வெள்ளிக் கிழமை தோறும், சிறுவர்மலர் இதழில் வரும், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதியை படித்து, நண்பர்களுக்கும் கூறி, அடக்க முடியாமல் சிரித்து மகிழும் தமிழாசிரியர் நான்.
இலக்கிய கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றுவேன். பார்வையாளர்கள் சோர்ந்து போகும் போதெல்லாம், சிறுவர்மலர் இதழில் படிக்கும், 'ஜோக்ஸ்' சிலவற்றை எடுத்து விடுவேன். துாங்கிவழிவோர் உற்சாகமடைந்து, என் உரையுடன் ஒன்றுவர்.
சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படிப்பதன் விளைவாக, சொந்தமாக, ஜோக்ஸ் சொல்வதும் உண்டு. இவற்றால் ஈர்க்கப்பட்ட ரசிர்கர்கள், அருப்புக்கோட்டை நகைச்சுவை மன்றத்திற்கு, என்னை தலைவராக்கி, 'நகை மாமணி' என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.
இந்த கவுரவத்துக்கான அடிப்படைத் தகுதியை பெற்றுத் தந்ததே, சிறுவர்மலர் இதழில் வரும், 'மொக்க ஜோக்ஸ்' பகுதி என்றால் மிகையாகாது.
என் வயது, 74; வாழ்வின் உயர்வுக்கு பாலமாக அமைந்துள்ள, சிறுவர்மலர் இதழ் சிறப்புற வாழ்த்துகிறேன்!
- கண.கணேசன், விருதுநகர்.