முதல்வர் பேசுகிறேன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2019
00:00

'அல்வேர்னியா பள்ளி' காலி பணியிடம் பற்றி நான் கேள்விப்பட்டப்போ, எனக்கு வயசு 22.

'அப்போ நான், முதுகலை படிச்சு முடிச்சிருந்தேன். என்னோட திறமை, '10ம் வகுப்புக்கு ஆசிரியை'ங்கிற அந்தஸ்தை எனக்கு கொடுத்தது. சமூக அறிவியல், பிரெஞ்சு ஆசிரியைன்னு, 23 ஆண்டு அனுபவம். கடந்த இரண்டு ஆண்டுகளா, கோவை - மான்செஸ்டர் சர்வதேச பள்ளியோட முதல்வர். கல்வித்துறையில எனக்கு இது, 25வது ஆண்டு!' - ஜெயந்தி ராபர்ட்.

நான் வந்தபின்...
நடுநிலைப் பள்ளிக்கு மேல்நிலைப் பள்ளி அந்தஸ்து கிடைச்சிருக்கு; கடந்த ஆண்டு சாலை விழிப்புணர்வு சம்பந்தமா எங்க மாணவர்கள் முன்னெடுத்த சிறப்பு நிகழ்வுக்கு, 'கின்னஸ்' சாதனை பட்டியல்ல இடம் கிடைச்சிருக்கு.
'துரித உணவுகள்' தொடர்பான ஆபத்துகளை உணர்த்த, என் மேற்பார்வையில நடத்தப்பட்ட 'பாரம்பரிய உணவு திருவிழா'வோட வெற்றி, ஆரோக்கியமான வாழ்க்கை மேல என் மாணவர்களுக்கு மிகச்சிறந்த தெளிவை கொடுத்திருக்கு.

ஆசிரியர்களுக்கு மத்தியில்...
'குளத்து தண்ணி மாதிரி தேங்கிடாம, ஆற்று தண்ணீர் மாதிரி ஓடிட்டே இருக்கணும்'னு, ஆசிரியர்கள்கிட்டே அடிக்கடி சொல்வேன். என்னோட இந்த இனிப்பான ஆலோசனையை, கசப்பான அறிவுரையா எந்த ஆசிரியரும் இதுவரைக்கும் எடுத்துக்கலை.

மாணவச்செல்வங்களிடம்...
நினைவுல வைச்சுக்க சிரமமா இருக்குற வரலாற்று பதிவுகளை...
ஆண்டு, சம்பவம்னு அட்டவணையா பட்டியலிட்டு படிக்கச் சொன்னதுக்கு மாணவர்கள் மத்தியில நல்ல வரவேற்பு.

கொடுத்ததும், பெற்றதும்
கைக்குழந்தையா என் மகன் இருந்த நேரத்துல... பிரெஞ்சு மொழி கத்துக்கிட்டு பட்டயம் வாங்கினது, தினசரி 150 கி.மீ.,க்கு மேல பயணம் பண்ணி சத்தியமங்கலம் பள்ளியில முதல்வரா பணியாற்றினது, ஒருநாள் கூட நேரம் தவறாம பள்ளிக்கு போனது... இதெல்லாம் நான் விதைச்சது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிகாரியா இருந்த பிரவீன்நாயர் என் மாணவர். இதுபோல பல வைரங்கள், என் விதைப்புக்கு விளைச்சலா கிடைச்சிருக்கு.

கம்பீரக்கனவு
பாடத்திட்டத்தோடு சேர்த்து மாணவர்களுக்கு தொழிற்கல்வியையும் புகட்டணும்.

என் எதிர்காலம்
ஓய்வுக்கப்புறம், ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் தொடங்கணும். சமூகத்துல விழிப்புணர்வு ஏற்படுறவிதமா, சிறுகதைகள் எழுதணும்.

என் நாட்டின் எதிர்காலம்
'உறவுகளும், மனிதமும் தான் வாழ்க்கை'ன்னு புரிஞ்சுக்கிட்டா மட்டுமே, என் நாட்டுக்கு எதிர்காலம் உண்டு; நிகழ்காலம் அப்படி இல்லைங்கிறதுல எனக்கு வருத்தம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X