இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2019
00:00

ஆண் பிள்ளைகளும் காக்கப்பட வேண்டியவர்களே!
பக்கத்து வீட்டு பெண்ணின் மகன், ஏழாம் வகுப்பு படிக்கிறான். அப்பெண்ணின் கணவர் இறந்து விட்டார். வீட்டு வேலை செய்து, பிள்ளையை படிக்க வைக்கிறாள். ஒரு வாரமாக வீடு பூட்டியிருந்தது. அவள் வந்ததும் விசாரித்தேன்.
'நன்றாக படிக்கக் கூடிய மகன், இப்போதெல்லாம், பள்ளியில், சரியாக படிப்பதில்லை; எதையோ பார்த்து பயந்து, பேய் அறைந்தார் போல் இருக்கிறான். டியூஷன் போக மறுக்கிறான்.
'என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'அவனுக்கு பேய் பிடித்திருக்கிறது...' என்று எல்லாரும் கூறினர். அதனால், மசூதி, கோவில் என, அழைத்துச் சென்று, பேய் விரட்டி வந்தேன்...' என்று கூறி, அழுதாள்.
அப்பையனின் செய்கைகள் வித்தியாசமாக இருக்கவே, அருகில் உள்ள டாக்டரிடம் அழைத்துச் சென்றோம். பிறகு தான் உண்மை தெரிய வந்தது.
பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவன் ஒருவன், இவனை தனியே அழைத்துச் சென்று, மொபைல் போனில், 'பலான வீடியோ'க்களை காண்பித்து, அவனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளான்.
'இதை வெளியே சொன்னால், உங்க அம்மாவை கொலை செய்து விடுவேன்...' என்று மிரட்டியதால், யாருக்கும் சொல்லாமல் மறைத்துள்ளான்.
இந்த விஷயம் பிடிக்காமல், மனதளவில் பாதிக்கப்பட்டு, பித்து பிடித்தவன் போல் ஆகி விட்டான்.
விஷயம் தெரிந்த பின், பள்ளிக்கு சென்ற அப்பெண், மகனின் இந்த நிலைக்கு காரணமானவனை, பலர் முன்னிலையில் செருப்பால் அடித்தாள். அவன் மேல், நிறைய பிள்ளைகள், இதே போல் புகார் சொல்லவே, அவனை, பள்ளியை விட்டே துரத்தியது, பள்ளி நிர்வாகம்.
பெற்றோரே... பெண் பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகளையும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- கே.ஸ்ரீ, சென்னை.

புடவை துாளி!
மகள் வயிற்று பேரனை, தொட்டிலில் போடும் நிகழ்ச்சிக்கு, மூதாட்டி ஒருவர் வந்திருந்தார்.
குழந்தையை பிளாஸ்டிக் தொட்டிலில் படுக்க வைத்திருந்ததை பார்த்தவர், 'கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, குழந்தையை தொட்டிலில் போடாமல், பருத்தியிலான பழைய புடவைகளை துாளியாக கட்டி தான் துாங்க வைப்பர்.
'இதனால், பல நன்மைகள் உண்டு. கோடை மற்றும் மழை காலத்திற்கு பருத்தி புடவைகள் இதமாக இருக்கும். புடவை துாளி, குழந்தையின் இரு காதுகளை அணைத்தபடியும், கண்களை பாதிக்கு மேல் மறைத்தபடியும் இருப்பதால், சத்தமும், வெளிச்சமும், காதுகளையும், கண்களையும் பெரிய அளவில் பாதிக்காது.
'மின் விசிறி காற்றும் தேவையான அளவுக்கு தான் உள்ளே புகும். எல்லாவற்றுக்கும் மேலாக, புடவையின் மணம், தாயின் மடியிலேயே உறங்குவது போன்ற ஒருவித பாதுகாப்பு உணர்வுடன் குழந்தை உறங்கும். இவை அனைத்தும், இரும்பு அல்லது பிளாஸ்டிக் தொட்டிலில் இருக்காது...' என்றார்.
அவர் கூறியபடியே, புடவை துாளியில், குழந்தையை துாங்க வைத்தோம்; அமைதியாக துாங்கியது, குழந்தை. மற்றவர்களும் இதை கருத்தில் கொள்ளலாமே.
—எஸ்.ஆர்.எஸ். ராகவன், சென்னை.

உயிரை காப்பாற்றிய பயிற்சியும், பகிர்வும்!
அண்மையில் என் தோழி வீட்டில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தோழியும், அவள் பிள்ளையும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
'இவ்வளவு பெரிய தீ விபத்து நடந்தும், எப்படி தப்பினாய்...' என்று, அக்கம்பக்கத்தினர், அவளிடம் விசாரித்தனர்.
'கணவர் வேலை பார்க்கும் தொழிற்சாலையில், அவ்வப்போது, தீ விபத்தை தடுக்கும் முறை, அதிலிருந்து தப்பும் முறைகள் பற்றி பயிற்சி கொடுப்பர். அங்கு சொல்லிக் கொடுப்பதை, உடனுக்குடன் என்னிடம் சொல்லி விடுவார். அதன்படி, சேலையில் தீ பிடித்ததும், ஓடாமல், தரையில் உருண்டு, தீயை அணைத்தேன்.
'அதன்பின், குழந்தையுடன் தவழ்ந்தபடியே வெளிபக்க கதவை திறந்து, தப்பினேன்...' என்றாள்.
மேலும், 'தீ பிடித்ததும், நடந்தாலோ அல்லது ஓடினாலோ உடலில் தீ பரவக்கூடும். புகை மூட்டத்தால் வெளியேறும் பாதை தெரியாமல் தவிக்க வேண்டியிருக்கும். தரை பகுதியில் புகை மூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், தவழ்ந்து எளிதாக தப்ப முடியும் என, கணவர் கூறிய ஆலோசனை மற்றும் பயிற்சி கொடுத்த தொழிற்சாலையும் தான், இதற்கு முழு காரணம்...' என்று பாராட்டினாள்.
தொழிற்சாலைகளில் கொடுக்கப்படும் முதலுதவி மற்றும் தீ விபத்து பயிற்சிகளை, வீட்டில் மனைவியிடம் சொல்வது, அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, ஆண்கள் உணர வேண்டும். இது, ஆபத்து காலத்தில் கை கொடுக்கும்.
பே. ராமலட்சுமி, ராஜபாளையம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-செப்-201921:34:30 IST Report Abuse
D.Ambujavalli எங்கள் பிளாட்களில் சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற நிகழ்ச்சிகளில் தீயணைப்பு நிபுணர் பயிற்சி அளிப்பார். செக்யூரிட்டிகளுக்கும் மாதம் ஒருமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
08-செப்-201913:47:22 IST Report Abuse
Girija @- கே.ஸ்ரீ, சென்னை. ஆண் குழந்தைகள் என்றாலும் கண்காணிப்பு அவசியம் இது சில பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்களுக்கு புரியாது, ஆண் பிள்ளை என்றால் செல்லம் கொடுத்து அவர்களே கெடுத்துவிடுவார்கள். குழந்தைகளின் நண்பர்களை பற்றி கேட்டு தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும், தவறான நண்பர்களுடன் சேர்வதாக தெரிந்தால் நாசூக்காக திருத்த வேண்டும். டைம் மேனேஜ்மென்ட் செய்ய வேண்டும், எத்தனை மணி நேரம் பள்ளி அல்லது வீட்டை தவிர வெளியில் செலவழிக்கின்றனர், யாருடன் என்ற விவரம் அனுப்புவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டும், நண்பர்களின் பெற்றோர்களுடனும் அறிமுகத்தில் இருக்கவேண்டும். அடுக்குமாடி குடி இருப்புகளில் குழந்தைகளை ஒரு போதும் வீட்டில் தனித்து விட்டு செல்லாதீர்கள், இப்பொழுதெல்லாம் வடஇந்திய வேலைக்காரர்களை தான் வேலைக்கு வைக்கின்றனர் ஆபத்து அதிகம் அதேபோல் சில வழிசல் மாடர்ன் கிழடுகள் இருந்தால் இன்னும் ஆபத்து. குழந்தைகளிடம் எது நடந்தாலும் தவறு செய்திருந்தாலும் மறைக்காமல் உடனே சொல்ல வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்து, அப்படி சொல்லும்போது, தண்டனைக்கு பதில் பரிசு கொடுத்து, அன்பாக திருத்த வேண்டும்.
Rate this:
Cancel
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
08-செப்-201909:21:39 IST Report Abuse
sivam சேலைல தொட்டில் கட்டுறதுக்கு இப்ப யாரு சேலை கட்டுறால்க ,?
Rate this:
Krish - Chennai ,இந்தியா
09-செப்-201907:03:05 IST Report Abuse
Krish தூளி சேலை இனிமே தனியா விற்க ஆரம்பித்தால், இன்றைய பெண்கள் வாங்கலாம்.. நம்ம Kumaran ஸ்டோர்ஸ் இப்படி ஒரு மார்க்கெட்டிங் செய்யலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X