மன்னன் சந்திரகுப்தன்! (1)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:00

பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு, மகத நாட்டை ஆட்சி புரிந்தது நந்த வம்சம். அந்த வம்சத்து மன்னனுக்கு, ஒன்பது மகன்கள். மன்னனுக்கு வயதானதால், மூத்த மகன் நந்தன், ஆட்சி பொறுப்பை ஏற்றான்.
அவன் அரண்மனையில், மவுரியர்களும் இருந்தனர். ஆட்சியில் உரிமை பெற்றிருந்த அவர்கள், புத்திசாலிதனமும், வலிமையும் மிக்கவர்கள். நந்தர்களின் தந்தை, அவர்களை ஆதரித்து வந்தார்.
மவுரியர்கள் செல்வாக்கு பெறுவதை விரும்பாமல், அவர்களை ஒழித்துக்கட்ட, தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தனர் நந்தர்கள்.
ஆன்மிக யாத்திரை புறப்பட்டார் நந்தர்களின் தந்தை. இதை, சரியான தருணமாக கருதி, மவுரியர்களை ஒழித்துக் கட்ட முடிவு செய்து, திட்டம் வகுத்தனர்.
வேட்டையாட அழைத்துச் சென்று, சூழ்ச்சியால் கொல்ல முடிவு செய்தனர்.
மவுரியர்களின் தலைவன் சந்திரகுப்தன், வேட்டை ஆடுவதில் கில்லாடி. அவன் அம்பு வேகத்தில் விலங்குகள் அடிப்பட்டு விழும்.
அதை முன் வைத்தே வேட்டையாட சென்றனர். வேட்டை முடிந்து திரும்பும் வழியில், நகருக்கு வெளியே இருந்த மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள விருந்து மண்டபத்தில், மவுரியர்களை அமர வைத்து, வெளியேறினர் நந்தர்கள்.
தடபுடல் விருந்தை எதிர்பார்த்து காத்திருந்த மவுரியர்களுக்கு அதிர்ச்சி. மாளிகை கதவுகள், 'டமார்...' என, சாத்தப்பட்டன. அறையில் அடைப்பட்டவர்கள், பட்டினியால் வாடி மடிந்தனர். எஞ்சியவன் சந்திரகுப்தன் மட்டுமே; அவனைக் கைது செய்து, அந்த மாளிகையை எரித்து நாசமாக்கினர்.
மகத நாட்டுக்கு அருகே இருந்தது பர்வத நாடு. இரு நாடுகளுக்கும் தீராத பகை நிலவியது. ஒரு சமயம், நடந்த சண்டையில், வீரத்துடன் போராடி, பர்வத நாட்டுப் படையை விரட்டி அடித்தனர் மவுரியர்கள்.
தீராத கோபம் கொண்டிருந்த பர்வத மன்னன், மவுரியர்கள் கூண்டோடு அழிந்ததை அறிந்து, மகிழ்ந்தான். இந்த தருணத்தில், மகத நாட்டு மீது படையெடுத்தால், வென்று விடலாம் என்று திட்டம் போட்டான்.
அதற்கு முன், மவுரியர்கள் அழிந்ததை ஆதாரபூர்வமாக அறிய விரும்பி, தன் மந்திரியும், உளவாளியுமான கமலபிதாவை அந்த நாட்டுக்கு அனுப்பினான்.
பர்வத மன்னன் ஆணைக்கு இணங்க, மகத நாட்டு வீதியில், ஒரு கூண்டு வண்டியை நிறுத்தினான் கமலபிதா. அதற்குள், ஒரு சிங்கம் அடைக்கப்பட்டு இருந்தது. அந்த கூண்டுக்கு, கதவு ஏதும் இல்லை. அதைப் பார்த்த மதக நாட்டவர், 'கதவு இல்லாத கூண்டில், சிங்கம் எப்படி நுழைந்தது...' என, கேட்டு வியந்தனர்.
அவர்களிடம், 'கூண்டை உடைக்காமல், சிங்கத்தை வெளியே கொண்டு வர முடியுமா...' என்று சவால் விட்டான் கமலபிதா.
அது எப்படி சாத்தியம் என்று, யோசித்தனர். பின், 'மகத நாட்டுக்கு வந்திருக்கும் கூண்டுச் சிங்கத்தை வெளியே கொண்டு வருபவருக்கு, நந்த மன்னர் பரிசளிப்பார்...' என்று அறிவித்தனர்.
இந்த செய்தி, சிறையிலிருந்த சந்திரகுப்தனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவன் சிந்தனையுடன், 'கூண்டுக்குள் இருக்கும் சிங்கத்தை வெளியே வர வைக்கிறேன்...' என்றான்.
அவனை, அங்கு அழைத்துச் சென்றனர்.
கூண்டுக்கு அருகில், ஒரு சிறிய குச்சியை, சிங்கத்தின் அருகே நீட்டியபடி பேசிக் கொண்டிருந்தான் கமலபிதா. சிங்கம் அசையவில்லை. இதைக் கண்ட சந்திரகுப்தனுக்கு, 'அது உண்மையான சிங்கம் தானா...' என்ற சந்தேகம் எழுந்தது.
ஒரு மாமிசத் துண்டை, சிங்கத்தின் அருகே கொண்டு சென்றான் சந்திரகுப்தன்; அப்போதும், சிங்கம் அசையவில்லை.
நகைத்த கமலபிதா, அந்த மாமிசத் துண்டை, குச்சியில் செருகி, சிங்கத்தின் அருகே காட்டினான்; என்ன ஆச்சரியம்... சிங்கம் மெல்ல நகர ஆரம்பித்தது.
உடனே, 'உன் கோலில் காந்தம் இருக்கிறது; இரும்பு தண்டில், மெழுகு பூசி தயாரிக்கப்பட்ட பொம்மைச் சிங்கம் தான் கூண்டுக்குள் இருக்கிறது...' என்ற சந்திரகுப்தன், ஒரு தீப்பந்தத்தை, கூண்டுக்குள் காட்டினான். பொம்மைச் சிங்கம் உருக ஆரம்பித்தது.
மகத நாட்டில், சந்திரகுப்தன் இருப்பதை, இதன் மூலம் அறிந்த கமலபிதா, பர்வத நாட்டு மன்னனிடம் தகவல் தெரிவித்தான். அவன் மகிழ்ந்து, நந்தர்களைப் பழி வாங்கும் தருணத்தை எதிர்நோக்கியிருந்தான்.
சந்திரகுப்தனின் புத்தி சாதுர்யத்தை கண்டு வியந்த மகத நாட்டு மன்னன், அவனை விடுதலை செய்து, விருந்தினர் மாளிகையில் வேலையும் கொடுத்தான்.
- தொடரும்...

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X