இது உங்கள் இடம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
00:00

ஆட்டோ ஓட்டும், மாணவர்!
என் நண்பருக்கு, அடிக்கடி முதுகு வலி வரும். மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில், மருத்துவமனை செல்ல, ஆட்டோ ஏறியுள்ளார். ஆட்டோ டிரைவரின் மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும், நண்பரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையை அடைந்ததும், ஆட்டோ கட்டணத்தை கொடுத்துள்ளார். அப்போது, தன் இருக்கைக்கு அருகில் இருக்கும், ஒரு பெட்டியை காட்டி, 'இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர்.
அதுமட்டுமல்லாமல், ஆட்டோ டிரைவரை பார்த்த, மருத்துவமனை காவலாளி, அன்பாக விசாரித்துள்ளார்.
காவலாளியிடம், அந்த ஆட்டோ ஓட்டுனரை பற்றி விசாரித்திருக்கிறார், நண்பர்.
'ஆட்டோ ஓட்டுனர், இந்த மருத்துவ கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்; ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அவருக்கு, மருத்துவ படிப்புக்கு உதவும் பொருட்டு, ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார், மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர்...
'மேலும், தன் படிப்பு செலவுக்கு போக, மீதமுள்ள பணத்தை, இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்து விடுவார்...' என்றார், காவலாளி.
அந்த வருங்கால மருத்துவரை வாழ்த்தி, பெட்டியில் தாராளமாகவே பணத்தை போட்டு வந்துள்ளார், நண்பர்.
முரட்டுதனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுனர்களை பார்த்து பழகிப் போன எனக்கு, நண்பர் கூறியதை கேட்டதும், வித்தியாசமாக இருந்தது.
மருத்துவம் பயிலும், அந்த ஆட்டோ ஓட்டுனரை, மனதார பாராட்டினேன்.
மாலா உத்ஸ், நெய்வேலி.

உனக்கு புடவை, எனக்கு புத்தகம்!
திருச்சியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு, மனைவியுடன் சென்றேன். அங்கே ஓரிடத்தில், மேஜை, நாற்காலி போட்டு அனைத்து வார, மாத இதழ்களும், தினசரி நாளிதழ்களும் வைத்திருந்தனர்.
மனைவி, புடவை பகுதிக்கு போய் விட்டபடியால், காத்திருக்க வேண்டி இருந்தது. இதை மனதில் வைத்தோ என்னவோ, ஆண்களுக்கென்று, இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்திருந்தனர், நிர்வாகத்தினர்.
பொழுதை போக்க, நானும், ஒரு மணி நேரம், வார இதழ் மற்றும் நாளிதழ் படித்து மகிழ்ந்தேன். இதனால், காத்திருந்த சலிப்பு தெரியவில்லை. கிளம்பும் முன், கடைக்காரரின் வியாபார யுக்தியை, பாராட்டி வந்தேன்.
டி.என். ரங்கநாதன், திருச்சி.

சேமிப்பின் பலன்!
சமீபத்தில், கோவையில் இருக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். சாதாரண வேலையில் இருக்கும் அவர், மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.
'பணத்துக்கு என்ன செய்வாய்...' என, கேட்ட போது, அவர் சொன்ன விஷயம், என்னை ஆச்சரியப்படுத்தியதோடு, யோசிக்கவும் வைத்தது.
நண்பருக்கு திருமணம் நிச்சயமானபோது, அவரது வீட்டாரிடம், 'ஒரு நாள் கூத்துக்காக, ஏன் சேமிப்பை வீணாக்க வேண்டும்... அந்த பணத்துக்கு, வீட்டுக்கு அருகிலேயே, மாப்பிள்ளை பெயரில் ஒரு கிரவுண்டு இடம் வாங்கி தருகிறேன்... திருமணத்தை கோவிலிலும், விருந்து, விசேஷங்களை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்...' என்று கூறியிருக்கிறார், மாமனார்.
அதன்படி, கோவிலில் திருமணத்தை முடித்து, விருந்து, விசேஷங்களை வீட்டில் வைத்துள்ளனர். வீட்டிலேயே திருமண விழா நடந்ததால், உறவும், நட்பும் சந்தோஷத்தில் மிதந்துள்ளனர்.
நண்பருக்கு, திருமணம் ஆகி, 23 ஆண்டுகள் ஆகிறது.
'மண்டபத்தில் திருமணம் நடந்திருந்தால், கூடுதல் செலவாகி இருக்கும். மேலும், அப்போது வாங்கிய இடம், இப்போது, நல்ல விலைக்கு போவதால், இடத்தை விற்ற பணத்தில் தான், திருமணம் நடத்த போகிறேன். சேமிப்பு பணத்தில், என் மகள் பெயரில், ஒரு இடம் வாங்கி கொடுத்துள்ளேன்...' என்றார்.
சேமிப்பின் வலிமையையும், சிக்கனத்தின் அருமையையும் நினைத்து வியந்தேன்.
கி. ரவிக்குமார், நெய்வேலி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Raman - Neyveli ,இந்தியா
19-ஆக-201913:11:39 IST Report Abuse
Saravanan Raman டியர் சார் 18.08.2019 தேதியிட்ட வாரமலரில், இது உங்கள் இடம் பகுதியில் ‘ஆட்டோ ஓட்டும் மாணவர்’ என்ற தலைப்பில் வெளியான கடிதம் படித்தேன் ‘அடிக்கடி முதுகு வலி வரும் ஒரு மனிதன், ஆட்டோவில் பயணித்தால், அதன் குலுக்கல் காரணமாக, வலி மேலும் அதிகரிக்கும்’ என்ற பொது அறிவு கூட இல்லாதவரா ஆட்டோவில் சென்ற, கடைசியில், தாராளமாக கட்டணம் செலுத்திய அந்த நோயாளி நண்பர்? அந்த நண்பர் எந்த ஊர்? அந்த ஊரின், எந்த இடத்திலிருந்து, எந்த மருத்துவமனைக்கு, ஆட்டோவில் சென்றார்? “இந்த சவாரிக்கு, எவ்வளவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ, அந்த தொகையை மட்டும் போட்டால் போதும்...' என்றிருக்கிறார், ஆட்டோ டிரைவர், என்பது எப்போதும் பயன் தருமா? ‘ஒரு பயணத்திற்கு எவ்வளவு தொகை நியாயமானது’ என்பது, அந்த தொழிலை தொடர்ந்து செய்பவருக்குத்தான் தெளிவாக விளங்கும். ஆட்டோவில் பயணிக்கும் பலவகையான மனிதர்களுக்கும், இந்த விபரம் தெரிந்திருக்காது. சரியான கட்டணத்தையே, ‘கூடுதல் கட்டணம் இது’ என்று நினைக்கும் மனோபாவமே இங்கு அதிகம். இந்நிலையில், பெட்டியில் போட சொல்வது, ஆட்டோ தொழிலை புதைக்குழியில் தள்ள சொல்வதற்கு சமம் ஐம்பது ரூபாய் மதிப்புள்ள சவாரிக்கு ஐந்து ரூபாய் பெட்டியில் போடப்பட்டால் என்ன செய்வார், அந்த ஆட்டோ ஓட்டும் மாணவர்? “தன் படிப்பு செலவுக்கு போக மீதமுள்ள பணத்தை இந்த மருத்துவமனையில் சேரும் ஏழை நோயாளிகளின் சிகிச்சைக்கு கொடுத்துவிடுவார்.” என்று மேல் விபரம் சொன்னராம் அந்த மருத்துவனை காவலாளி. ‘சும்மா அதிருது’ இல்லீங்களா? ‘ஆட்டோ ஓட்டி அந்த அளவுக்கு பெரிய வருமானம் வருகிறது என்றால், அவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும்?’ என்று நாம் சிந்திக்க வேண்டும். இப்படி ஆட்டோவே ஓட்டிக்கொண்டிருந்தால், அவர் தனக்கான மருத்துவ பாடங்களை என்றைக்கு படிப்பார்? பின்னர், நமக்கெல்லாம் என்ன சிகிச்சை அளிப்பார்? “முரட்டுத்தனமான பேச்சும், அடாவடியாக நடந்து கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்களை பார்த்தும் பழகிப்போன எனக்கு, நண்பர் கூறியதைக் கேட்டதும் வித்தியாகமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் கடிதாசிகாரர். ‘மருத்துவம் படித்துக்கொண்டே ஆட்டோ ஓட்டினால் தான் இந்த உயர்குணங்கள் வரும்’ என்ற கருத்தை விதைக்கிறாரா? மரியாதையான அணுகுமுறையும், மென்மையான நடவடிக்கையும் கொண்ட லட்சகணக்கான நம்முடைய ஆட்டோ ஓட்டுநர்களின் ஒருவரை கூட தம் வாழ்நாளில் இந்த மாலா உத்ஸ் சந்திக்கவே இல்லையா? மருத்துவம் பயிலும் அந்த ஆட்டோ ஓட்டுநரை மனதார பாராட்டினேன் என்று முடிக்கிறார். என்று? எங்கு? என்பதையும் சொல்லாமல் மறைக்கிறார். மத்திய அரசு நிறுவனத்தின் ஒரு நல்ல உயரதிகாரி, திரு உத்தண்டராமன் அவர்கள். மாலா உத்தண்டராமன் என்ற புனைப்பெயரில் இவர் எழுதுவார் என்பது தெரியும் ‘மாலா உத்ஸ்’ என்ற இன்னொரு புது புனைப்பெயரில் இது உங்கள் இடம் பகுதியில் விட்ட கதையை நம்பமுடியவில்லை நன்றி என்றென்றும் அன்புடன், இராதாராமன், நெய்வேலி
Rate this:
Share this comment
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
21-ஆக-201908:12:54 IST Report Abuse
Rajஎதற்கு இவ்வளவு கேள்விகள் என்று புரியவில்லை. அப்படி ஒன்றும் தவறாக எதுவும் தெரிவிக்கவில்லையே ? சென்னையில் ஒரு நாள் இரவு நேரத்தில் ஆட்டோவில் சவாரி செய்து பார்த்தால் புரியும், எவ்வளவு பேர் நியாயமாக ஆட்டோ ஓட்டுகின்றனர் என்று. நான் ஒரு முறை மேட்டருக்கு மேல் கொடுக்க முடியாதென்று சொன்னதற்கு அடிக்க வந்த ஓட்டுநர்களும் உண்டு. அனைவரும் அப்படியில்லையென்றாலும், ஒரு சிலர் செயலால் பலருடைய பெயர் கெடுகிறது. இந்த கடித்ததால் ஒரு சிலர் திருந்த வாய்ப்புள்ளது....
Rate this:
Share this comment
Saravanan Raman - Neyveli ,இந்தியா
21-ஆக-201913:18:16 IST Report Abuse
Saravanan Ramanகோயம்புத்தூரை சேர்ந்த நண்பர் ராஜ் என்பவர், 'எதற்கு இவ்வளவு என்ற கேள்விகள்?' என்று கேட்டுள்ளார் அவசியமற்ற கேள்விகள் இதில் ஏதுமில்லை. இந்த கடிதத்தில் சொல்லப்பட்ட செய்திகளை ஒட்டியே, கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது இவர் சொல்கிறார்: நான் ஒருமுறை மீட்டருக்கு மேல் கொடுக்க முடியாது என்று சொன்னதற்கு அடிக்க வந்த ஓட்டுநர்களும் உண்டு எழுகின்ற கேள்வி: இவர் ''ஒரு முறையில்' சென்ற 'ஒரு ஆட்டோவை' எததனை ஓட்டுநர் ஓட்டினார்கள்?...
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
19-ஆக-201911:50:28 IST Report Abuse
Vijay நோ கமெண்ட்ஸ்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஆக-201903:55:06 IST Report Abuse
D.Ambujavalli அந்த பொறுப்பான, மாணவ ஆட்டோக்காரருக்கு பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X