அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
00:00

கே
சென்னை, பெண்கள் கல்லுாரி ஒன்றில், எம்.பி.ஏ., இறுதியாண்டு படிக்கும் மாணவியும், என் வாசகியுமானவர், என்னை சந்திக்க வந்தார். அருகில், லென்ஸ் மாமாவும் இருக்க, அவரையும் நலம் விசாரித்தார்.
'படிப்பெல்லாம் எப்படி போகுது... படிப்பு முடிந்ததும், என்ன செய்வதாக உத்தேசம்?' என்றேன்.
'எல்லாம் சிறப்பா போயிட்டிருக்கு... படித்து முடித்ததும், சொந்த தொழில் செய்யப் போகிறேன், மணி...' என்றார்.
'என்ன மாதிரியான தொழில்...' என்றேன்.
'இரண்டு, மூன்று யோசனை இருக்கு. எதுல ஈடுபட்டா வெற்றிகரமா முடியும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்த ஆண்டுக்குள் முடிவு செய்து விடுவேன்...' என்றவர், தொடர்ந்தார்...
'எங்க கல்லுாரியில் படிக்கும் சிலர், என்ன தொழில் தமக்கு பொருத்தமானது என்று கண்டுபிடிக்க, ஒரு கணக்கு வைத்துள்ளனர். பசங்க இடையே இது பரவலாக உள்ளது...' என்றார்.
'அது என்ன கணக்கு?' என்றேன்.
அவர் கூறியது இது தான்...
'எந்த துறையில், உங்க பணத்தை, முதலீடு செய்யணுங்கிறதை, நீங்களே தேர்வு செய்யலாம். 10, 'சாய்ஸ்' இருக்கு. அதுல வர்ற முடிவுப்படி, நீங்க துறையை தேர்ந்தெடுத்து முதலீடு பண்ணுங்க...
'ஒன்றிலிருந்து, ஒன்பதுக்குள்ளே ஓர் எண்ணை தேர்ந்தெடுத்துக்கிடுங்க... நீங்க தேர்ந்தெடுத்த அந்த எண்ணை, மூன்றால் பெருக்குங்க... வர்ற விடையோட, மூன்றை கூட்டிக்கிடுங்க... கூட்டிய பின் வர்ற எண்ணை, மறுபடியும், மூன்றால் பெருக்குங்க...
'இப்ப, உங்களுக்கு ரெண்டு இலக்கம் கொண்ட ஓர் எண் வரும்... அந்த ரெண்டு இலக்கத்தையும் கூட்டிக்கிடுங்க... கூட்டி வர்ற அந்த எண் தான், உங்களை பெரும் பணக்காரர் ஆக்கப் போகிறது...
'நீங்க கடைசியா எந்த எண்ணை விடையா கண்டுபிடிச்சீங்களோ, அந்த எண்ணுக்குள்ள தொழிலில் முதலீடு செஞ்சு, பணத்தை அள்ளுங்க...' என்றார்.
அந்த, 10, 'சாய்ஸ்' இது தான்:
1.நிலம் 2.தங்கம் 3.நிரந்தர வைப்பு நிதி 4.'ஷேர்'கள் 5.பெட்டிக் கடை, மளிகை கடை மற்றும் 'ஆட்டோமொபைல்' தொழில் 6.'ரெகரிங் டிபாசிட்' 7.பொது, 'பிராவிடன்ட் பண்ட்' 8.தேசிய சேமிப்பு பத்திரம் 9.மனைவியிடம் கொடுத்தல் 10.'மியூச்சுவல் பண்ட்!'
இந்த கணக்கை, என்னை போட சொன்னார், வாசகி. லென்ஸ் மாமாவும் கணக்கு போட, ஒன்பதாவது எண்ணே வந்தது.
'இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது...' என்று, பெண் உதவி ஆசிரியைகளை போட்டு பார்க்க கூறினேன். அவர்களுக்கும், ஒன்பதாம் எண்ணே வந்தது.
நம்மை, 'கலாய்க்க' தான், இந்த கணக்கு என்று புரிய, வாசகியை தேட, கண் அடித்தபடி, 'டூ-வீலரில்' ஏறி பறந்தார்.
கடுப்பான லென்ஸ் மாமா, 'அடுத்த முறை அவர் வரட்டும்...' என்று பல்லைக் கடித்தார்.


'மணி... வெளியூர் சென்று ரொம்ப நாளாகி விட்டதுப்பா... பொறுப்பாசிரியரிடம் அனுமதி வாங்கு... ரெண்டு நாள் புதுச்சேரி சென்று வருவோம்...' என்று நச்சரித்தார், லென்ஸ் மாமா.
எனக்கும் கொஞ்சம், 'ரிலாக்ஸ்' தேவைப்பட்டதால், தயங்கித் தயங்கி, பொறுப்பாசிரியரிடம் அனுமதி கேட்க, நல்ல, 'மூடு' இருந்ததால், உடனே, அனுமதி அளித்தார்.
வழக்கம்போல், மாமா, வண்டி ஓட்ட, நான் அருகில் அமர்ந்திருந்தேன். சென்னை எல்லை தாண்டியதுமே, 'அங்கிள் ஜானி'யை தேட, நான் தடுத்தேன்.
கடுப்பில் இருந்தவர், பாதையின் குறுக்கே வந்த ஆடு, மாடு மற்றும் மனிதர்களை சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தைகளால், அர்ச்சனை செய்தபடியே வண்டி ஓட்டினார்.
இனி, அவருடன் மல்லுக்கட்ட முடியாது என்பதால், 'திண்ணை' நாராயணன் சாரிடம், வாங்கிச் சென்ற, 'ஆங்கிலேய கவர்னர்கள் பிடியில் சென்னை' என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
அதில், அப்போது, சென்னையின் கவர்னராக பதவி வகித்த, தாமஸ் பிட் என்ற ஆங்கிலேய அதிகாரியின் லீலைகளை படித்தபோது, இன்றைய அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியது இவர்தானோ என்று எண்ணத் தோன்றியது.
அப்பகுதியை நீங்களும் படித்துப் பாருங்களேன்:
இங்கிலாந்தில், 1653ல், பிறந்த தாமஸ் பிட், 21வது வயதில், இந்தியா வந்தார். அப்போது, ஒரிசாவின் பாலாசூர் நகரில் தங்கியிருந்த, பிட், கிழக்கிந்திய கம்பெனியின் ஒப்புதலை பெறாமலே, பிற நாடுகளுடன் வணிகம் செய்து வந்தார். இதனால், கம்பெனிக்கும், இவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இவரை ஒடுக்க, கிழக்கிந்திய கம்பெனி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், அவை அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்தார், பிட்.
இதனிடையே, 1683ல், இங்கிலாந்து சென்ற, பிட்டை, மடக்கிப் பிடித்து, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான, அவரது செயல்களுக்கு, 400 பவுண்டு அபராதம் விதித்தனர். இன்றைய மதிப்பில், 33 ஆயிரம் ரூபாய். அக்காலத்தில், இது மிகப்பெரிய தொகை.
ஆனால், இந்தியாவில் எக்கச்சக்கமாக சம்பாதித்து விட்டதால், அபராத தொகையை சிரமமில்லாமல் கட்டி விட்டார், பிட். இருந்தாலும், இங்கிலாந்திலேயே சில ஆண்டுகள் தங்கி, நிறைய நிலங்களை வாங்கிப் போட்ட, பிட், எம்.பி.,யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 1693ல், மீண்டும் இந்தியா வந்த, தாமஸ் பிட், இம்முறை, கிழக்கிந்திய கம்பெனியுடன் சமாதானம் செய்து கொண்டார். அவரது திறமையை அறிந்த கிழக்கிந்திய கம்பெனி, சென்னைக்கு அனுப்பியது. அடுத்த ஆண்டே, புனித ஜார்ஜ் கோட்டையின், கவர்னராக நியமிக்கப்பட்டார்.
சென்னை நகரை முதன் முறையாக, துல்லியமாக சர்வே எடுக்க ஏற்பாடு செய்தார்.
முகலாய பேரரசர், அவுரங்கசீப்பின் தளபதியான, தாவூத்கான், 1702ல், புனித ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட, அதை முறியடித்தார், பிட்.
இதுபோன்ற நடவடிக்கைகளால், தாமஸ் பிட்டின் ஆட்சி காலத்தை, சென்னையின் பொற்காலம் என்று கூறுகின்றனர், வரலாற்று ஆய்வாளர்கள்.
கடந்த, 1708ல், திருவொற்றியூர், கத்திவாக்கம், வியாசர்பாடி மற்றும் சாத்தங்காடு ஆகிய கிராமங்களை, தாவூத்கானிடமிருந்து மானியமாக பெற்று, சென்னையுடன் இணைத்ததும், தாமஸ் பிட் தான்.
இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில், முக்கியமானது, 'ரீஜென்ட்!' இதற்கு, மற்றொரு பெயர், பிட் வைரம். இந்த வைரம், தெலுங்கானா மாநிலம், கோல்கொண்டாவில் உள்ள, பர்க்கால் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.
வெட்டி எடுத்தபோது, 410 காரட்டாக இருந்த வைரத்தை, கவர்னர் தாமஸ் பிட், 1701ல், 48 ஆயிரம் பகோடாக்கள் விலை கொடுத்து வாங்கினார். பின், இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று பட்டை தீட்டப்பட்டதும், 137 காரட்டாக குறைந்தது. பிட் வைரம் என்றழைக்கப்பட்ட இதை, பிரெஞ்ச் அரசுக்கு, 1.35 லட்சம் பவுண்டுகளுக்கு விற்று, மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தார். இன்றைய மதிப்பு, 1.13 கோடி ரூபாய்.
பிரெஞ்ச் மன்னரால், 1717ல், 'ரீஜென்ட்' என்று பெயர் மாற்றப்பட்ட இந்த வைரத்தை தான், நெப்போலியன் தன் வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார்.
'ரீஜென்ட்' வைரம், தற்போது, பிரான்ஸ் தலைநகரான, பாரீஸ் நகரில் உள்ள, 'லுாவர்' அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பதவிக் காலம் முடிந்ததும், பெரும் செல்வத்துடன், 1709ல் இங்கிலாந்து திரும்பிய, தாமஸ் பிட், பல பகுதிகளில் அரண்மனை போன்ற வீடுகளை வாங்கி, ராஜபோகமாக வாழ்ந்தார். அப்போதும், சும்மா இருக்காமல், மீண்டும், இங்கிலாந்து பார்லிமென்டில் நுழைந்து விட்டார். இதனிடையே, அவர் மகனும், எம்.பி.,யாகி விட்டதால், அப்பாவும், மகனும் சேர்ந்தே பார்லிமென்டுக்கு சென்று வந்தனர்.
இவரது பேரனான, வில்லியம் பிட் சீனியரும், கொள்ளுப் பேரனான, வில்லியம் பிட் ஜூனியரும், இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர்கள்.
இறுதி நாட்களில், ஜமைக்காவின் கவர்னராக நியமிக்கப்பட்டார், பிட். ஆனால், சில காரணங்களால், அந்த பதவியை அவர் ஏற்கவில்லை.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள், பணம் சம்பாதிக்கும் களமாக, சென்னை இருந்துள்ளது என்ற கூற்று, உண்மை தான் போலிருக்கு!
புத்தகத்தை படித்து முடித்து, நிமிர்ந்தபோது, கடமையே கண்ணாக, வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார், லென்ஸ் மாமா.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஆக-201915:06:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni அந்தவாசகி நிசசயம் திருமணம் செய்து ஜாலியாக இருக்கப்போறாங்க ஏதவாதுகம்பெனி ஆர் ஐடி கம்பெனில சேர்ந்துருவாங்க பாத்துண்டே இருங்கோ
Rate this:
Share this comment
Cancel
Krish - Chennai ,இந்தியா
18-ஆக-201906:54:56 IST Report Abuse
Krish எல்லாம் ஒன்பது என்று வர, இரண்டு முறை மூன்றால் பெருக்குவது, ஒன்பதில் பெருக்குவது போல. ஒன்பதால் எதை பெருகினாலும் கூட்டு ஏன் ஒன்பதே.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
18-ஆக-201905:20:19 IST Report Abuse
கதிரழகன், SSLC நம்ம நாட்டுல லஞ்சம் ஊழல் கரை புரண்டு போடறதுக்கு அடிப்படை காரணமே இந்த வெள்ளை காரன்தான். புறம் போக்கு நிலத்துல தானா விளையும் பொருள் எல்லாத்துக்கும் ஜாதி வாரியா உரிமை இருந்திச்சு. ஐந்தில் ஒரு பாகம் காவல், தலையாரிக்கு, அது ஊர் வெட்டியான் நாவிதர் வண்ணான் கோவில் சப்பரம் தூக்கி பறையர் எல்லாருக்கும் உரிமை, மீதி எல்லாமே குடி வாரம் தான். பட்டா நிலத்துல ஐந்தில் இரண்டு பாகம் மேல் வாரம், ஒரு பாகம் காவல், மீதி குடி வாரம் இருந்திட்டு. ஆறு குளம் மீன் இந்த சாதிக்கு, பனை மரம் அந்த சாதிக்கு, புளிய மரம் இந்த சாதிக்குன்னு இருந்திச்சு. அத்தனை உரிமையும் பறி போச்சு வெள்ளைக்காரனால. புறம் போக்கு நிலைத்து விளைச்சலை குத்தகைக்கு விட்டு குடி வாரம் ஐந்தில் இரண்டா கொறைச்சது அவன்தான். கைவினை பொருள் செய்யும் அத்தனை சாதி தொழிலும் அவனால நசிஞ்சு போச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X