அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:00


இந்த வாரம், குட்டிக் குட்டி தகவல்கள் மட்டும் தான்!
எதை வெற்றி என்று கருதலாம்...
வெற்றி என்பது, ஆளாளுக்கு மாறுபடும். சிலருக்கு, நிறைய பணம் சேர்த்தால் வெற்றி; சிலருக்கு, பதவி; மேலும் சிலருக்கு, படிப்பு என, பட்டியல் நீண்டுகொண்டே போகும். அடுத்து வரும் பட்டியலை பாருங்கள். இதைக் கூட, வெற்றி என்று கொள்ளலாம்.
* இரண்டு வயதில், நடை வண்டி இல்லாமல் தனியாக நடக்க முடிந்தால், வெற்றி
* எட்டு வயதில், தனியாக வெளியே சென்று, வழி தவறாமல் வீடு திரும்பினால்
* 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால்
* 18 வயதில், எதிர்கால லட்சியத்தை தேர்ந்தெடுக்க முடிந்தால்
* 22 வயதில், பட்டதாரியானால்
* 25 வயதில், நல்ல வேலை கிடைத்தால்
* 30 வயதில், தனக்கென குடும்பம் அமைந்து விட்டால்
* 35 வயதில், நிலையான வருமானத்திற்கு வழி பிறந்தால்
* 45 வயதில், இளமை தோற்றம் கொண்டிருந்தால்
* 50 வயதில், குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடிந்தால்
* 55 வயதில், உடல் உபாதைகளுக்கு ஆளாகாமல், தொடர்ந்து கடமைகளை செய்தால்
* 60 வயதில், உறவினர்கள் அனைவராலும் விரும்பப்பட்டால்
* 65 வயதில், நோயில்லாமல், சுறுசுறுப்பாக இயங்க முடிந்தால்
* 70 வயதில், பிறருக்கு வழிகாட்டியாக, முன்னுதாரணமாக வாழ முடிந்தால்
* 75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால்
* 80 வயதில், ஊன்றுகோல் இல்லாமல், தனியாக நடக்க முடிந்தால்...
- இவை அனைத்துமே வெற்றி தான்!

டில்லியை ஆண்ட, அக்பர் பாதுஷா, மனைவி பேகத்துடன், யமுனை நதிக்கரையில் உலாவ சென்றார். அவருடன் மனம் விட்டு பேசியபடியே வந்தார். துள்ளி ஓடும் யமுனை நதியை பார்த்து, மெல்லிய புன்முறுவலை படரவிட்டபடியே, மனைவியின் முகத்தை நோக்கினார்.
'அன்பே... உன் எழிலை பார்த்து வெட்கப்பட்டு, யமுனா வேகமாக ஓடுகிறாள், பார்த்தாயா... உனக்கு எப்படி தெரிகிறது, சொல்லேன்...' என்றார்.
'பிரபோ... எனக்கென்னவோ, யமுனா அழுவதை போல் தோன்றுகிறது...' என்றார்.
'உனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது...' என கேட்டார், அக்பர்.
'அது என்னமோ தெரியவில்லை. காரணம் என்னவென்று சொல்ல தெரியவில்லை...' என்றார், பேகம்.
'சரி... நேரமாகி விட்டது, வா... புறப்படுவோம்...' என கூறி, புறப்பட்டார்.
மறுநாள், அரசவையில் இதுபற்றி கூறி, 'யமுனை ஏன் அழுகிறாள் என, யாராவது சொல்ல முடியுமா...' என்றார்.
அக்பர் அரசவையிலிருந்த மதி மந்திரியான, பீர்பால் எழுந்து, 'மன்னா... யமுனையின் பிறந்த வீடு, இமயமலை; புகுந்த வீடு, வங்க கடல். பிறந்த இடத்தை விட்டு, புதிய இடமான தன் புகுந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்று எண்ணியே, அவள் அழுகிறாள்.
'ஆனாலும், தன் புகுந்த வீட்டுக்கு போகும் பாதையில் உள்ள இடங்கள் வளப்படுத்தப் போவதை நினைத்து, அவள் ஆனந்த கண்ணீர் விடுகிறாளோ என, நான் எண்ணுகிறேன்...' என்றார்.
'சபாஷ், பீர்பால்...' என, பாராட்டி மகிழ்ந்தார், மன்னர்.
மற்றவர்களும், 'இதுதான், பீர்பால்...' என்று கூறி, மகிழ்ந்தனர்.

'ஹாலிவுட்'டை சேர்ந்த பட தயாரிப்பாளரான, ஜெ.ஆர்தர் ரேங்க் என்பவர், தனக்கு ஏற்படும் கவலைகளை கையாள்வதற்கு, ஒரு நுாதன முறையை கையாண்டார்.
ஒவ்வொரு வாரமும், புதன் கிழமையை, 'கவலைக்குரிய நாள்...' என்று ஒதுக்கி வைப்பார். இதர நாட்களில், எதாவது கவலை ஏற்பட்டாலும், ஒரு தாளில், 'புதன் கிழமை கவனிக்கப்படும்...' என்று எழுதி, ஒரு பெட்டியில் போட்டு விடுவார்.
அதன் பின், புதன் கிழமை அந்த பெட்டியை திறந்து பார்க்கும்போது, எழுதபட்டதில் பல வேலைகள் இடையிலேயே சரியாகி இருக்கும்; சிலவற்றை களைவதற்கான வழிகளும் கிடைத்திருக்கும்.
மீதி இருக்கும் கவலைகளை, 'அடுத்த புதன் கிழமை கவனிக்கப்படும்...' என்று எழுதி போட்டு விட்டு, தன் பணியை கவனிக்க ஆரம்பித்து விடுவார்.
சில பிரச்னைகளுக்கு, காலம் தான் பதிலாக அமையும். எல்லாமே மாறிக் கொண்டிருப்பது தான், உலகின் இயல்பு. நிலையாமை குறித்து புரிந்து கொண்டால், கவலை நிரந்தரமானதில்லை என்பது தெளிவாகும்.

ஆங்கில எழுத்தாளரான, செஸ்டர்டெனுக்கு, நாடக மேதையான, பெர்னாட்ஷாவை மட்டம் தட்டுவதே வேலை.
ஒரு சமயம், பெர்னாட்ஷா மெலிந்திருப்பதை கண்டு, 'யாராவது, உம்மை கண்டால், இங்கிலாந்தில் பஞ்சம் வந்து விட்டதாக நினைப்பர்...' என்றார்.
இதை சொன்ன, செஸ்டர்டென் கனமான உடல் கொண்டவர்.
உடனே, 'இங்கிலாந்தில் பஞ்சம் வந்தது ஏன் என்று, உம்மை பார்த்தால் தெரியும்...' என்று, ஒரு போடு போட்டார், பெர்னாட்ஷா.
அதேபோல், வேறு ஒரு சமயம், ஷாவிடம், 'ரொம்ப கஷ்டப்பட்டு தாடி வளர்க்கிறீர்களே ஏன்...' என்றார், ஒரு நிருபர்.
'நான் ஒன்றும் வளர்க்கவில்லை. அது, தானாகவே வளர்கிறது...' என்றார், ஷா.
விடாப்பிடியாக, 'தாடி வைப்பதால் என்ன லாபம் உங்களுக்கு...' என்றார், நிருபர்.
'லாபம் உண்டே... 'ஷேவ்' செய்வதற்கு செலவிடும் நேரத்தில், ஒரு நாடகம் எழுதி முடித்து விடுவேன்...' என்றார், ஷா.
வம்பிழுத்த நிருபர், வாய்மூடி மவுனியானார்.

வாரியார் சுவாமிகள், சொற்பொழிவாற்றும் போது, இடையிடையே சில கேள்விகள் கேட்டு, சரியான பதில் கூறுபவர்களுக்கு, புத்தகங்களை பரிசாக கொடுப்பது வழக்கம்.
ஒரு சமயம், சிறுவர்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கியவர், 'முருகப் பெருமானின் தந்தை பெயர் என்ன...' என்று கேட்டார்.
ஒரு சிறுவன் எழுந்து, 'சிவாஜி...' என்று கூறினான்.
திருவிளையாடல் திரைப்படம் வந்த புதிது என்பதால், அச்சிறுவனின் மனதில் சிவபெருமான் வேடமேற்று நடித்த, சிவாஜிகணேசன் ஆழப் பதிந்திருந்தார் போலும்.
சிறுவனின் பதிலை கேட்டு, மக்கள் சிரித்தனர்.
உடனே, மக்களை பார்த்து, 'ஏன் சிரிக்கிறீர்கள்... அச்சிறுவன் சரியாகதானே கூறியுள்ளான். காந்தியை மரியாதையாக, 'காந்திஜி' என்றும், நேருவை, 'நேருஜி' என்றும் அழைப்பது போல், சிவபெருமானை, மரியாதையுடன், 'சிவாஜி' என கூறியுள்ளான்...' என்றதும், எழுந்த கை தட்டலில், அரங்கமே அதிர்ந்தது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-ஆக-201911:20:14 IST Report Abuse
Natarajan Ramanathan லென்ஸ்மாமாவை காணோம்
Rate this:
Share this comment
Cancel
LovelyMarees - Kutty Japan, Cracker City.,இந்தியா
26-ஆக-201915:36:33 IST Report Abuse
LovelyMarees இறுதியில் சிவாஜி பதில் அருமை.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-ஆக-201907:48:56 IST Report Abuse
skv srinivasankrishnaveni வ நாங்கள் அப்போது டெல்லிலே ஆர்கேபுரம் லே முருகன்கோயில் அருகிலே இருந்தோம் , கோபுரம் கட்டி வாரியார் ஸ்வாமிகள் கதை நிகழ்ந்துது அப்போது என் கடைக்குட்டி மகன் 5வயசு மஹாகுரும்பன் , ரொம்பவே சுட்டி மாலை கதைக்குப்போனேன் குழந்தைகளுடன் மூவருக்கும் கதைக்கேட்க அவ்ளோபிரியமும் உண்டு அப்போது டிவில்லாம் வரலே, கதைக்குப்போனோம் கேட்கவசதியாக குட்டிகளெல்லாம் முன் வாரிசேயிலேஅமர பெரியவா பின்னாடி அமர்ந்தோம் குட்டிஸ் க்கும் எங்களுக்கு இடையே ஒரு கயறு கட்டிருந்தா என் பிள்ளைகளை கவனிக்க வசதியா உக்காந்தேன் , காதை ஆரம்பமாச்சுது வழக்கம்போல வாரியார்ஸ்வாமிகள் இடையேகேள்விகள்கேடப்பார் அதுபோல அன்று பால் களின் மகிமை சொல்லிண்டுருந்தார் எருமைபால்குடிச்சால் மந்தபுத்தி ஆட்டுப்பால் குடிச்சாள் திருப்தயே இல்லாத புத்தி பசும்பால் குடிச்சால்சாத்வீகமான புத்தி என்று சொல்லிவர என் பின்னை ஓலைக்குபோல எழுந்து நின்னு தாத்தா பத்தில்பால் குடிச்சால் என்னபுத்திவருமானதும் அவையே சிரிக்குது ஸ்வாமிகள் கலகலவென்று சிரிச்சுட்டு இந்தமாதிரிதான் கேள்விகேட்க்கிவரும் னு சொல்லிட்டு அவனுக்கு ஒரு பென்சில் தந்தார் மறக்கவேமுடியாது இந்நிகழ்வு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X