கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

18 ஏப்
2011
00:00

கேள்வி: டாஸ்க்பார் என்றும்,சிஸ்டம் ட்ரே என்றும் சொல்லப்படுகிறது. இரண்டும் ஒன்றா? இல்லை எனில் இதன் இடம் எங்கு உள்ளது? சற்று விளக்கவும்.
-ஜி.சூரிய பிரகாசம், சேலையூர்.
பதில்: உங்கள் நீண்ட கடிதம், நீங்கள் எந்த குழப்பத்தில் உள்ளீர்கள் என்று காட்டுகிறது. படிப்படியாக விளக்கு கிறேன். விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டு வந்த போது இந்த டாஸ்க் பார் தரப்பட்டது. கிராபிக்ஸ் அடிப்படையில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றில், மானிட்டரில், பொதுவாக, கீழாகக் காட்டப்படும் நீண்ட செவ்வகப் பட்டையே டாஸ்க் பார்.
இந்த நீள் செவ்வகப் பட்டையில், புரோகிராம்களின் சிறிய ஐகான்களை வைத்து, கிளிக் செய்து இயக்கலாம். இவற்றில் முதல் சிறிய தனிப் பட்டையாக, இடது மூலையில் காணப்படுவது ஸ்டார்ட் பட்டன்.
இதே டாஸ்க் பாரில் வலது மூலை யில் காணப் படும் பட்டை சிஸ்டம் ட்ரே. அதாவது சிஸ்டம் செயல்பாடுகளை அறிந்து கொள்ள இது உதவும். எடுத்துக்காட்டாக, சிஸ்டம் இயக்கும் கடிகாரம், பேக்ஸ். பிரிண்டர், மோடம், வால்யூம், கிராபிக்ஸ் கார்ட் எனப் பலவற்றை இங்கு கிளிக் செய்து தகவல்களைப் பெறலாம். சிஸ்டம் இயக்கும் சாதனங்கள் குறித்த தகவல்களைத் தருவதால் இதற்கு சிஸ்டம் ட்ரே எனப் பெயரிட்டுள்ளனர்.
இன்னொன் றையும் கூறி விடுகிறேன். ஸ்டார்ட் பட்டனை அடுத்து, அங்கு அப்ளிகேஷன் புரோகிராம்களை வைத்து, அதில் சிங்கிள் கிளிக் செய்து அவற்றை இயக்க முடியும் என்பதால், அதனை குயிக் லாஞ்ச் பார் என அழைக்கின்றனர்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இந்த குயிக் லாஞ்ச் பார் இல்லை. இதற்குப் பதிலாக, நாமாக டாஸ்க் பாரில், புரோகிராம்களின் ஐகான்களை பின் அப் செய்து வைத்துக் கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பயன்படுத்து கிறோம். இந்த பிரவுசரில் தரப்பட்டுள்ள, டேப் பிரிவியூ காட்சி, சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனை நிறுத்த முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
-ஆர். கலாவதி, சென்னை.
பதில்: எல்லாரும் பாராட்டும் இந்த பிரிவியூ காட்சி வசதிக்கு, இப்படியும் ஒரு எதிர்மறையான வரவேற்பா ! இருக்கலாம்; ஏனென்றால் ஓரிரு டேப்கள் திறந்திருந்தால், இந்தக் காட்சி ரசிக்கும்படியாக இருக்கும். அதிகமான எண்ணிக்கையில் டேப்கள் இருந்தால், சற்று எரிச்சல் ஏற்படலாம். சரி, உங்களுக்கான தீர்வைப் பார்ப்போம்.
1. இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோ பெற Alt + T அழுத்திப் பின்னர் என்பதைக் கிடைக்கும் மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும். அல்லது Tools மெனு கிளிக் செய்து இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோவில், Settings டேப் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இது இன்னொரு பாப் அப் விண்டோவினைத் திறக்கும். இதில் Show previews for individual tabs in the taskbar என்று இருப்பதன் முன் உள்ள சிறிய செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து, ஆப்ஷன்ஸ் விண்டோவினை மூடவும்.
3. அடுத்தது மிக முக்கியமானது. நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தினை, முழுமையாக அமல்படுத்த, இன்டர்நெட் எக்ஸ் புளோரரை மூடி மீண்டும் இயக்கவும்.
இனி பிரிவியூ காட்சிகள் கிடைக்காது.

கேள்வி: நான் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துகிறேன். மேக் அபி மற்றும் நார்டன் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களைப் பதிந்து வைத்துப் பயன்படுத்து கிறேன். இது சரியல்ல என்றும் ஒரு ஆண்ட்டி வைரஸ் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் என் நண்பர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆலோசனை கூறவும்.
-டி. தாமோதரன், திண்டுக்கல்.
பதில்: உங்கள் நண்பர்கள் கூறுவது முற்றிலும் சரியே. ஒரே நேரத்தில் இரண்டு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைப் பயன்படுத்துவது தவறு. ஒன்றில் அகப்படாமல் இருக்கும் வைரஸ், இன்னொரு புரோகிராமில் அகப்படும் அல்லது தடுக்கப்படும் என நீங்கள் எண்ணலாம். இது சரியல்ல. ஒரே நேரத்தில் இருவேறு புரோகிராம்கள் மட்டுமல்ல, ஒரே புரோகிராமின் இரண்டு பதிப்புகளைப் பயன்படுத்துவதும் உகந்ததல்ல. இதற்கான சில காரணங் களைச் சொல்கிறேன். ஒரே செயல் பாட்டினை மேற்கொள்ளும் இரண்டு புரோகிராம்களைப் பயன்படுத்தும் போது, கம்ப்யூட்டரின் திறன் அதிகமாக உறிஞ்சப்பட்டு வீணாகிறது. இதனால், கம்ப்யூட்டர் செயல் திறன் குறையலாம்.
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், வைரஸ் ஒன்றின் குறியீடுகளின் அடிப்படையில் செயல்பட்டு, வைரஸ் களைத் தடுக்கின்றன. இரண்டு புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது, ஒன்று மற்றதை வைரஸ் என எண்ணி, அறிவிக்கும். இரண்டும் இதே போல பல விஷயங் களில் முட்டிக் கொள்ளும்.
எனவே ஒரே ஒரு புரோகிராமினை மட்டுமே பயன்படுத்தவும். எந்த புரோகிராம், பயன்படுத்துவதற்கு உங்களுக்கு எளிமையாகவும், பயனுள்ள தாகவும் தெரிகிறதோ, அதனை மட்டும் வைத்துக் கொண்டு, இன்னொன்றினை அன் இன்ஸ்டால் செய்திடவும். அதன் சோர்ஸ் பைலை வைத்துக் கொள்ளலாம். ஒன்று சரியில்லை என்றால், அதனை நீக்கிவிட்டு, இன்னொன்றின் சோர்ஸ் பைலை இன்ஸ்டால் செய்துவிடலாம். நீக்குவதற்கு எக்ஸ்பி சிஸ்டத்தில் Start, Control Panel, Add/Remove Programs என்று சென்று நீக்கிவிடலாம். விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 எனில் Programs and Features சென்று அன் இன்ஸ்டால் செய்துவிடலாம். ஆனால் மிக முக்கியமான பணி ஒன்றுள்ளது. அடிக்கடி பதிந்திருக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்திடவும்.
இதனால் மட்டுமே நீங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவீர்கள்.

கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 வந்துவிட்டதே! இதற்கு எல்லாரும் மாற வேண்டுமா? இது நம்பர் ஒன் பிரவுசராக மாறிவிடுமா?
-தே. கயல்விழி, பொள்ளாச்சி.
பதில்: நல்ல கேள்வி. நான் கூட இது குறித்து யோசித்தேன். ஒரு நாளும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9, நீங்கள் கூறியது போல நம்பர் ஒன் பிரவுசராக மாற முடியாது. இந்த புதிய பிரவுசர் மிகவும் உறுதியான கட்டமைப் பில் உருவாகியுள்ளது. மிக வேகமாக இயங்குகிறது. இதன் புதிய வசதிகள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கி, ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. இருந்தாலும் பல சிக்கல்கள் இதனை அதிகம் பேர் பயன்படுத்த முடியாமல் தடுக்கிறது.
பயர்பாக்ஸ், குரோம் போன்றவை மேக் ஓ.எஸ். மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் பல பதிப்புகளாகக் கிடைக்கின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 விண்டோஸ் இயக்கத்தில் மட்டுமே இயங்கும். அதுவும் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் மட்டுமே இணையும். (இன்னும் 50% க்கு மேலாக எக்ஸ்பி தான் பயன்படுத்தி வருகின்றனர்.) இப்போதைக்கு பெரும்பாலானவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐத்தான் பயன்படுத்துவார்கள். அடுத்த இடத்தில் பயர்பாக்ஸ், மூன்றாவது இடத்தில், மைக்ரோசாப்ட் நம்மை மறக்கச் சொல்லும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 உள்ளன. பதிப்பு 7 அடுத்த இடத்தில் உள்ளது. பதிப்பு 8, மொத்த பிரவுசர் மார்க்கட்டில் 35% மார்க்கட்டைப் பிடித்துள்ளது.
ஒருவேளை அடுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வரும்போது, மக்கள் விண்டோஸ் எக்ஸ்பியை விட்டு, விண்டோஸ் 7க்கு மாறியிருப்பின், அந்த பிரவுசர் முதலிடத்தைப் பெறலாம்.
உங்கள் சிஸ்டத்தில் விண்டோஸ் 7 இருந்தால், நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 ஐப் பயன்படுத்தலாம்.

கேள்வி: என் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2007 பயன்படுத்துகிறேன். நான் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்களை என் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியுள்ளது. அவர்களிடம் ஆபீஸ் 2003 மட்டுமே இருப்பதால், ஒவ்வொரு முறையும், டாகுமெண்ட்களை மீண்டும், ஆபீஸ் 2003 பார்மட்டிற்கு மாற்றி அனுப்ப வேண்டியுள்ளது. இதற்குப் பதிலாக, டாகுமெண்ட்டை எப்போது சேவ் செய்தாலும், அதனை 2003 பார்மட்டிலேயே சேவ் செய்திடும்படி செட் செய்திட முடியுமா?
-கா. முகேஷ் ராஜ், கோயமுத்தூர்.
பதில்: இப்போது பலரும் எதிர்கொள்ளும் பிரச்னையைக் கூறி இருக்கிறீர்கள். தாங்கள் எதிர்பார்க்கும் வசதி ஆபீஸ் 2007 தொகுப்பில் உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்படவும்.
வேர்ட் 2007 ஐத் திறக்கவும். ஆபீஸ் பட்டனை அழுத்தவும். கீழே உள்ள Word Options பட்டனைக் கிளிக் செய்திடவும். அடுத்து Word Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில் இருக்கும் டேப்களில், Save டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் “Save files in this format” என்ற மெனுவில் “Word 972003 Document” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ஓகே பட்டன் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் வேர்ட் டாகுமெண்ட்கள் அனைத்தும் வேர்ட் 2003 பார்மட்டிலேயே சேவ் செய்யப்படும். மாறான பார்மட் டாகுமெண்ட்டை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப மாட்டீர்கள்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜாராம் - குவைத்,இந்தியா
24-ஏப்-201115:32:35 IST Report Abuse
ராஜாராம் அய்யா நான் முழுக்க முழுக்க தமிழ் மீடியத்தில் படித்தவன் எனக்கு ஆங்கிலம் அவளவாக பேசுவதற்கு தெரியாது அடுத்து எதாவது ஈமெயில் ஆங்கிலத்தில் எழுதனுமுன்ன ரொம்ப பிரச்சனை அதற்கு எதாவது தமிழ் டு இங்கிலீஷ் மாற்றுவதற்கு சாப்ட்வேர் இருகின்றதா தயவு செயுது அடுத்த கம்ப்யூட்டர் இதழில் தெரியபடுத்தவும் இதை பற்றி 2 ,3 .தடவை உங்களிடம் இதற்கு முன்னால் உங்களுக்கு எனுடைய கருத்தை பதிவு செயுது உள்ளேன் ஆனால் உங்களிடம் இருந்து எந்த பதிலும் இதை பற்றி கூற வில்லை இந்த கருதுகாவது உங்களிடம் இருந்து பதில் வரும் என்று ந்ம்புகின்றனே இப்படிக்கு, ராஜாராம்.
Rate this:
Share this comment
Cancel
Ajith - Vandavasi,இந்தியா
23-ஏப்-201116:56:25 IST Report Abuse
Ajith பொதுவாக ஒரு folder கு எப்படி password குடுக்கறது.......plz ans me ..
Rate this:
Share this comment
Cancel
priya - trichy,இந்தியா
23-ஏப்-201110:31:59 IST Report Abuse
priya சார், நன் விண்டோஸ் 2007 பயன்படுத்துகிறேன் ... அதில் சி,சி++ use பண முடியுமா சார் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X