அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2019
00:00

பீரங்கி குண்டு மரம்!
இளஞ்சிவப்பு வண்ணத்தில், மாறுப்பட்ட தோற்றம் உடையது நாகலிங்க மலர். விரும்பத்தக்க நறுமணம் மிக்கது. பூவின் இதழ்களும், மகரந்த துாவியும் படமெடுத்து ஆடும் பாம்பு போல் தோன்றும்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்தியாவில் அறிமுகமானது நாகலிங்கம் மரம். மித தட்ப வெட்பத்தில் நன்கு வளரும். நீலகிரி மாவட்டம், பார்லியாறு பகுதியில் முதலில் வளர்த்தனர் ஆங்கிலேய அதிகாரிகள். பின், தமிழகம் எங்கும் பரவி, நம் கலாசாரத்தின் ஒரு பகுதியாகி விட்டது.
இதன் தாவரவியல் பெயர், கோ ரூபியா கினென்சிஸ்; லெசிதிடசாய் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. தென் அமெரிக்கா கண்டத்தை தாயகமாக கொண்டது. பீரங்கி குண்டு மரம் என்ற பெயரும் உண்டு. இந்த மர விதை, பீரங்கி குண்டு போல் காட்சியளிக்கும்.
ஐரோப்பா கண்டம், பிரான்ஸ் நாட்டு தாவரவியல் அறிஞர், ழீன் பாப்டிஸ்ட் கிறிஸ்டோபர், 1755ல், இதற்கு தாவரவியல் பெயரை சூட்டினார்.
இது, 35 மீட்டர் உயரம் வரை வளரும். ஆண்டு முழுவதும் கொத்துக்களாக பூக்கும். அடி மரம் முதல் எல்லா பகுதிகளிலும் பூங்காம்புகள் வளரும்; மரமே பூக்களால் நிறைந்து ஈர்க்கும். ஒரு மரத்தில், ஒரே நாளில், 1000 மலர்கள் கூட பூக்கும். அலங்கார மரமாக பல நாடுகளில் வளர்க்கப்படுகிறது.
மலர்கள், பாம்பு படமெடுப்பது போன்றிருப்பதால், புனித வழிபாட்டுக்கு உரியதாக கருதப்படுகிறது. சிவாலயங்களில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது; புத்த மத வழிபாட்டிலும், இந்த மலருக்கு முக்கியத்துவம் உண்டு.
பல்வலி, தோல் நோய்கள், வயிற்று வலி, மலேரியாவை குணப்படுத்தும் மருந்துகள், இந்த தாவரத்தில் தயாரிக்கப்படுகிறது.

'டிவி' நேரம்!
'குழந்தைகளை, கணினி, அலைபேசி மற்றும் 'டிவி' போன்ற மின்னணு திரைகளை வெகுநேரம் பார்க்க அனுமதிக்க கூடாது. உடல் அசைவுகளற்ற நிலையில், கணினியில் நீண்ட நேரம் விளையாட அனுமதிக்க கூடாது.
இரண்டு முதல், நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஒரு நாளைக்கு, 1 மணிநேரம் மட்டுமே மின்னணுத் திரையை பார்க்க அனுமதிக்க வேண்டும்.
இந்த அறிவுரைகள், ஐக்கிய நாடுகள் சபையின், உலக சுகாதார நிறுவனம் தரும் எச்சரிக்கை. பல நாடுகளில், துாங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே, மின்னணு திரைகளை பார்க்க, குழந்தைகளை அனுமதிக்க கூடாது என்று தடை உள்ளது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தான் சிக்கல் உள்ளது.
குறும்பு செய்யும் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாத பெற்றோர், அலைபேசி, கணினி, 'டிவி' போன்ற மின்னணுத் திரைகளை, வரையறை இன்றி பார்க்க அனுமதிக்கின்றனர்.
இந்த பழக்கம், அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்துவதுடன், உடல் பருமன் போன்ற நீண்ட கால பிரச்னைகளுக்கும் காரணமாகும் என, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குழந்தைகளின் நடத்தை, துாக்கம் பற்றி, உலக சுகாதார நிறுவனம் முதன்முறையாக வழிகாட்டும் விதிகளை வகுத்துள்ளது.
கார் இருக்கை, நாற்காலிகளில், அதிகபட்சம், ஒரு மணிநேரத்துக்கு மேல் குழந்தைகள் செலவிடக் கூடாது என்பதும் அவற்றில் ஒன்று.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X