இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
00:00

அஜீத்தின், 'பைக் ரேஸ்' சாகசம்!
ஒரு படத்திலாவது, 'பைக் ரேஸ்' வீரராக நடிக்க வேண்டும் என்பது, அஜீத்தின் நீண்ட கால ஆசை. ஆனால், அதற்கேற்ற கதை, அவரது, 60வது படத்தில் தான் கிடைத்துள்ளது. விரைவில் துவங்கும் அப்படப்பிடிப்பிற்காக, உடலை கட்டுக்கோப்பாக மாற்றி வருகிறார், அஜீத். இப்படத்தில், அவரது இளமை காலத்து, 'பைக் ரேஸ் வீடியோ' சிலவற்றை, திரையில் காண்பிக்க உள்ளனர். அத்துடன், இதுவரை எந்த நடிகரும் செய்திராத, சில, 'பைக் ரேஸ்' சாகசங்களை செய்து, தான் ஒரு உண்மையான,'பைக் ரேஸ்' வீரர் என்பதை நிரூபிக்க இருக்கிறார்.
சினிமா பொன்னையா

ராய்லட்சுமிக்கு குவிந்த, 'டூ - பீஸ் ஆபர்'கள்!
'பிகினி' உடையில், பல படங்களில் கலக்கியுள்ளார், ராய்லட்சுமி. அடுத்தபடியாக, தன், 'டூ - பீஸ்' ஆட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக, 'கமர்ஷியல்' இயக்குனர்களுக்கு, சுற்றறிக்கை விட்டார். ஆனால், அதை அவர்கள் அலட்சியப்படுத்தி விட்டனர். இதனால், கடுப்பான ராய்லட்சுமி, 'என் அருமை தெரியாதவர்கள் நீங்கள்...' என்று ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். அத்துடன், தன், 'டூ - பீஸ்' ஆட்டத்தை, 'பாலிவுட்'டில் அரங்கேற்றம் செய்யப் போவதாக, மும்பைக்கு பறந்து விட்டார். அங்கு சென்ற வேகத்திலேயே, ராய்லட்சுமிக்கு, 'டூ - பீஸ் ஆபர்'கள் குவிகின்றன. ஆல் பழுத்தால் அங்கே கிளி; அரசு பழுத்தால் இங்கே கிளி!
எலீசா

ஐஸ்வர்யா ராயின், வில்லி அவதாரம்!
முன்னாள் உலக அழகியான, ஐஸ்வர்யாராய், 1997ல், மணிரத்னம் இயக்கிய, இருவர் படத்தில் அறிமுகமானவர். 'மணிரத்னம் தான், என் சினிமா குருநாதர்...' என்று சொல்லி வரும், ஐஸ்வர்யா ராய், மற்ற இயக்குனர்களிடம், ஒவ்வொரு காட்சியின் கதையையும் கேட்டு, பிடித்தால் தான் நடிப்பார். ஆனால், மணிரத்னம் படத்திற்கு மட்டும், கதையே கேட்காமல், 'கால்ஷீட்' கொடுப்பார். அந்த வகையில், மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படத்தில், வில்லியாக நடிக்க வேண்டும் என்று, அவர் ஒரு வார்த்தை சொன்னதும், மறுபேச்சில்லாமல் சம்மதம் தெரிவித்துள்ளார். எடுப்பாரைக் கண்டால், குடமும் கூத்தாடும்!
— எலீசா

ரஜினி வேடத்தில் நடிக்க ஆசைப்படும், அனிருத்!
ரஜினி நடித்த, பேட்ட மற்றும் தர்பார் படங்களுக்கு இசையமைத்துள்ளார், அனிருத். 'ரஜினி - மம்மூட்டி நடித்த, தளபதி படத்தை, யாராவது, 'ரீ - மேக்' செய்தால், அதில், ரஜினி நடித்த, சூர்யா என்ற வேடத்தில் நடிக்கிறேன்...' என, விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், 'அப்படத்தில், மம்மூட்டி நடித்த, தேவா வேடத்திற்கு, சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார். அதனால், நானும், சிவகார்த்திகேயனும், ரஜினி - மம்மூட்டியாக உருவெடுக்க தயாராக இருக்கிறோம்...' என்கிறார், அனிருத்.
- சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!
முதல் கணவரின் குடும்பத்தில் உள்ளவர்கள், தன் கலைச்சேவைக்கு கடிவாளம் போடுவதாக, நீதிமன்றம் சென்று, கணவரையே கத்தரித்தார், பால் நடிகை. அதையடுத்து, மறுமணம் குறித்து அவரிடம், 'மீடியா'க்கள் கேட்ட போது, 'அதற்கொன்றும் அவசரமில்லை...' என்றார். ஆனால், தற்போது, நடிகைக்கு, ஒரு ரகசிய, 'பாய் பிரண்டு' இருக்கிற சேதி, வெளியில் கசிந்துள்ளது. அவருடன், குடும்பம் நடித்தவே, பெற்றோரை பிரிந்து, புதுச்சேரியில், அம்மணி, தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக, 'கோலிவுட்'டில் கிசுகிசுக்கின்றனர்.
'என்னடி அலங்கோலம் இது... அரை டவுசரும், பனியனும் போட்டுக்கிட்டு... அமலாபால்ன்னு நினைப்பா உனக்கு... லட்சணமா சுடிதார் போட்டுக்கிட்டு, காலேஜுக்கு போ...' என்று, அதட்டினாள், அம்மா.

சினி துளிகள்!
* இயக்குனர் தங்கர்பச்சான், தன் மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்கிறார்.
* ஆடை படத்தை அடுத்து, அதோ அந்த பறவை போல என்ற படத்திலும், கதையின் நாயகியாக நடிக்கிறார், அமலாபால்.
* கடந்த, 2003ல், ஷங்கர் இயக்கிய, பாய்ஸ் படத்தில், 'ஹீரோ'வாக அறிமுகமான, சித்தார்த், மீண்டும் தற்போது அவர் இயக்கும், இந்தியன் - 2 படத்தில் நடிக்கிறார்.
* மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நாயகனாக நடித்து வரும், வானம் கொட்டட்டும் என்ற படத்தில், சாந்தனு பாக்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அவ்ளோதான்!

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X