நினைக்காத நேரமில்லை! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
நினைக்காத நேரமில்லை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:00

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மல்லிபுதுார் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், 1967ல் இளநிலை பயிற்சியில் சேர்ந்தேன்.
விடுதி மற்றும் உணவு கட்டணத்தை செலுத்த மறுத்து விட்டார் என் சகோதரர்.
மாதந்தோறும், 'உணவு கட்டணம் செலுத்தாதவர்' என்ற பட்டியலில், என் பெயர் தவறாது இடம் பெறும். அறை நண்பர்கள் உணவை பகிர்வர்; வாங்கி சாப்பிடும் போது, கண்ணீர் விட்டு அழுவேன். இப்படி ஒன்றரை ஆண்டுகள் கடந்தது.
விளையாட்டு ஆசிரியர் முஸ்தபாவுக்கு, இந்த விவரம் தெரியவந்தது. என் உணவுக் கட்டண பாக்கியை செலுத்தி, 'அரசு உதவி தொகை கிடைக்கும் போது, இந்த பணத்தை தந்து விடு...' என்று ஆறுதல் படுத்தினார். அவரது கருணையால் படித்து, நல்ல நிலையை அடைந்தேன்.
தற்போது, என் வயது, 74; அந்த ஆசிரியரின் மேன்மையான செயல் மனதில் அழியாமல் உள்ளது. உணவு உண்ணும் போதெல்லாம் என் மனக்கண்ணில் அவரை காண்கிறேன்.
- சு.லக்குமணசுவாமி, மதுரை.
தொடர்புக்கு: 97897 88989

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X