கரும்பு விஞ்ஞானி வெங்கடராமன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:00

சர்க்கரை உற்பத்தியில், இந்தியாவை தன்னிறைவடைய செய்தவர் தாவரவியல் அறிஞர், தி.சா.வெங்கடராமன். சேலத்தில், 1884ல், பிறந்தார். திருச்சியில், ஆரம்பக் கல்வி கற்றார். சென்னை மாநில கல்லுாரியில் உயர்கல்வி முடித்தார்.
செடி, கொடிகள் மீதான ஆர்வத்தால், நெல், வாழை, தென்னை, பனை மரங்களின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து ஆராய்ந்து வந்தார்.
'செடி, கொடிகளை வெறிச்சு பாக்குறியே...' என்று கேட்டால், 'அவை எப்படி வளருதுன்னு கவனிக்கிறேன்...' என்பார்.
'இதையெல்லாமா பார்த்துட்டு இருப்பாங்க...' என்ற கேலி பேச்சை ஒதுக்கினார். விவசாயம் படிக்க கல்லுாரியில் சேர்ந்தவரிடம், 'இந்த படிப்பால் ஒரு வேலையும் கிடைக்காது; விவசாய தொழிலுக்கு எதிர்காலமே இல்லை...' என்று, கிண்டல் செய்தனர்.
'வழக்கறிஞர், ஆசிரியர், வங்கி பணி என, குடும்பத்தினர் முக்கிய பதவியில் இருக்க, எவரும் விரும்பாத, விவசாயம் படிக்கிறாயே...' என்ற உறவினர்களின் கேள்வியை புறம் தள்ளி, ஆர்வத்துடன் படித்து, முதல் மாணவராக தேறினார்.
அப்போதைய சென்னை மாகாண வேளாண் துறை அறிஞர், பார்பர் என்பவரின் உதவியாளராக பணி நியமனம் பெற்றார்.
இந்திய மண்வளம் பற்றி ஆராய்ந்து, மண்ணுக்கு ஏற்ற பயிர்களை அறிமுகப்படுத்தியவர், பார்பர். வெங்கடராமனின் திறமையை அறிந்து, கோவை வேளாண் கல்லுாரியில் ஆசிரியராக நியமித்தார். அந்த பணியில் ஆர்வமாக ஈடுபட்டார்.
வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்ததுடன், கல்லுாரி தோட்டத்தில் புதிய பயிர் ரகங்கள் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். தமிழக மண்ணுக்கேற்ற பயிர் வகைகளை உருவாக்குவதில் ஆர்வமாக ஈடுபட்டார்.
ஆராய்ச்சியில் அவரது திறன் கண்ட பார்பர், வேளாண் ஆராய்ச்சி துறைக்கு மாற்றினார். அங்கு, விதை, மண் வகைகளை ஆராய, சில கருவிகளை உருவாக்கினார். கரும்புப் பயிரை ஆராய்ந்து, கலப்பின ரகங்களை உருவாக்கினார். அவை, உலகம் எங்கும் பயிரிடப்பட்டன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா அருகேயுள்ள கியூபா போன்ற நாடுகளில் அபரிமிதமான விளைச்சலை தந்தது. அந்த ரகங்களை பயிரிட்டதால், இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி பெருகி, தன்னிறைவு ஏற்பட்டது.
அவரது கண்டுபிடிப்புகளை பாராட்டிய ஆங்கிலேய அரசு, பல பட்டங்களையும், விருதுகளையும் வழங்கி கவுரவித்தது. இந்திய அரசு, 1956ல் பத்மபூஷன் விருது வழங்கியது.
தாவரவியல் ஆய்வில் சாதனைகள் புரிந்த அறிஞர் வெங்கடராமன், 1963ல் மறைந்தார்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X