வெற்றியின் ரகசியம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
00:00

மாமண்டூர் என்ற நாட்டை ஆண்ட மன்னர், நற்குணங்கள் பொருந்தியவர். ஆளும் திறன் பெற்றவர். தியானம், யோக பயிற்சி மீது, தீராத பற்று கொண்டவர்; அவற்றை பின்பற்றுவதன் மூலம், மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும் என்ற கருத்தில், அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்.
அதனால், நாட்டில் அனைவரையும், தியானம் கற்க வலியுறுத்தினார். மன்னர் வலியுறுத்தியது கண்டு, சிலர் ஆத்திரம் அடைந்தனர்; அவரை எதிர்த்ததுடன், யோகா, தியானம் குறித்து, தவறான பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு குரல் எழுப்பியவர்களில், அமைச்சரின் மகனும் இருந்தான். அவன் மீது கடும் கோபம் கொண்டார் மன்னர். இதை அறிந்து, அஞ்சி நடுங்கிய அமைச்சர், மகனை அழைத்து அறிவுரை வழங்கினார். எதிர்ப்பை கைவிட கேட்டுக்கொண்டார்.
அறிவுரையை கேட்டவன், 'தந்தையே... நான் ஏதோ தவறான வழியில் செல்வதாக முடிவுக்கு வந்து விட்டீர்கள். நான் எந்த குற்றமும் செய்யவில்லை; தியான பயிற்சி செய்ய மறுப்பது எப்படி குற்றமாகும். என் போன்று பலரும் எதிர்க்கின்றனர்; இந்த பயிற்சியை பின்பற்ற ஏன் கட்டாயப் படுத்த வேண்டும்; பயற்சி செய்வது உங்கள் விருப்பம் என்றால், அதை மறுப்பதற்கு எனக்கும் உரிமை உள்ளது...' என்று கூறினான்.
மகனின் பேச்சும், போக்கும் அமைச்சரை வருத்தியது. எந்த முகத்தோடு மன்னரை சந்திப்பது என்ற கவலையும் பிடித்தாட்டியது.
தன்னை உடனே சந்திக்க வரும்படி தகவல் அனுப்பியிருந்தார் மன்னர். வாடிய முகத்துடன் அரண்மனைக்குச் சென்றார் அமைச்சர்.
கவலைக்கு காரணம் கேட்ட மன்னரிடம், 'மதியிழந்த பிள்ளையை பெற்றதற்காக, என்னை மன்னியுங்கள்; எவ்வளவு அறிவுரை கூறியும், என் மகன் தியான பயிற்சியில் சேர மறுக்கிறான்...' என்றார்.
'இதற்காகவா, கலக்கமும், வருத்தமும் அடைந்தீர்; அவனை வழிக்கு கொண்டு வரும் பொறுப்பை, என்னிடம் விட்டு, அரசு பணிகளில் கவனம் செலுத்துங்கள். கவலை வேண்டாம்...' என்று, ஆறுதல் கூறினார்.
சற்று தேறிய அமைச்சர், அரசு பணிகளில் மூழ்கினார்.
படைவீரர்களை அழைத்து, 'உடனே, அமைச்சரின் மகனை இழுத்து வாருங்கள்...' என்று உத்தரவு பிறப்பித்தார் மன்னர்.
சற்று நேரத்தில் இழுத்து வந்து மன்னர் முன், நிறுத்தினர். அவனிடம், 'இன்னும், ஏழு நாளில், நீ துாக்கிலிடப்படுவாய்...' என்றார் மன்னர். அவையே கலங்கி நின்றது.
இதயம் கனத்த அமைச்சர், 'மகனை திருத்துவதாக கூறிய நீதி தவறாத மன்னர், கொலைக்களத்துக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளாரே' என, கவலையுடன் நடைபிணமானார்.
அமைச்சர் மகனை, பாதாள சிறையில் அடைத்தனர். மரண அச்சத்தால், அணு அணுவாக துடித்தான். சாப்பிடவும், துாங்கவும் முடியாமல் தவித்தான்.
தண்டனையை நிறைவேற்றுவதற்கு முந்திய நாள், சிறை வளாகத்துக்கு சென்றார் மன்னர்.
அவர் கால்களில் விழுந்த அமைச்சரின் மகன், 'இந்த, ஆறு நாட்களில் மரணம் பற்றிய அச்சத்தையும், வலியையும் உணர்ந்து கொண்டேன். என் சிந்தனை செயலிழந்து, நடைப்பிணமாகி விட்டேன். மரண பயத்தை போக்கும், தியான பயிற்சியில் சேர முடிவு செய்து விட்டேன்...' என்றான்.
திட்டம் வெற்றியடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னர், 'மனிதன், நலமுடன், கவலையின்றி வாழ, யோகா மற்றும் தியானப் பயற்சி அவசியம்... அவற்றை கற்றுக்கொண்டால் சிறப்புடன் வாழ்வாய்...' என்று அறிவுறுத்தினார்.

குட்டீஸ்... தியானமும், யோக பயிற்சியும் தன்னம்பிக்கையை வளர்க்கும். உடலையும், மனதையும் வலுவாக்கும். பயிற்சிகளை தினமும் செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்.
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X