பசுமை நிலம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2019
00:00

செழிமையானது செட்டிபட்டி என்ற கிராமம். வற்றாத ஆறு, கிணறுகளைக் கொண்டது. அங்கு பருவம் தவறாமல் மழை பொழிந்தது.
பருவ மாற்றத்தால், திடீர் என மழை குறைந்தது. பசுமை மறைந்து, மரங்கள் பட்டு சாய்ந்தன. விவசாயமும், தொழில்களும் பாதிப்படைந்தன. குடிப்பதற்கு கூட, தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர்.
அந்த ஊரைச்சேர்ந்த மாணிக்கம், நிறுவனம் ஒன்றில் உயர் பதவி வகித்து வந்தான். விடுமுறையில் கிராமத்துக்கு வந்தான். தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்பட்ட பாதிப்பை அறிந்தான்.
கிராமத்தில், ஏழு நீர்நிலைகள் இருந்தன. அவற்றில், பெரிய ஏரி, கடல் போல் காட்சி தரும். அந்த ஏரிக்கு மக்களுடன் சென்றான் மாணிக்கம்.
அது ஆக்கிரமிப்பால் சுருங்கி, சிறிய குட்டையாக காட்சியளித்தது. முட்புதர்களும், செடிகளும் வளர்ந்திருந்தன. மழைநீர் பாய்ந்து வரும் கால்வாய்கள் எல்லாம் அடைபட்டிருந்தன. அவன் அதிர்ச்சியடைந்து நின்றான்.
'இங்குள்ள, ஏழு நீராதாரங்களும் இப்படித்தான் இருக்கின்றன ஐயா... அதனால் தான் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் கூட இல்லாமல் தவிக்கிறோம்...' என்றார் ஊர் பெரியவர் பொன்னையா. அனைவரும் ஆமோதித்து தலையசைத்தனர்.
அவர் கூறியவற்றை பொறுமையாக கேட்ட மாணிக்கம், 'இறைவன் அற்புதமான இயற்கையை நமது ஊரில் படைத்துள்ளார்; அதை பாதுகாக்க வேண்டாமா... பாதுகாப்பது யார் என்று கேள்வி கேட்கிறோம்... நாமே பாதுகாக்க முயன்றோமா...' என்றான்.
அதை ஆமோதித்த பொன்னையா, 'ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை தான்... முன்னோர் செய்த பணிகளை நாம் தொடரவில்லை...' என்றார்.
'அந்த காலத்தில் நீர்நிலைகளை உருவாக்கி, பருவ காலத்தில் பெய்த மழை நீரை சேகரித்தனர். மரங்களை நட்டு, பசுமையை பெருக்கினர். பாசன வசதி பெறும் வகையில் வாய்க்கால்களை வெட்டி நிலங்களை செழிப்பாக்கினர். அதன் மூலம் வறுமை என்ற பேச்சே இல்லாமல் இருந்தது...' என்றான் மாணிக்கம்.
குறுக்கிட்ட பூசாரி, 'எல்லாம் கடவுள் செயல் ஐயா... நாம் என்ன செய்ய முடியும்...' என்றார்.
'மக்கள் எல்லாம் சேர்ந்து ஏரி, குளங்களை ஆண்டுதோறும் சுத்தம் செய்து பாதுகாத்து வந்தோம்... பொது இடங்களை, ஆக்கிரமிக்காமல் கண்காணித்தோம்...
'தேவையின்றி மரங்களை யாரும் வெட்டியதில்லை. அதனால் தானே, இயற்கை நமக்கு நன்மை செய்தது...
'ஆனால், இன்று அப்படியா... மரங்களை வெட்டி சாய்த்து விட்டோம்; அதனால், மழை குறைந்துவிட்டது. இந்த வறுமைக்கு, நம் தவறு தான் காரணம்; கடவுள் செயல் இல்லை...' என்றான் மாணிக்கம்.
அதை கேட்டு, சிந்தித்த ஊர் மக்கள், 'உண்மைதான்...கடவுளை குற்றம் சொல்லக்கூடாது...' என்று ஆமோதித்தனர்.
மறு நாள் -
கிராம கோவிலில் தியானம் செய்து வணங்கிய மாணிக்கம், 'இந்த ஊர் சிறப்பாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். இறைவன் கொடுத்த நிலத்தை பசுமையாக்க வேண்டும்; இதை ஒரு கடமையாக, இந்த ஊருக்காக மட்டுமல்லாது, நாட்டிற்காகவும் நிறைவேற்ற வேண்டும்...' என்றான்.
'என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா...' என்று சபதம் ஏற்பது போல் மக்கள, ஒரே குரலில் கூறினர்.
புன்னகைத்த மாணிக்கம், 'விளை நிலங்களை அழிக்க மாட்டோம்; கண்மாய்களையும், பொது இடங்களையும் ஆக்கிரமிக்க மாட்டோம்; மரங்களை, தேவையில்லாமல் வெட்ட மாட்டோம்... ஏரி, குளங்களை பாதுகாப்போம்; ஆண்டிற்கு ஒருமுறை அவற்றை துார் வாருவோம்...' என்ற உறுதி மொழியை கூறக் கூறினான்.
அதை, திரும்பக் கூறி, மக்கள் உறுதி ஏற்றனர்.
'இயற்கையை காப்போம்' என, சபதம் செய்தனர். அந்த பணிக்கு, உரிய தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக உறுதி கூறி புறப்பட்டான் மாணிக்கம்.
அந்த ஊரில் மீண்டும் பசுமை நிறைந்தது.
குட்டீஸ்... நாம் வசிக்கும் ஊரை சுற்றி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள் நிறைய உள்ளன. அவற்றால் தான் வளமுடன் வாழ்கிறோம். அவற்றை பாதுகாக்க வேண்டும்.

- எஸ்.செந்தில் குமார்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X