இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
00:00

நாகரிகமாக நடந்து கொள்ளலாமே...
தோழியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். வரவேற்பு முடிந்தவுடன், 'போட்டோ ஷூட்'டுக்காக, மணமக்களை மேடைக்கு வரச்சொன்னார், புகைப்படக்காரர். மணமக்களை, கட்டிப் பிடித்தபடியும், உதட்தோடு உதடு வைத்து முத்தம் தர சொல்லியும், 'போஸ்' தரச் சொன்னார்.
மணப்பெண் சரியாக, 'போஸ்' தரவில்லை என்று, 'என்னம்மா, நீ... எத்தனை படத்துல பார்த்திருக்கிற... முத்தம் தரும்போது, முகத்துல அழகா, 'ரியாக் ஷன்' கொண்டு வர வேணாமா...' என்றார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த, உறவுகளும், குழந்தைகளும், கிண்டலடித்து, சிரித்தபடி, வேடிக்கை பார்த்தனர்.
அச்சமயம் அங்கு வந்த, மணப்பெண்ணின் சித்தப்பா, 'ஏம்பா... நீ புகைப்படம் எடுக்கறியா, இல்லை, சினிமா எடுக்கறியா... காலமெல்லாம், குடும்பம், குழந்தைகள் என, தலைமுறை தலைமுறையா பார்த்து ரசிக்க வேண்டிய நினைவுகளை, இப்படியா கேவலமா, 'ஷூட்' பண்ணுவே...
'இந்த புகைப்படங்களை பார்க்கும் அடுத்த தலைமுறையினர், இவர்களை பற்றி என்ன நினைப்பர்... ஒழுங்கா எடுக்கறதா இருந்தா எடு... இல்லேன்னா, நீ கிளம்பு; வேற ஆளை பார்த்துக்கறேன்...' என்று, சத்தம் போட்டார்.
'அவர் தான் சொல்றார்ன்னா, 'அந்த' மாதிரி புகைப்படம் எல்லாம் வேண்டாம்ன்னு, நீங்க சொல்லக் கூடாதா...' என்று, மணமக்களையும் கடிந்து கொண்டார்.
இந்நிகழ்வு, பெண் வீட்டாரின் மேல், மாப்பிள்ளை வீட்டினருக்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியது.
என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும், பெண்களை கட்டுப்பாட்டுடன் வளர்க்கும் நம் மண்ணின் ஆண் மகன்கள், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவரே என்பதை புரிய வைத்தார், அப்பெரியவர்.
காலங்காலமாக, மலரும் நினைவுகளாக நிலைத்து நிற்கும் புகைப்பட ஆல்பங்கள், அனைவரும் பார்த்து மகிழும்படி இருக்க வேண்டாமா... யோசியுங்கள்!
— எஸ். கல்பனா, சென்னை.

உறவுகளை இணைத்த அழைப்பிதழ்!
உறவினர் ஒருவர், புதிதாக கட்டிய வீட்டுக்கு, 'புதுமனை புகுவிழா' அழைப்பிதழை அச்சிட, அச்சகம் சென்றபோது, உடன், நானும் சென்றேன்.
உறவினரின் கூடப் பிறந்த அண்ணன், தம்பிகள் நான்கு பேர்; ஒரு தங்கை. சிறு மனஸ்தாபத்தால், மூன்று ஆண்டுகளாக, தங்கை குடும்பத்தினருடன் யாரும் பேசுவதில்லை.
அழைப்பிதழில், 'தங்கள் நல்வரவை நாடும்' பகுதியில், தங்கை குடும்பத்தை மட்டும் விட்டு விட்டு, மற்ற அனைவரது பெயரையும் எழுதி தந்தார்.
உறவினருக்கு பழக்கமான அச்சக உரிமையாளர், 'தங்கச்சி பெயரை, ஏன் விட்டு விட்டீர்கள்...' எனக் கேட்டார்.
விஷயத்தை கூறினார், உறவினர்.
'குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லீங்க... ஆண்டவன் கொடுப்பது ஒரே ஒரு பிறவி... மீண்டும் உங்க அம்மா வயிற்றில் நீங்களெல்லாம் ஒண்ணா பொறக்கவா முடியும்... தங்கச்சி மற்றும் மாப்பிள்ளை பேரை சேர்த்து, நீங்களே பத்திரிகையை நேரில் எடுத்து போய் கொடுங்க...' என, அச்சக உரிமையாளர் அறிவுறுத்தினார்.
அப்படியே செய்தார், உறவினர்.
தங்கை மகிழ்ந்து, தன் உறவினர்களிடம், 'என்ன இருந்தாலும், அண்ணன், என்னை விட்டுத் தருவாரா...' என சொல்லி, விழாவில், முக்கிய நபராய் வலம் வந்தார்.
அச்சகத்தை, தொழிலாக மட்டும் பார்க்காமல், பகைமையில் இருந்த, இரண்டு குடும்பங்களையும், தன் சாதுர்ய பேச்சால் இணைத்த, அதன் உரிமையாளரை பாராட்டினேன்.
— சி. ரகுபதி, திருவண்ணாமலை.

நல்வழி காட்டும், ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்!
நவராத்திரி சமயத்தில், வீடு வீடாக போய், கொலு வைத்திருப்பதை, சிறுவர் - சிறுமியர் கண்டுகளித்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சாப்பிடும் காலம், மறைந்து விட்டது. இப்போது, 'வாட்ஸ் - ஆப், பேஸ்புக்' மற்றும் 'டிவி' போன்றவற்றில் மூழ்கி, பொழுதை கழிக்கின்றனர்.
இதற்கு மாறாக, கடந்த ஆண்டு, நாங்கள் வசித்த குடியிருப்பில், இரண்டு சிறுவர்கள், எங்கள் வீட்டு கொலுவிற்கு வந்தனர். ஒவ்வொரு பொம்மைகளையும் பார்த்து, விளக்கம் கேட்டனர்.
அவர்களின் கேள்விகள் அனைத்தும், நம் கலாசாரம், பண்பாடு, இதிகாச புராணம் போன்றவைகளை சார்ந்ததாக இருந்தது.
'கொலுவிற்கு போக வேண்டும் என்று, உங்களுக்கு யார் சொன்னது...' என, அந்த சிறுவர்களிடம் வினவினேன்.
'எங்க கிளாஸ் டீச்சர் தான்... அவுங்க வீட்டு கொலுவுக்கு, வகுப்பு மாணவர்கள் அனைவரையும் அழைத்து போய், நவராத்திரி விழா கொண்டாடுவதை பற்றி விளக்கினாங்க... அதோடு, 'குடியிருக்கும் பகுதியில் உள்ள, பக்கத்து வீடுகளுக்கு கொலுவுக்கு போனால், இதுபோன்று, இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்... மனதிற்கும் சந்தோஷமாக இருக்கும்' என்று, 'ஐடியா' கொடுத்துள்ளார், டீச்சர்...' என்று பதிலளித்தான், அச்சிறுவன்.
கலாசாரத்தை வெளிப்படுத்தும் விழாக்களை பற்றி, தன்னிடம் படிக்கும் குழந்தைகள் அறிவதற்காக, நல்வழி காட்டும் இம்மாதிரி, நல்லாசிரியர்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை.
இந்த நவராத்திரியின் போது, அக்கம் பக்கத்து வீடுகளின் குழந்தைகளை, கொலு பார்க்க அழைக்க செல்வீர்கள் தானே!
- எஸ். ராமன், சென்னை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-செப்-201913:00:47 IST Report Abuse
Girija @எஸ். கல்பனா, சென்னை. நல்ல பதிவு, இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பணத்தை மிச்சப்படுத்த கல்யாணம் நடப்பதற்கு முதல்நாளே ரிசப்ஷன் வைப்பது அடுத்தநாள் மணப்பெண் அல்லது மாபலியாய் ஓடிப்போவது அல்லது வரதட்சிணை, சாப்பாடு பிரச்சனை காரணமாக கல்யாணம் நின்றுபோவது. எதற்கு இந்த ஆடம்பரம், முறையாக தாலி கட்டிய பிறகு ரிசப்ஷன் வைக்கலாமே? அல்லது வசதி இல்லையா கல்யாணம் மட்டும் முறையாக நடக்கட்டுமே? எதற்கு வசூல் வேட்டை ?
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
22-செப்-201912:24:24 IST Report Abuse
pattikkaattaan திருமணத்தை போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் கலைஞர்கள் எல்லை மீறி செயல்படுகிறார்கள் .. கொஞ்சம் விட்டால் முதலிரவைக்கூட படம் எடுத்து கொடுத்துவிடுவார்கள் .. இவர்கள் கேட்கும் தொகையும் தலை சுற்ற வைக்கிறது ..
Rate this:
Cancel
Nagaraj - Doha,கத்தார்
22-செப்-201911:09:45 IST Report Abuse
Nagaraj அச்சகத்தாரின் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X