்ற வேண்டும்.
மகனிடம் தோழமை உணர்வுடன் பழகு; கல்வியின் முக்கியத்துவத்தை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துச் சொல். இப்போது கஷ்டப்பட்டு படித்தால், பிற்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பதை, பக்குவமாக சொல்.
உற்றார், உறவினர் மத்தியில், மதிப்புடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்து; கண்டிப்பான, சுடு சொற்களை விட, சாந்தமான முறையில், நயமாக பேசி, அவன் கவனத்தை கல்வி பக்கம் திருப்பு.
பெற்றோரின் அன்பான சொற்கள், நாளடைவில் நல்வழிப்படுத்தும்; நம்பு, நிச்சயம் நல்லதே நடக்கும்.
- அன்புடன், மெடோஸ்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X