ஆமையின் தீர்ப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:00

திருப்போரூர் காட்டின் ராஜாவாக பதவியேற்றது சிங்கம்; ஆட்சி செய்ய வசதியாக, சில விலங்குகளை அதிகாரிகளாக நியமிக்கப் போவதாக அறிவித்தது.
முதலில், நல்வாழ்வுத்துறையில், சிறுத்தையை அதிகாரியாக நியமித்தது. கூடியிருந்த விலங்குகள் கை தட்டி வரவேற்று வாழ்த்து தெரிவித்தன.
அடுத்து யானையை, பாதுகாப்பு அதிகாரியாக நியமித்தது. இதையும் கை தட்டி, பாராட்டிய விலங்குகள் மகிழ்ந்தன. புலி, மான், குதிரை என, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துறைக்கு அதிகாரியாக நியமித்தது சிங்கம்.
'எப்படியும், ஒரு பதவி கிடைப்பது நிச்சயம்' என, காத்திருந்தது குரங்கு. ஆனால், 'இறுதியாக, நீதிபதியாக ஆமையை நியமிக்கிறேன்...' என்று நியமனங்களை முடித்தது சிங்கம். பெரும் ஏமாற்றமடைந்தது குரங்கு.
எந்த பதவியும் கிடைக்காத ஏமாற்றம் ஒருபுறம் இருக்க, 'போயும் போயும் ஆமைக்கு நீதிபதி பதவியா' என, எண்ணி குமுறியது.
'பிள்ளைக்கு பேர் வைக்க கூப்பிட்டா... பிள்ளையின் திருமணத்திற்கு தான் வருவது போல் நடக்கிறாயே...' என்று, ஆமையின் வேகத்தை, அடிக்கடி கிண்டல் செய்து மகிழ்ந்திருந்த குரங்கு, கோபத்தின் உச்சிக்கு சென்றது.
'அதிகாரிகள் நியமனத்தில், உங்களுக்கு எல்லாம் திருப்தி தானே...' என, கூடியிருந்த விலங்குகளை, கேட்டது சிங்கம். பெரும்பாலானவை, தலையசைத்தன.
பொறுக்க முடியாத ஆத்திரத்தில், 'ராஜா... மற்ற அதிகாரிகள் நியமனம் பற்றி குறை ஒன்றும் சொல்வதற்கில்லை; ஆனால், ஆமைக்கு நீதிபதி பதவியா...' என்று, அதிருப்தியை வெளியிட்டது குரங்கு.
இதைக் கேட்டு புன்னகைத்த சிங்கம், 'சரி... சில மாதங்கள், ஆமையின் செயல்பாட்டை பார்ப்போம்; பின், அதிகார மாற்றம் குறித்து யோசிப்போம்...' என்று கூற, விலங்குகள் கலைந்தன.
'என்ன ஆமையாரே... உமக்கெல்லாம் நீதிபதி பதவியா... இதை கலிகால செயல் என்பதை தவிர வேறென்ன சொல்ல...' என, கிண்டலாக கூறி, வயிற்றெரிச்சலைக் கொட்டியது குரங்கு. பதில் கூறாமல் நிதானமாக நகர்ந்தது ஆமை.
சில நாட்கள் சென்றன -
வழக்கு ஒன்றைக் கொண்டு வந்தது கரடி. அந்த விசாரணையை கவனிக்க அனைத்து விலங்குகளும், காட்டு நீதிமன்றத்தில் கூடின.
நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து, 'கரடியாரே... என்ன வழக்கு கொண்டு வந்திருக்கிறீர்; யார் மீது புகார்...' என்று கேட்டது ஆமை.
தொண்டையை கனைத்தபடி, 'கனம் நீதிபதியாரே... எனக்கு, தேன் என்றால், மிகவும் விருப்பம். சில மாதங்களுக்கு முன், மலைப்பகுதியில் ஒரு பொந்தில் சிரமப்பட்டு, தேன் எடுத்து வந்து குகையில் வைத்திருந்தேன். அவ்வப்போது சிறிதளவு குடித்து, மகிழ்ந்தேன். மீதமிருந்த தேன், நேற்று திருட்டு போய்விட்டது; குற்றவாளியை கண்டுபிடித்து, தக்க தண்டனை தர வேண்டும்...' என்றது கரடி.
'சரி... உமக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா...'
'குரங்கின் மீது தான் சந்தேகம் வருகிறது; ஏனென்றால், அது குடியிருக்கும் மரத்தின் அடியில் தான், தேன் வைத்திருந்த மண்பாண்டம் உடைந்து கிடந்தது...'
கரடியின் குற்றச்சாட்டால் திடுக்கிட்ட குரங்கு, 'ஐயோ... இது என்ன வம்பா இருக்கு; நான் எதையும் திருடலையே... இப்போ என்ன நடக்குமோ... கிண்டல் செய்ததால் பழிவாங்கும் விதமாக, ஆமை என்ன தண்டனை தரப்போகிறதோ...' என்று, எண்ணி கலங்கியது.
வழக்கை விசாரிப்பதாக கூறிய ஆமை, 'ஒரு வாரத்தில் தீர்ப்பு சொல்கிறேன். அதுவரை கரடியார் அமைதி காக்க வேண்டும்...' என்று உத்தரவிட்டது.
ஆமை எப்படியும் பழி தீர்க்கும் என, உறங்காமல், உண்ணாமல் கவலையோடு காத்திருந்தது குரங்கு.
அன்று காட்டு நீதிமன்றம் கூடியது -
நீதிபதி நாற்காலியில் வந்தமர்ந்த ஆமை, 'கரடியே... உன் தேனை திருடியவரை கண்டு பிடித்து விட்டேன்...' என்றது.
'அப்படியா... குரங்கு தானே, என் தேனை திருடியது...' என்று அவசரமாக கேட்டது.
'இல்லை... திருடியது நரியார்; அவருக்கும், தேன் பிடிக்கும் என்பது தெரியாதா... உன் தேனை திருடி குடித்து, பானையை உடைத்து, குரங்கு குடியிருக்கும் மரத்தின் அடியில் போட்டுவிட்டார். நரியார் குடியிருக்கும் பொந்தில் சிந்திய தேனை எடுக்க, எறும்புகள் ஊர்ந்து செல்வதை பார்த்தேன். திருடிய நரிக்கு, ஒரு பானை தேன் அபராதமாக விதிக்கிறேன்...' என்று தீர்ப்பு கூறியது ஆமை.
இதை கேட்டு, நிம்மதி அடைந்தது குரங்கு.
அங்கு வீற்றிருந்த சிங்கம் சிரித்தபடி, 'என்ன குரங்காரே... ஆமையை எதற்காக நீதிபதியாக நியமித்தேன் என்று இப்போது புரிகிறதா... தகுதி அறிந்து பொறுப்பு கொடுத்துள்ளேன்... நீதித்துறைக்கு, தீர விசாரித்தறியும் பண்பு அவசியம்; அவசரத்தில் தீர்ப்பளித்தால், நிரபராதி பாதிப்படைய வாய்ப்புண்டு...
'பொறுமையாக விசாரித்து, ஆராய்ந்து தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். அந்த பொறுமையும், நிதானமும் ஆமையிடம் இருக்கிறது. இதுதானே நீதிபதிக்கான தகுதி...' என்று உணர்த்தியது.
தவறாக புரிந்திருந்த குரங்கு, மன்னிப்பு கேட்டது. மிகச் சரியாக கணித்து தீர்ப்பு சொன்ன, ஆமைக்கு நன்றி கூறியது. மற்ற உயிரினங்களை கேலி, கிண்டல் செய்வதையும் விட்டது.
குட்டீஸ்... பிறரை குறை சொல்வதை விடுத்து, நம் தகுதியை வளர்த்துக் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறலாம்.
- அருணா பப்ளிகேஷன்ஸ்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X