இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 செப்
2019
00:00

புதுப்புது கதாநாயகி தேடும், ஜெயம்ரவி!
தொடர்ந்து, ஒரே இயக்குனர், ஒரே கதாநாயகி என்றில்லாமல், படத்துக்குப் படம், வெவ்வேறு கலைஞர்களுடன் பணியற்ற ஆசைப்படுவதாக சொல்கிறார், ஜெயம்ரவி. அந்த வகையில், தனி ஒருவன் படத்தில், முதன் முறையாக, நயன்தாராவுடன் நடித்தவர், பூலோகத்தில், த்ரிஷா, போகனில், ஹன்சிகாவுடன் நடித்தார். அதற்கடுத்த படமான, வனமகனில், சாயிஷா, டிக் டிக் டிக் படத்தில், நிவேதா பெத்துராஜ். அடங்கமறு படத்தில், ராசிகண்ணாவுடன் நடித்தவர், கோமாளி படத்தில், முதன் முதலாக, காஜல் அகர்வாலுடன் நடித்துள்ளார். இதன் பிறகு, தான் நடிக்கும் புதிய படத்தில், டாப்சியுடன் ஜோடி சேரப் போகிறார்.
ஆக, தொடர்ந்து, படத்துக்குப் படம், வெவ்வேறு கதாநாயகியருடன் நடிக்க விரும்புகிறார்.
சினிமா பொன்னையா

பிந்து மாதவி வெளியிட்ட, அதிர்ச்சி தகவல்!
ஆடையின்றி நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார், அமலாபால். இதை அடுத்து, முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த நடிகையருக்கே, இப்போது ஆடையின்றி நடிக்கும் தைரியம் வந்து விட்டது. அந்த வகையில், பிந்துமாதவியும், 'சமூகத்துக்கு நல்ல தகவல் சொல்லக் கூடிய படமாக இருந்தால், நானும், ஆடையின்றி நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்று, அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளார். கோடி வித்தையும் கூழுக்குத்தான்!
எலீசா

ரஜினியுடன் நடிக்க விரும்பும், வித்யாபாலன்!
அஜீத்துடன், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள, பாலிவுட் நடிகை, வித்யா பாலன், இனிமேல், தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதோடு, 'ரஜினியுடன், கபாலி படத்தில் நடிக்க, வாய்ப்பு வந்தது. ஆனால், 'கால்ஷீட்' பிரச்னையால், வாய்ப்பு நழுவிப் போனது. மீண்டும் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தால், நடிக்க தயாராக இருக்கிறேன்...' என, தெரிவித்துள்ளார். ஆள் அறிந்து ஆசனம் போடு; பல் அறிந்து பாக்கு போடு!
எலீசா

அரசியலுக்கு வருகிறார், யாஷிகா ஆனந்த்!
இதுவரை, எந்த நடிகையும், 'ரோப்' இல்லாமல் சண்டை காட்சியில் நடித்ததில்லை. ஆனால், ஜாம்பி படத்தில், 'ரோப்' பயன்படுத்தாமல் சண்டை செய்திருப்பதாக மார்தட்டுகிறார், யாஷிகா ஆனந்த். அதோடு, இப்போது, சினிமாவில் கவர்ச்சி சேவை செய்து வரும் அவர், 'அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான், என் சினிமா கனவு. எதிர்காலத்தில், அரசியலுக்கு வந்த பின், முழுநேர சமூக சேவகி ஆகி, அதிலும் ஒரு கலக்கு கலக்குவேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
மங்காத்தா இயக்குனர், வம்பு நடிகரை வைத்து, அரசியல் சம்பந்தமாக படத்தை இயக்க இருந்தார். ஆனால், அவர், ஆரம்பத்திலேயே, 'கால்ஷீட்' சொதப்பல் செய்ய, அந்த படம் நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது, வம்பு நடிகருக்காக உருவாக்கிய கதையில், தெலுங்கு நடிகரை நடிக்க வைக்க தயாராகி விட்டார், மங்காத்தா இயக்குனர். மேலும், அந்த படத்தை, 'மெகா ஹிட்' ஆக்கி, 'இப்படியொரு நல்ல படத்தை, 'மிஸ்' பண்ணிட்டோமே...' என்று, வம்பு நடிகரை, 'பீல்' பண்ண வைக்க முடிவு செய்துள்ளார். எனவே, சில திருத்தங்களை செய்து, அதிரடியான அரசியல் கதையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

'டேய் மச்சி... பிரெண்டோட பிறந்த நாள் விழா, 'புட்பால் மேட்ச்' மற்றும் ஓட்டலில் பழைய மாணவர்களுடன் சந்திப்பு என்று, பல இடங்களுக்கும் கூப்பிட்டப்ப, வரேன்னு சொன்ன... உனக்காக, எல்லா ஏற்பாடுகளையும் செய்துட்டு, காத்திருக்க வைத்து, இப்ப, வரலைன்னு தகவல் அனுப்புற... என்னடா ஆச்சு உனக்கு... வர வர, சிம்பு மாதிரி ஆயிட்டடா நீ...' என்று அலுத்துக் கொண்டான், நண்பன்.

சினி துளிகள்!
* வெங்கட்பிரபுவின், மாநாடு படத்தில் இருந்து, சிம்பு நீக்கப்பட்ட நிலையில், கல்யாணி பிரியதர்ஷன் அந்த படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

அவ்ளோதான்!

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X