இடது கையில் சக்கரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2019
00:00

பெருமாளின், 108 திவ்ய தேசங்களில், உயரமான, உலகளந்த பெருமாள், விழுப்புரத்தில் இருந்து, 35 கி.மீ., துாரத்திலுள்ள, திருக்கோவிலுாரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயர், திரிவிக்கிரமர். இவரிடம், சங்கு, சக்கரம், இடம் மாறி இருக்கும்.
மகாபலி மன்னனை ஆட்கொள்ள, குள்ள வடிவில் வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். இந்த ரூபத்தை மீண்டும் காண, மிருகண்டு முனிவர் விரும்பினார்.
இதற்காக, தன் மனைவி மித்ராவதியுடன் கிருஷ்ணபத்ரா - தென் பெண்ணை நதிக்கரையில் உள்ள திருக்கோவிலுாரில் தவம் செய்து, அன்னதானம் அளித்தார்.
அன்னதானம் முடிந்த பின், ஒரு முதியவர் வந்து, உணவு கேட்டார். வீட்டில் ஒரு நெல்மணி கூட இல்லை.
எனவே, அப்பெண்மணி, பெருமாளை நினைத்து, ஒரு பாத்திரத்தை கையில் எடுத்து, 'நான் கற்பில் சிறந்தவள் என்பது, உண்மையானால், இந்த பாத்திரம் நிரம்பட்டும்...' என்றாள்; அன்னம் நிரம்பியது.
முதியவராக வந்தவர், அவர்களுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டினார். பிறகே, அவர், பெருமாள் என தெரிய வந்தது.
பொதுவாக, பெருமாளின் வலது கையில், சக்கரமும், இடது கையில், சங்கும் வைத்திருப்பார். ஆனால், இங்கு, பெருமாள், மிருகண்டு முனிவரின் உபசரிப்பில் மகிழ்ந்து, தன்னை மறந்த நிலையில், வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்திக் கொண்டார். இத்தகைய கோலத்தை காண்பது, மிகவும் அரிது.
தாயாரை, பூங்கோவல் நாச்சியார் என்கின்றனர்.
பெருமாளின் துாக்கிய வலது திருவடிக்கு, பிரம்மாவும், கீழே ஊன்றிய திருவடிக்கு, மகாபலியின் மகன், நமச்சு மகாராஜாவும், பூஜை செய்கின்றனர்.
பெருமாள் அருகில், மகாபலியின் பெரிய தாத்தா, பிரகலாதன், லட்சுமி, மகாபலி, அசுர குரு சுக்ராச்சாரியார், மிருகண்டு மகரிஷி, அவரது மனைவி, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், கருடாழ்வார் உள்ளனர்.
எனவே, ஒட்டுமொத்த வைகுண்டத்தையே இங்கு தரிசிக்கலாம்.
மூலவர் விக்ரகம், மரத்தால் ஆனது.
சிவாலய பிரகாரங்களில் தான், விஷ்ணு துர்க்கையை காண முடியும். ஆனால், இங்கு, பெருமாள் சன்னிதி அருகில், விஷ்ணு துர்க்கையை தரிசிக்கலாம். பெருமாளை மட்டுமே பாடும் திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும், 'விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்...' என்று பாடியுள்ளார்.
இங்கு, 192 அடி உயரமுள்ள, தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் உள்ளது. முதல் இடம், ஸ்ரீரங்கம்; அடுத்து, ஸ்ரீவில்லிபுத்துார்.
மூலவருக்கு பின்புறம், வாமனர் அருளுகிறார். நுழைவு வாயிலில், சாளக்கிராம கிருஷ்ணர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கிய பின், மூலவரை வணங்குவது மரபு.
ஓணம் பண்டிகையன்று, இங்கு சென்று வரலாம்.

தி. செல்லப்பா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X