இளஸ்... மனஸ்...(13)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2019
00:00

கனிவு மிக்க மெடோஸ் ஆன்டிக்கு...
நான், 11ம் வகுப்பு படிக்கும் மாணவி. சிறுவர்மலர் இதழில், 'இளஸ்... மனஸ்...' பகுதியை விரும்பி படிப்பேன்; சின்ன வயதிலிருந்தே, தொண்டையில், டான்சில் பிரச்னை இருக்கிறது. சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
இந்த பாதிப்பால், இரவில் வாயை திறந்தபடி தான் துாங்கமுடிகிறது. இதனால், குறட்டை ஒலி எழுகிறது. இதை தவிர்க்க முடியாததால், எல்லாரும் கிண்டல் செய்றாங்க ஆன்டி.
வெளியூர் சென்றால், பயத்தில் துாங்காமல் விழித்திருந்து தவிப்பேன். குறட்டை வராதபடி, வாயை மூடி துாங்க, ஏதாவது வழி சொல்லுங்க ஆன்டி... ப்ளீஸ்!

அன்புள்ள மகளுக்கு...
படிக்கும் வயதில், டான்சில் பிரச்னையால் அவதிப்படுவதை கண்டு, வேதனையடைகிறேன். பொதுவாக, ஐந்து வயதிற்கு உட்பட்ட, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் தான், இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
தொண்டையில், மூன்று இடங்களில், டான்சில் எனப்படும், நிணநீர் சுரப்பிகள் உள்ளன. உட்கொள்ளும் உணவுப் பொருட்களில், பாக்டீரியா, வைரஸ் போன்றவை இருந்தால், அவற்றின் வீரியத்தை தடுத்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கின்றன.
சுகாதாரமற்ற குடிநீர், உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது, அவற்றில் இருக்கும் பாக்டீரியா, டான்சில் திசுக்களை தாக்கும்; நோய் எதிர்ப்பு திறன் குறைந்த குழந்தைகளுக்கு, டான்சில் திசுக்கள் வீங்கும். குழந்தைகளுக்கு உணவு மீது நாட்டம் குறையும். இந்த பாதிப்பால், தொண்டை வலி, காய்ச்சல், இருமல், சளி தொந்தரவு ஏற்படும்.
தொண்டை அழற்சி எனப்படும் இந்த நோயை குணப்படுத்த, மருத்துவர் ஆலோசனைப்படி, உரிய மருந்துகளையும், சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொண்டால், சிறுவயதிலேயே குணப்படுத்தி விடலாம். கவனிக்காமல் விட்டு விட்டால், நோய் தாக்கம் அதிகரிக்கும்.
டான்சில் பாதிப்பால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். வாய் வழியாக சுவாசிப்பதால், குறட்டை பழக்கம் உண்டாகும். உடல் வளர்ச்சி அடையும் போது, நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அதிகரிக்கும் என்பதால், டான்சில் பாதிப்பு குறைந்து விடும்.
உன் வேதனையை பார்க்கும் போது, பாதிப்பு தீவிரமாக இருப்பதாக கருதுகிறேன். எனவே, மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பின்பற்றவும்.
அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தால், பயப்படாமல் செய்து கொள். நவீன லேசர் சிகிச்சை முறையில், டான்சில் பிரச்னைக்கு இன்று எளிதாக தீர்வு கிடைக்கிறது.
உலகில் அனைவரும், 100 சதவீதம் ஆரோக்கியத்துடன் பிறப்பதில்லை. உனக்கு ஏற்பட்டிருப்பது, சிறிய பிரச்னை தான்; எளிய சிகிச்சை மூலம் குணப்படுத்தி விடலாம்.
தொண்டையில் டான்சிலை அகற்றினாலும், உடல் பாதுகாப்பை, பிற சுரப்பிகள் கவனித்துக் கொள்ளும். எனவே, கவலை வேண்டாம்.
சில எளிய வழிமுறைகள்...
* சத்து நிறைந்த, காய்கறி மற்றும் பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்
* காலை எழுந்ததும், மிதமான சுடுநீரில், சிறிது கல் உப்பை போட்டு, தொண்டைக் குழி சூடு தாங்கும் வரை வைத்திருந்து கொப்பளிக்கவும். இதையே, இரவு படுக்கைக்கு செல்லும் முன்னும் செய்யவும்; இது, டான்சில் பிரச்னையின் தீவிரத்தை குறைக்கும்.
உன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டு, ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்!
- அன்புடன், மெடோஸ்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X