குருபார்வை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
00:00

எனது மகன் பி.எஸ்சி., முடித்துள்ளான். விளையாட்டில் ஆர்வமுள்ள அவன், இந்திய அளவில் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளான். எனவே மத்திய அரசு வேலை பெற முடியுமா?
ராணி, மதுரை

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அவற்றின் பொதுத் துறை நிறுவனங்களிலும் பல்வேறு துறைகளிலும் விளையாட்டில் சாதனை புரிந்திருப்பவருக்கான வேலை வாய்ப்புகள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. ரயில்வே துறையில் விளையாட்டுக்களில் திறன் பெற்றவருக்கான பணிவாய்ப்புகள் அவ்வப்போது அறிவிக்கப்படுகின்றன. தவறாது விண்ணப்பித்து அவற்றின் தகுதி தேர்வுகளுக்கேற்ப தயாராகி வருவதுடன் விளையாட்டுத் திறன்களிலும் சிறப்பு செயல்பாடுகளை நிரூபிக்க முடிந்தால் உங்கள் மகன் வேலை பெறுவதில் சிரமம் இருக்காது.

கணிதத்துடன் வணிகவியல் முடித்திருக்கிறேன். ஆனால் சி.ஏ., கம்பெனி செகரட்டரி போன்ற படிப்புகளில் ஆர்வம் இல்லை. என்ன படிக்கலாம்?
கனிமொழி, விழுப்புரம்

தொழிற்படிப்புகளில் ஏன் உங்களுக்கு ஆர்வம் இல்லை என புரியவில்லை. எனினும் உங்களுக்கான படிப்புத் துறையாக மேனேஜ்மென்ட் துறையை குறிப்பிடலாம். பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., போன்றவை படிக்கலாம். பிளஸ் 2வில், பொருளாதாரம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் மேனேஜ்மன்ட் படிப்புகளுக்கு இல்லை. ஆனால் மேனேஜ்மென்ட் படிப்பை எங்கு படிக்கிறோம் என்பது மிக முக்கியம். இன்று எண்ணற்ற கல்லுாரிகளில் எம்.பி.ஏ., படிப்பு நடத்தப்படுகிறது. ஆனால் சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்வு செய்து சேர்வது முக்கியம்.

டிசைனிங் துறை படிக்க விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2 படிக்கிறேன். இந்தத் துறை சிறப்பான துறை தானா?
பாபு,சென்னை

அடிப்படையில் நீங்கள் கிரியேட்டிவ் திறன் பெற்றவராக இருப்பது இத்துறை படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கான அடிப்படை திறனாகும். நன்றாக வரையத் தெரிந்தவராக இருந்தால் கூடுதல் திறனாக அமையும். நல்ல கற்பனை திறன் உடையவராக இருந்தால் சிறப்பாக செயல்பட முடியும். பொறுமையும் சிறப்பான தகவல் தொடர்புத் திறனுடையவராகவும் இருப்பதும் இதில் நீங்கள் அதிக வெற்றி பெற உதவும். இதில் பட்டப் படிப்பும் பட்ட மேற்படிப்பும் உள்ளன. சில நிறுவனங்களில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
Apparel and Accessories Designing , Textile Designing , Product Designing போன்ற பிரிவுகளில் இதில் படிக்கலாம்.ஆடை வடிவமைப்பு, பேஷன் டிசைனிங் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் சிறப்பான வேலை வாய்ப்புகள் உள்ளன.

வங்கி ஒன்றின் பி.ஓ., பணிக்கான நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளேன். தயாராவது எப்படி?
அம்ருதா, கோவை

நேர்முகத் தேர்வு என்பது தற்போது அதிகாரி நிலை பணிகளுக்கு மட்டும் தான் நடத்தப்படுகிறது. எனினும் தனியார் வங்கிகளில் கிளார்க் பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. பொதுவாக நேர்முகத் தேர்வுகளுக்காக நீங்கள் தயாராக கவனம் செலுத்த வேண்டியது இவற்றில் தான்
* உங்களை பற்றிய கேள்விகள்.
* உங்களது பட்டப் படிப்பு பாடத்திலிருந்து கேள்விகள்
* பொது அறிவு மற்றும் நடப்பு செய்திகள்
* பணியில் சேர உள்ள துறை சார்ந்த கேள்விகள்.
உங்களை பற்றிய கேள்விகள் என்றால் எதற்காக இந்த வேலையை உங்களுக்குத் தர வேண்டும், உங்களது பலம் என்ன பலவீனம் என்ன, இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள், குறிப்பிட்ட சூழலை எப்படி சமாளிப்பீர்கள் என்ற வினாக்கள் கேட்கப்படும். உங்களது படிப்பு, நுழைய விரும்பும் துறையில் எப்படி பயன்படும் போன்றவை கேட்கப்படும்.
பொது அறிவு மற்றும் நடப்புச் செய்திகள் ஒரு பெரிய கடல் போன்றது. என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். செய்தித் தாள் வாசிப்பும் Bankers adda.com, gktoday.in போன்ற இணையதளங்கள் இதில் உங்களுக்கு உதவலாம்.
வங்கித் துறையின் அடிப்படை அம்சங்கள், வட்டி விகிதங்கள் என பரந்து விரிந்த துறையின் பலவற்றில் இருந்தும் கேள்விகள் அமையலாம். உங்களுக்கு தெரிந்ததை தெளிவாக சொல்ல வேண்டும். தெரியாததை நேர்மையாக ஒத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X