தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
'சிவகங்கை மாவட்டத்துல ஒரு குடும்பம் வாழ வழி தெரியாம, தினம் தினம் செத்துப் பிழைச்சிட்டு இருக்கு. அதைப்பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
என் கணவர் மாரடைப்புல இறந்து, அஞ்சு வருஷம் ஆகுது.
பிறவியிலேயே மூளை முடக்குவாதத்தால பாதிக்கப்பட்ட வயது வந்த என் மகளை, இப்போ என்னால பராமரிக்க முடியலை; என் பொருளாதார சூழல் அதுக்கு இடம் கொடுக்கலை. உங்க அரசுத் துறைகள்கிட்டே உதவிகள் கேட்டு கேட்டு வெறுத்துப் போயிட்டேன். 'இப்போ அதுக்கு வாய்ப்பில்லை; எங்களுக்கு அதிகாரம் இல்லை'ங்கிற பதில் தான் மாறி மாறி வருது.
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமருக்கு அனுப்பின மனு அடிப்படையில, வீடு தேடி வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், 'வீல் சேர் தர ஏற்பாடு செய்றோம்'னு சொல்லிட்டுப் போனாங்க; அதோட சரி!
அதான், கடந்த மார்ச் மாதம், 'என் மகளை கருணைக் கொலை செய்ய அனுமதி கொடுங்க'ன்னு, ஆட்சியர் அலுவலகத்துல மனு கொடுத்தேன்; அதுக்கும் பதில் இல்லை.
அய்யா... நாங்க வாழணுமா, கூடாதா; அதை மட்டும் வெளிப்படையா சொல்லிடுங்க; எங்களை வதைக்காதீங்க!
- மனவளர்ச்சி குன்றிய, 22 வயது மகள் கோகிலாவுடன் தவிக்கும் 49 வயது ராஜேஸ்வரி, மானாமதுரை, சிவகங்கை.