கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - வருமுன் காப்பது கல்லீரலுக்கு நல்லது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
00:00

தனியார் நிறுவனத்தில் வேலை செய்த, 36 வயது இளைஞர் அவர். அம்மா காலமாகி விட்டார்; அப்பாவும், இவரும் மட்டுமே, தனியாக வசிக்கின்றனர். சொந்தம் என்று சொல்லிக் கொள்ள, வேறு யாரும் இல்லை. எதிர்பாராத விதமாக அப்பா இறந்து விட, வழக்கத்திற்கு அதிகமாக, மது குடித்து, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு, ரத்த வாந்தி எடுத்தார். இங்கு வந்த போது, அவரின் வயதைப் பார்த்து, குடல் முழுக்க, தீவிர அல்சராக இருக்கும் என்று நினைத்தேன்.
நிலைமை மிக மோசமாக இருந்ததால், அவசர சிகிச்சை பிரிவில், 'வென்டிலேட்ட'ரில் அவரை வைத்த பின், 'எண்டோஸ்கோபி' செய்தேன்; கல்லீரல் திசுக்கள் முழுவதும் செயலிழந்து, குடல் சுரக்கம் என்ற, 'சிரோசிஸ்' பாதிப்பு வந்திருந்தது.
ஒன்பது யூனிட்டுகள் ரத்தம் ஏற்றியும், ரத்த அழுத்தத்தை சீராக்க இயலவில்லை; இறந்து விட்டார்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், சிரோசிஸ் பாதிப்பிற்கு உள்ளாவதற்கு குறைந்தது, 20 ஆண்டுகள் ஆகலாம். பள்ளியில் படிக்கும் போதே, தினமும் மது அருந்தும் பழக்கம், இவருக்கு இருந்திருக்கிறது.
அளவிற்கு அதிகமாக தினமும் மது அருந்துவதால், உணவுக் குழாய், குடல், இரைப்பை போன்றவற்றில், அல்சர் ஏற்பட்டு, ரத்தக் கசிவு வரலாம்; பிரச்னை தீவிரமானால், உணவுக் குழாய் கிழிந்து விடும் அபாயமும் உள்ளது.
ஜீரண மண்டலம் தொடர்பான பிரச்னைகளுடன் வருபவர்களில், 70 சதவீதம் பேர், சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படும், 'பேட்டி லிவர்' மற்றும் வைரஸ் தொற்று பாதிப்பாலும், 'சிரோசிஸ்' வரலாம் என்றாலும், பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 60 சதவீதம் பேர், 20 வயதிற்குள் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக உள்ளனர்.
இந்த எண்ணிக்கை, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது.கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், துவக்கத்தில், எந்த அறிகுறியும் தெரியாது. பிரச்னை முற்றிய நிலையிலேயே, அறிகுறிகள் தெரிய வரும். அதனால் தான், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்ற, கடைசி நிலையில் இங்கு வருகின்றனர்.
சிரோசிஸ் வந்தால், திசுக்கள் அழிந்து, கல்லீரலில் தழும்புகள் ஏற்படும். கல்லீரலில், ரத்த ஓட்டம் மாறுபட்டு, அழுத்தம் அதிகரிக்கிறது.
மதுவால், முதலில் கல்லீரலில், கொழுப்பு சேர்ந்து, 'பேட்டி லிவர்' எனப்படும், கொழுப்பு அதிகரித்த கல்லீரலாக மாறும்.
அடுத்த நிலையில், 'ஆல்கஹாலிக் ஹெப்படிடிஸ்' எனப்படும், வைரஸ் தொற்று ஏற்படும். இந்த நிலையில், கல்லீரல் செல்கள் செயலிழக்கத் துவங்கும்.
ஒரு முறை அழிந்த செல்களை, மீண்டும் சரி செய்வது இயலாது. மது அருந்துவதை முற்றிலும் நிறுத்தி, முறையான சிகிச்சை செய்தால், மீதி இருக்கும் செல்களை காப்பாற்ற முடியும்.

கல்லீரல் செயல்பாடு
உணவு செரிமானம் ஆனவுடன், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும், ரத்தத்தின் வழியே கல்லீரலுக்குச் சென்று, சுத்தப்படுத்தப்பட்டு, சுத்தமான ரத்தம், இதயத்தின் வழியே, உடல் முழுவதும் செல்லும். தேவையற்ற பொருட்கள், உணவின் வழியே, ரத்தத்தில் கலந்து விடாமல் பாதுகாப்பது கல்லீரல்.
கல்லீரல் செயலிழந்தால், நச்சுப் பொருட்கள் நேரடியாக ரத்தத்தில் கலந்து, கல்லீரலின் வழியே செல்லாமல், வேறு வழியில் செல்லும். இதனால், உணவில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மூளைக்கு நேரடியாகச் சென்று விடும். இதனால், மூளை ஆரோக்கியமாக செயல்படாமல், மனநல பாதிப்புகள் ஏற்படும்.

மதுப் பழக்கம்
சிரோசிஸ் வருவதற்கு, முதல் காரணம் மதுப் பழக்கம். மதுப் பழக்கத்தால், கல்லீரலில் கொழுப்பு சேர்வதைப் போல, அதிக கொழுப்பு உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும், அதிகப்படியான கொழுப்பு கல்லீரலில் சேரலாம்.
இதனால், கல்லீரல் சுரக்கும் என்சைம்களில் மாற்றம் ஏற்பட்டு, திசுக்கள் அழிந்து, சிரோசிஸ் ஏற்படும். இதற்கு அடுத்த நிலையில், கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தடுப்பு முறைகள்
மதுப் பழக்கத்தை நிறுத்துவது, காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், தேவையான நுண்ணுாட்டச் சத்துகள் கிடைக்கும்.
சீரான உடற்பயிற்சி செய்து, உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும். உயரத்தை, செ.மீட்டரில் அளந்து, அதிலிருந்து, 100ஐ கழித்தால் வருவது சரியான உடல் எடை.

வைரஸ் தொற்று
'ஹெப்படிடிஸ் பி, சி' வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், துவக்கத்தில், எந்த அறிகுறியும் தெரியாது.
'பி' கிருமி தாக்காமல் தடுக்க, தடுப்பு மருந்துகள் உள்ளன. இவற்றை எல்லா வயதினரும் போட்டுக் கொள்ளலாம்.
'சி' வைரஸ் பாதிப்பை, ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். இந்த வைரஸ் தாக்கத்தால், சிரோசிஸ் பாதிப்பு இருந்தால், சரியான மருந்துகள் மூலம், முற்றிலும் சரி செய்ய முடியும்.

கணையம்
மதுப் பழக்கம் கல்லீரலை மட்டுமல்ல, கணையத்தையும் பாதிக்கும். சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு, 90 சதவீதம் உதவி செய்வது, கணையம் சுரக்கும் ஜீரண அமிலம்.
கணையம் பாதிக்கப்பட்டால், உணவு செரிக்காது; பசி இருக்காது; இன்சுலின் சுரப்பது குறையும்; ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். கடைசி நிலையில், கணையத்தில் கேன்சர் வரும் வாய்ப்பும் உள்ளது.
மதுப் பழக்கத்தால், கணையம் பாதிக்கப்படட், 37 வயதுக்காரரை அழைத்து வந்தனர். திருமணம் செய்த போது, மதுப் பழக்கம் இருப்பது தெரியாது. இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
என் மகளுக்கு வேறு ஆதரவு இல்லை; எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று, அவரின் மாமனார் கெஞ்சினார். கணையம் முற்றிலும் செயலிழந்ததால், நுரையீரல் பாதிக்கப்பட்டு, ரத்த அழுத்தம் குறைந்து, சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன.
எங்களால் காப்பாற்ற முடியவில்லை. கணையத்தில் உள்ள செல்கள் அனைத்தும் அழுகி விட்டால், எதுவுமே செய்ய முடியாது.

ஆய்வு
ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய போது, மேற்கொண்ட ஆய்வு பற்றி, டாக்டர் வி.ஜெயந்தி கூறினார்.
மதுவுக்கு அடிமையானால், கல்லீரல், கணையம் இரண்டுமே பாதிக்கப்படும் என்றாலும், இரண்டும் ஒரே சமயத்தில் பாதிப்படைவதில்லை; ஏதாவது ஒன்று மட்டுமே, தீவிர பாதிப்புக்கு உள்ளாகிறது.
ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே, ஒரே நேரத்தில், இரண்டு உறுப்புகளும் பாதிக்கப்படும். இதற்கு, அறிவியல் ரீதியிலான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.
கேரளா மற்றும் தமிழகத்தில், நான் செய்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மரபியல் காரணிகளால், ஒன்று செயலிழந்தாலும், இன்னொன்று செயல்படட்டும் என்று, இயற்கையே இப்படி வைத்திருக்கிறது என்று தான் நம்புகிறோம்.
இவ்வாறு டாக்டர் ஜெயந்தி கூறினார்.

டாக்டர் வி.ஜெயந்தி, தலைவர், கல்லீரல் இயல்,
டாக்டர் சந்தன் குமார், மருத்துவ ஆலோசகர்,
டாக்டர் தாமரை செல்வன், மருத்துவ ஆலோசகர்,
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகம்,
சென்னை. 044 - 4592 8506 / 8838

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X