மடத்துக் கருப்பன் என்றால் என்ன? - பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
00:00

சங்கிலி தொடரில் இருக்கும் எல்லா ஏரிகளுக்கும், கட்டாயம் பாதியளவு தண்ணீர் கொடுத்து விடுவர். இதில், ஒட்டுமொத்த மக்களும், கடவுளிடம் வேண்டுவது, கடைசி ஏரி நிறைய வேண்டும் என்று தான்.
ஏரியின் கலிங்கு வரை நீர் நிறைந்து விட்டால், பாதி கொள்ளளவிற்கு நீர் நிறைந்து விட்டது என்று அர்த்தம். இந்த கலிங்குகளுக்கு மேல், 2 அடி உயரத்தில் அணை கற்கள் கொண்டு வலிமையான சுவர் கட்டப்பட்டிருக்கும். இந்த சுவருக்கும், கலிங்குக்கும் இடையே பலகைகளை சொருகி விட்டால், ஏரி நீர் வெளியேறாது. நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிடும்.
கடைசி ஏரி பாதி நிறைந்ததும், அந்த ஏரியின் கலிங்கு மீது பலகை போட்டு நீரை தடுத்து, முழு கொள்ளளவையும் நிறைப்பர்; இப்படி, ஒவ்வொரு ஏரியிலும் இதை செய்வர். கடைசி ஏரி தான் முதலில் நிரம்பும்; முதல் ஏரி கடைசியாக நிறையும். இப்படி, தாமிரபரணி ஆற்றின் சங்கிலி தொடர் ஏரிகளில் கடைசி ஏரி, திருச்செந்துார் குளம்.
கடைசி ஏரியில் ஒரு கோவில் அமைத்திருப்பர். ஏரி நிறைந்ததும், அந்த கோவிலில், சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். இந்த பூஜை தான், சங்கிலி தொடர் ஏரிகளின் உயிர் செய்தி. விவசாயிகள், விவசாயத்தை துவங்கலாம் என்பதற்கான அனுமதி.
எல்லா ஏரிகளும் நிறைந்த பின், பாசனத்திற்கென்று நீர் திறந்து விடப்படும். இதனால், விவசாயிகள் ஒற்றுமையோடு இருந்தனர்.
ஒவ்வொரு ஏரிக்கும், விளைநிலங்கள் போலவே, வடிகால் நிலங்களும் சொந்தமாக இருந்தன. ஏரி நிறைந்து வெளியேறும் உபரி நீர், வடிகால் நிலங்களில் சேர்க்கப்பட்டன. அந்த நீரையும் அடுத்த ஏரிகளுக்கு அனுப்பும் தொழில்நுட்பம் இருந்தது.
அதேபோல், பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு, வயல்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரையும் வீணாக்காமல், அடுத்தடுத்த ஏரியில் கொண்டு போய் சேர்க்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது.
சங்கிலி தொடர் ஏரிகளாக குறைந்தபட்சம், நான்கு ஏரிகளும், அதிகபட்சம், 318 ஏரிகளும் இருந்தன.
இன்று, பாலைவனமாக காட்சியளிக்கும், பாலாறு, தன் குழந்தைகளாக, 318 சங்கிலி தொடர் ஏரிகளை வைத்திருந்த, பெருந்தாய். அத்தனை ஏரிகளுக்கும் நீரை கொடுத்த பிரமாண்டமான நீர்வளம் கொண்ட நதியை தான், அரசியல்வாதிகள், மணலை அள்ளி பாலைவனமாக மாற்றி விட்டனர்.
'நீரை தவிர வேறெதும் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு, இதை பராமரிக்கும் வேலையாவது கொடுங்கள்...' என்று, காலில் விழுந்து முறையிட்டனர், போராடினர், நீர் சமூகத்தினர். விரட்ட விரட்ட விலகாத நீர் போல மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்கள் முன் வந்து விழுந்தனர்.
இவர்களின் வேதனையை உணராத ஆங்கிலேயர்கள், 'இனி, ஏரி பக்கமே வரக்கூடாது...' என்று கட்டளையிட்டனர். அத்துடன், பாரம்பரிய நீர் மேலாண்மை மற்றும் எந்த சூழலிலும் தாக்குபிடித்து வளரும் பயிர்களை பற்றி, ஆங்கிலேயர்கள் கூறியுள்ளதை பாருங்கள்.
தமிழகத்தை சர்வே செய்வதற்காக, 1774ல், இந்தியா வந்த, பெர்னார்ட் என்ற ஆங்கிலேய இன்ஜினியர், தமிழக நீர் நிலைகளை பார்த்து அசந்து போனார். அன்று, 44 ஆயிரம் பெரிய ஏரிகள், தமிழகத்தில் இருந்தன.
'மொத்த நிலத்தின் ஐந்தில் ஒரு பங்கு, நீர் நிலைகளாகவும், நீர் ஆதாரங்களாகவும் மாற்றி இருக்கின்றனர்...' என்று, வியந்தார்.
இன்னொரு இன்ஜினியரான, மேஜர் சாங்க்கே, 'இந்தியர்கள், இந்த அளவுக்கு நீர் அறுவடை அமைப்புகளை அமைத்திருந்தனர் என்றால், இனிமேல், புதிதாக ஒரு நீர்நிலையை அமைக்க நினைத்தால் கூட, அதற்கான ஒரு இடத்தை தேடி கண்டுபிடிப்பது மிக கடினம். இப்படி எல்லா இடங்களிலும் நீர் நிலைகளை அமைத்து, மிக சிறப்பான நீர் மேலாண்மையை கொண்டிருந்தனர்...' என்று சொல்லி, பூரித்து போனார்.
ஆனால், அதன்பின் வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள், நம் நீர் மேலாண்மையை பற்றி கொஞ்சமும் புரிந்து கொள்ளவும் இல்லை; முயற்சி செய்யவும் இல்லை. அதற்கு காரணம், அவர்களை பொறுத்தவரை, இந்தியர்கள் அடிமைகள். அவர்களிடமிருந்து தெரிந்துகொள்ள எந்தவொரு விஷயமும் இல்லை என்ற ஆணவம்.
மேலும், கோவணத்துடனும், குடுமியுடனும் திரிந்த இவர்களுக்கு, நாகரிகம் மற்றும் ஆடை அணிய கற்றுத் தந்தவர்கள் நாம் தான் என்ற பெருமிதமும், அவர்களை சிந்திக்க விடாமல் தடுத்தது.
நம்மிடம் கற்றுக்கொள்ள என்ன தொழில்நுட்பம் இருக்கிறது என்று, நம்மையும் மதிக்கவில்லை; நம் தொழில்நுட்பத்தையும் மதிக்கவில்லை. கேள்வி கேட்க யார் இருக்கின்றனர் என்ற இறுமாப்பில், தங்களுக்கு தோன்றியதையெல்லாம் செய்தனர்.
இந்தியர்களின் பிரதான தொழில், விவசாயம், அது செழிக்க நீர் முக்கியம். அந்த நீரை, நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால், இந்தியர்களை நினைத்தபடி ஆட்டிப் படைக்கலாம் என்றும் முடிவு செய்த ஆங்கிலேயர்கள், 'வருவாய் துறை' என்ற ஒன்றை உருவாக்கினர்.
ஏரிகள், குளங்கள் மற்றும் எல்லா நீர் நிலைகளையும் அதன் கீழ் கொண்டு வந்தனர். அரசின் அனுமதி பெறாமல், யாரும் ஏரி பக்கம் நடக்க கூட முடியாது என்று கடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர்.
நீராணிக்காரர்கள், நீர்கட்டியார், கரையர், மடையர் மற்றும் குளத்துப்பள்ளர் என்று, ஆற்று நீரை ஏரியில் கொண்டு சேர்த்து, ஏரி நீரை வயல்களில் பாய்ச்சி, விவசாயத்திற்காகவே வாழ்ந்த ஒரு சமூகம், தன் சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டனர்; கிராமங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால், தங்கள் உயிர் வேரை அறுத்தது போல் துடிதுடித்தனர்.
நீர் வேலைகளை தவிர, வேறு எதுவும் தெரியாத நீர் சமூகத்தினர், வாழ வழியில்லாமல், குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டனர். வேறு சிலர், தங்கள் சொந்த கிராமங்களை விட்டு, பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு குடி பெயர்ந்தனர்.
தங்களின் கண் முன்னே, ஏரிகளும், குளங்களும் சீரழிவதை கண்டனர். குழந்தையை போல் நீர்நிலைகளை கவனித்த மக்கள், அவைகளின் அழிவை கண்டு ரத்தக்கண்ணீர் வடித்தனர்.
நீர் நிலைகளை எல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்த பின் தான், மேலும், பல பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்தன. அதன் பலனை, இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
- முற்றும் -
தொகுப்பு : சி.பி. செந்தில்குமார்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Johnsekar - chennai,இந்தியா
16-செப்-201909:55:18 IST Report Abuse
Johnsekar விவசாயத்திற்காகவே வாழ்ந்த ஒரு சமூகம், தன் சொந்த மக்களால் புறக்கணிக்கப் பட்டனர் கிராமங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இதனால், தங்கள் உயிர் வேரை அறுத்தது போல் துடிதுடித்தனர் இந்த சமூகம் எந்த ஜாதி தெரியுமா? இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறார்களா?
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-செப்-201904:07:14 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆங்கிலேயனால் முடிஞ்சளவு எதுவும் செய்தான் என்றால் அது அவன் சொந்த வசதிக்குத்தான் இதுபுரியாமல் கேனத்தனமான அரிசியாவியாதிகளால் தான் எவ்ளோ கொடூரமான கொடுமைகள் விளைந்துருக்கு தெரியுமா ஒரு பேக்கு சொல்லித்து ரயில் கொண்டாந்தான் தூங்கிண்டுபோல பிகாஸ் கொண்டுபோகவேமுடியாது டாம் கட்டினான் தன அதிகாரிகள் சூட்=குமா இருக்கவேண்டும் என்று அதனால் மக்களும் பலன் கண்டங்க அவனுக்குமுன்னடியே கல்லணை கட்டினான் கரிகால்சோழன் இன்னும் சாட்சியா நிக்குதே அதன் அமைப்பினை கண்டு ஆளவந்த ஆங்கிலேயன் வியந்தான் இது உண்மை இந்தகல்லணையின்கற்கலைகளவாடி தனக்கே யூஸ் பண்ணிண்டான் ஒரு பன்னாடை இதுவும் உண்மை இதனால் கல்லணைக்கு அபாயம் என்றும்கூட நியூஸ் வந்ததே எவனும் கண்டுண்டானா , தெற்குத்தெரு சாதி சாதிக்கு ஒரு கட்சியும் தான் கண்டோம் நாம் மனிதநேயம் செத்துப்போச்சு , மைக்லே காத்தாமுடியும் மக்கா மனுஷாளுக்கு பத்துமாசம் கர்பவாசம் சத்தியம் பிறக்கும் எல்லா குழந்தையும் அம்மணமா தான் பிறக்குது சாவும் எல்லோரும் நிர்வாணமாத்தான் சாவோம் என்று .திராவிடம்பேசியே தமிழர்களை கொலை செய்துண்டு இருக்கும் இந்தப்பெயர் ஒழியனும்
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
15-செப்-201921:06:21 IST Report Abuse
கதிரழகன், SSLC ஆங்கிலேயன் நீர் மேலாண்மை தொழில் நுட்பம் மட்டும் இல்ல, நம்ம சாத்திரம் எதையும் புரிஞ்சுக்காம, காசு பறிக்க திருச்சபை அமைச்சு தசம பாகம் ன்னு பத்து சதவீதம் வசூல் செஞ்சான். அவன் போனாவிட்டு இன்னமும் மத மாத்தம் செஞ்சு ஆள் பிடிச்சு கறக்கிறானுக காசு. திரும்பி வாங்கடா. வெள்ளைக்கார மதம் கொடூரமானது, ஈவு இரக்கம் இல்லாதது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X