அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:00

ஆர். காளிதேவி, மறைமலைநகர்: வாய்ப்புக்காக காத்திருப்பவர் - அதை உருவாக்கிக் கொள்பவர்... யார் புத்திசாலி?
இரண்டாமவர் தான். சமீபத்திய உதாரணம்: சரவணபவன் ராஜகோபால். சென்னை, கே.கே.நகரில், சாதாரண மளிகை கடை துவங்கி, கோடீஸ்வரர் ஆனவர்! (அவரது மறுபக்கம் கேவலமானது; அதை நாம் புரட்ட வேண்டாம்!)

ஆணை கூத்தன், சென்னை: தற்போது எடுக்கும் திரைப்படங்கள், 100 - 200 கோடிகளில் எடுத்து விட்டு, கட்டணத்தை, 200 - 300 ரூபாயாக வைப்பதில் என்ன நியாயம்?
முதலாவது, 'அள்ளி' விட சேர்த்து வைத்துள்ளனர்... இரண்டாவது, நடிப்பதற்கு நடிகையரும் கிடைத்து விடுகின்றனர். மூன்றாவது, 'சேர வேண்டியவர்'களுக்கு, 'பெட்டி'கள் பலவும் கோடிகளுடன் சேர்ந்து விடுகின்றனவே... அதன்பின், எங்கிருந்து நடவடிக்கை வரும்?

எஸ். பிரேமாதேவி, சென்னை: தீய எண்ணங்கள் நுழையாதபடி, மனக் கதவை பூட்டும் சாவி, மனிதனிடம் இருக்கிறதா?
சாவி அவனிடம் தான் உள்ளது. அவன் சாவியைத் தொலைத்து விடவேண்டும். நன்மை வரும்போது மட்டுமே அதை தேட வேண்டும்!

* பி. பாலகுமார், மதுரை: பல அயல்நாடுகள் போல், இரண்டே கட்சி முறையை, நம் நாட்டிலும் கொண்டு வர முடியுமா?
தற்போது, காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்தான, 370ஐ துாக்கி எறியப்பட்டது போல், பற்பல நெருக்கடிகளை ஏற்படுத்தி, 'திண்டுக்கல்'லின் வியாபாரத்தை, சிறிய கட்சிகளின் மூலம் பெருக்கி விடுவர் என்றே தோன்றுகிறது

* எஸ். தீபா, சாலிகிராமம், சென்னை: அலுவலகத்தில், சிலருக்கு மட்டும், சிறப்பு முக்கியத்துவம் கிடைக்கிறதே... அது, அதிர்ஷ்டத்தினாலா?
நீங்கள் கேட்பது போன்று, உலகில் எதுவும் இருப்பதாகவே நான் நம்பவில்லை. தன் மூளையை பயன்படுத்தி, அபார வெற்றிகளைக் குவிப்பவர்களுக்கும், தன்னை விட மேலானோருக்கு கொடுக்கும் மரியாதையில் கிடைப்பதையே, 'அதிர்ஷ்டம்' என்று கூறித் திரிகின்றனர்!

பி. கவிதா, சிதம்பரம்: சசிகலா, 'வெளியே' வந்து, அ.தி.மு.க.,வின் தலைமையை ஏற்க வாய்ப்பு உள்ளதா?
இதென்ன கேள்வி... 100க்கு 120 சதவீதம் வாய்ப்புள்ளது. சிறந்த, 'கட்-அவுட்' தயாரிப்பாளர் ஒருவர் மூலம், தன் தலையை அளவெடுத்து, அதில், 'அ.தி.மு.க., தலைமை' என, வண்ணத்தில் எழுதி, அதை சூடிக்கொண்டால்... 'தலைமையோ தலைமை' பொறுப்பு தானே!

பாரதி முருகன், மணலுார்பேட்டை: வெளிநாட்டு, உ.பா.,களில் உங்களுக்கு பிடித்தது எது... என்னிடம், இந்த கேள்வியை கேட்கிறீர்களே... லென்ஸ் மாமாவிடம் இதற்கான பதிலைக் கேட்டேன்...
இங்கிலாந்து நாட்டில், ஸ்காட்லாண்ட் பகுதியில், தயாராகும், 12 ஆண்டுகள், 'ஜானி வாக்கர் - டபுள் பிளாக்' தான் பிடிக்குமாம்... அவ்வப்போது, ரஷ்ய நாட்டில் தயாராகும், 'வோட்கா' என்ற, உ.பா.,வை சாப்பிட்டு விடுவாராம்; இதில், தண்ணீர் கூட கலக்க வேண்டாமாம்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-செப்-201903:30:32 IST Report Abuse
skv srinivasankrishnaveni அதிருஷ்டம் பற்றிய கேள்விக்குப்பதில் நன்னாயிருக்கு எனக்கும் ஒருசமயம் லக்கே எனக்கு இல்ல என்று புலம்பல் குணம் இருந்துது நெறைய படிப்பேன் ஒருசமயம் துளசிதாஸரின் வரலாறு படிச்சேன் அதுஉடல்முழுதும் விதைத்தவடிந்து தங்கத்துலே புரண்டாலும் ஒட்டுறதுதான் ஓட்டும் என்றவரிகள் என்னைமாற்றியது எப்போதும் வருவாய்க்குள்ளேதான் சிலவு என்று வாந்ததால் ஆசைகள் அதிகம் இல்லே பொன்னாசை இல்லவே இல்லே இனிவரை திருமணம் முன்னாலும் வாங்கலே பிறகும் வாங்கினதேயில்லீங்க தேவையே இல்லே என்ற எண்ணம் தான் என் மக்கள் மருமகளும் அப்படியே இருக்காங்க அதுபேரானந்தம் நம்ம படைத்த அன்றே இறைவன் நமக்கு இவ்ளோதான் என்று எழுதிருக்கான் என்று நம்பிக்கை உண்டு , அப்படியும் ஒருசமயம் பலரும் ஜாலியாக உலகம் சுற்றும்போது நமக்கு இல்லே என்ற ஏக்கம் இருந்துது இப்போது நாம் இருக்குமிடம் உலகம் என்று ஞ்ஞானம் வந்தாச்சு
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-செப்-201918:49:26 IST Report Abuse
skv srinivasankrishnaveniகோந்தை தடவிண்டு தங்கத்துலே புரண்டாலும் போடுவதுதான் ஓட்டும் என்ற வரிகள் என்றுஇருக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X