திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2019
00:00

முனைவர் யோ. ஞான சந்திர ஜான்சன் எழுதிய, 'ம.பொ.சி.,யின் வாழ்க்கை வரலாற்று இலக்கியங்கள்' நுாலிலிருந்து: ஒரு சமயம், காந்திஜி, கள்ளுண்ணாமையை வலியுறுத்தினார். இதன் முதல் கட்டமாக, கள் விற்கும் கடைகளின் முன் நின்று, அமைதியான முறையில் ஆர்பாட்டம் செய்ய கட்டளையிட்டார். வடசென்னையில், இம்மறியலுக்காக அமைக்கப்பட்ட குழுவில், ம.பொ.சி., செயலராக இணைக்கப்பட்டார்.
இவர் எதிர்த்தது, யாரோ முகம் தெரியாத மூன்றாம் மனிதர்களை அல்ல. தன் மொத்த குடும்ப அங்கத்தினரையும் தான்.
கள் அருந்துவதை எதிர்த்ததால், மக்களிடமும், கட்சியிலும் செல்வாக்கு உயர்ந்தது. ஆனால், தன் குடும்பத்தினரால், 'குலத் துரோகி' என, குற்றம் சாட்டப்பட்டார்.
இவர் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர், இவரது ஜாதிக்காரர். ம.பொ.சி., மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதனால், அவரும் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார். ஆனால், மறியலில் ஈடுபட்டதால், 'ம.பொ.சி., வாடகை தரவில்லை...' எனக் கூறி, வீட்டை விட்டு வெளியேற்றினார்.
இவர் குடும்பத்தினர், கள் தொழிலை விடாததால், அரசியல் எதிரிகளின் ஏளனத்துக்கு உள்ளானார், ம.பொ.சி.,
ஒரு கட்டத்தில், ஊராருக்காக, தங்கள் தொழிலை விட்டு விட, வறுமையின் பிடியில் குடும்பம் சிக்கியது. வருமானம் இல்லாமல், தங்கவேல்பிள்ளை சேரி எனுமிடத்தில், பாழடைந்த ஓர் ஓட்டை குடிசையில், தன் குடும்பத்தினருடன் வசிக்க வேண்டி வந்தது. பிறகு, இதுபற்றி வருந்திய, ம.பொ.சி., இப்படி எழுதுகிறார்...
'அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக, அவர்களிடமிருந்து அந்த தொழிலை வேறு நிவாரணம் ஏதும் தராமலே, முற்றிலும் பிரித்து விடுவதென்பது, பரிதாபகரமான விஷயம் தான். திரும்பவும் சொல்கிறேன்... அப்போது, இந்த உண்மை என் மனதில் படவில்லை.
'கொக்குக்கு ஒரே மதி என்பது போல, காங்கிரஸ் கட்டளையை, காந்திஜியின் உபதேசத்தை நிறைவேற்றி வைப்பதையே, என் கடமையாக கருதினேன்.
'அதற்காக, என் குடும்பத்தையோ, குலத்தையோ மறந்து செயலாற்றும் உணர்ச்சி உடையவன் ஆனேன்.
'உயர் கல்வி பயிலாத தொழிலாளியாக இருந்ததால், இதை தவிர, வேறு விதமாக நடந்து கொண்டிருக்க முடியாதல்லவா?'

எழுத்தாளர், வாமனன் எழுதிய, 'திரை இசை அலைகள்' நுாலிலிருந்து: தம் குடும்பத்தில் யாராவது இறந்தால், ரத்த பந்தம் உள்ளவர்கள், அந்திம சடங்குகளை செய்வது வழக்கம்.
ராக பந்தம் உள்ளவர்கள், அந்திம சடங்குகளை செய்த விபரம் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, தான் உயர்ந்ததுடன், பலரை கை கொடுத்து துாக்கி விட்டவர்.
இந்த வகையில், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவால் கண்டுபிடிக்கப்பட்டவர், எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு, பல வாய்ப்புகளை பெற்றுத் தந்தார்.
பிற்காலத்தில், பிள்ளை இல்லாத சூழலில், சுப்பையா தம்பதியரை, தன் வீட்டிலேயே தங்க வைத்து, ஆதரித்தார். அத்துடன், சுப்பையா காலமான போது, அவருக்கான அந்திம சடங்குகளையும் செய்தார், எம்.எஸ்.வி.,
இதே போல், எம்.எஸ்.சுப்பையா நாயுடுவின் இன்னொரு அபிமானி, கண்ணதாசன்.
அவர் கூறுகிறார்:
நானும், விஸ்வநாதனும், 4,000 பாடல்கள் வரை இணைந்து பணியாற்றி உள்ளோம். இதற்கு காரணமானவர், எஸ்.எம்.சுப்பையா நாயுடு தான். இதனால், 1975ல் நடந்த ஒரு விழாவில், குரு காணிக்கையாக, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு, 'பொற்கிழி' வழங்கினோம்.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
26-ஆக-201909:11:39 IST Report Abuse
சுந்தரம் மறைந்த திரையிசை அமைப்பாளர் திரு. சி ஆர் சுப்பராமன் அவர்களுக்குதான் மறைந்த திரு. எம் எஸ் வி அவர்கள் இறுதி சடங்குகளை செய்தார். திரு. சி ஆர் சுப்பராமன் மறைந்த பின்னர் அவரது மனைவியையும் தன் இல்லத்திலேயே வைத்து காப்பாற்றினார். அவர் மறைந்த போதும் திரு. எம் எஸ் வி அவர்களே அவருக்கும் இறுதி சடங்குகளை செய்தார்.
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
25-ஆக-201907:40:48 IST Report Abuse
G.Prabakaran எம் ஜி ஆரும் முதல்வர் ஆனவுடன் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஓர் விழா எடுத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்களுக்கு பொற்கிழி வழங்கினார்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
26-ஆக-201909:04:35 IST Report Abuse
சுந்தரம் எம் ஜி ஆர் ஜெயலலிதா செஞ்ச நல்ல காரியங்களை எல்லாம் செய்தியா நாங்க போட மாட்டோம்.மோடி எதுவும் செஞ்சா சிறப்பு மலர் போடுவோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X