ராம நாமத்தின் மகிமை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
00:00

தெய்வ நாமங்களை மந்திரமாக உருவேற்றுவது, ஓர் அரிய செயல். அதை விவரிக்கும் கதை இது...
வீராசாமி என்பவர், முக்கிய பணி காரணமாக, வீட்டை விட்டு புறப்பட்டார். தான் நாடிப் போகும் பணி, நல்லவிதமாக முடிய வேண்டுமே என்ற கவலையோடு சென்று கொண்டிருந்தவரின் காதில், யாரோ சொன்ன, 'ராமா' என்ற திருநாமம் கேட்டது.
மனம், ராம நாமத்தில் பதிய, சென்ற காரியம், சுலபமாக முடிந்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை, வீராசாமிக்கு.
எனவே, படுக்கையை விட்டு எழுந்தவுடன், தான் சந்திக்கும் முதல் நபரை, ராம நாமம் சொல்லச் சொல்லி, அதன் பின், தன் வேலைகளை கவனிக்க துவங்கினார். இவ்வாறே பல நாட்கள் சென்றன.
ஒருநாள், வீராசாமியின் கண்ணில், கோபாலன் என்பவர் அகப்பட்டார். அவனை, ராம நாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்தினார், வீராசாமி.
கோபாலனோ மறுத்தார்; வீராசாமி விடவில்லை.
'ராம நாமா சொன்னாலொழிய, உன்னை விடமாட்டேன்...' என்று, கோபாலனின் ஆடையை பிடித்தார்.
விபரமறிந்து, ஊர் மக்கள் கூடினர்.
'அவர், சொல்லா விட்டால் என்ன... நாங்கள் சொல்கிறோம்...' என, எல்லாரும், 'ராமா' என்று கூவினர்.
'என் வழக்கப்படி, நான் முதலில் பார்த்தது, கோபாலனை தான். ஆகையால், இவன் தான் சொல்ல வேண்டும்...' என்றார், வீராசாமி.
கோபாலனோ, 'ஒருக்காலும் நான் சொல்ல மாட்டேன்...' என, மறுத்தார்.
பிரச்னை, அரசரிடம் போனது.
இரு தரப்பின் விபரமறிந்த அரசர், 'ஏன் மறுக்கிறாய், கோபாலா... ஒருமுறை, ராம நாமத்தை சொல்லேன்...' என்றார்.
'அரசே... எனக்கு, மனைவி, மக்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு என்னை விட்டால், ஆதரவில்லை... அப்படியிருக்க, நான் எப்படி சொல்வேன்...' என்றார், கோபாலன்.
சபையில் இருந்த அனைவரும், 'பெருமை நிறைந்த, ராம நாமத்தை சொல்ல, இப்படி பயப்படுகிறாயே...' என, சிரித்தனர்.
'சீக்கிரம் சொல்... உன்னை விட மாட்டேன்...' என, வற்புறுத்தினார், அரசர்.
'சரி, அரசே... என் மனைவி, மக்களின் வாழ்வுக்கு வழி செய்தால், சொல்கிறேன்...' என்றார், கோபாலன்.
அதை ஏற்ற அரசர், கோபாலனின் குடும்பத்திற்கு, நிலங்கள் எழுதி வைத்து, செல்வமும் வழங்கினார்.
அப்போதும் வீராசாமியிடம், 'சொல்லித்தான் ஆக வேண்டுமா...' என கேட்டார், கோபாலன்.
'ஆம்...' என்றார், வீராசாமி.
கைகளை தலைக்கு மேல் குவித்து, கண்களில் வழிந்த கண்ணீர் உடம்பை நனைக்க, கண்களை மூடியபடியே, 'ராமா...' என்றார்.
அதே வினாடியில், கோபாலனின் கபாலம் பிளக்க, அதிலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டு, ஆகாயத்தை நோக்கி சென்றது; அவர் உடல், தரையில் சாய்ந்தது.
ராம நாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்திய, வீராசாமி மற்றும் அரசர் உட்பட அனைவரும், கோபாலனின் துாய்மையான, ஆழமான ராம பக்தியை கண்டு, கண்ணீர் சிந்தினர்.
தெய்வ நாமத்தை, நாடி நரம்பெல்லாம் ஊடுருவும்படியாக உருவேற்றிய மகான்கள் பலர், அன்றும் இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்.
தெய்வ நாமத்தை சொல்வோம், உருவேற்றுவோம். முடியாவிட்டால், தெய்வ நாமங்களை சொல்லும் நல்லவர்களை இகழாமல் இருப்போம்.
பி. என். பரசுராமன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
24-செப்-201913:57:05 IST Report Abuse
Yezdi K Damo பயமுறுத்தினா பக்தி மட்டும் அல்ல எதுவுமே வராது .
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
23-செப்-201910:25:03 IST Report Abuse
vasumathi கற்பனையோ நிஜமோ, கடவுள் பெயர்கள் நன்மையே செய்கின்றன.. அஜாமிலனின் கதையும் இதையே நிரூபிக்கிறது. இன்றைய மனோ தத்வம் படியும், கவலை இல்லாமல் சந்தோஷமாக இருக்க, எல்லாம் நம் கையில் இல்லை என்று நினைத்து செயல்பட்டால் முடிகிறது.
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
22-செப்-201905:09:31 IST Report Abuse
chakra "ஒருநாள், வீராசாமியின் கண்ணில், கோபாலன் என்பவர் அகப்பட்டார். அவனை, ராம நாமம் சொல்லச் சொல்லி வற்புறுத்தினார், வீராசாமி" ஆன்மீகம் என்றால் பைத்தியக்காரத்தனமா
Rate this:
Share this comment
sumithran - singapore,சிங்கப்பூர்
25-செப்-201908:34:22 IST Report Abuse
sumithranஇப்பொழுது எல்லாம் கண்ணில் அகப்பட்டவர்களை "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்லச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X