நவராத்திரி சிறப்புகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
00:00

செப்., 29 நவராத்திரி ஆரம்பம்

சோழர் காலத்தில், நவராத்திரி விழா, அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
* தமிழகத்தில், நாயக்கர் காலத்திலிருந்து தான், மக்கள் கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக, நவராத்திரி விழா மாறியது
* நவராத்திரி காலத்தில் தான், மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை, விஜயநகர மன்னர்கள் ஏற்படுத்தினர்
* ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு, முதன் முதலாக, நவராத்திரி கொண்டாடும் உரிமையை, மன்னர் திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே, தமிழகத்தில், நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது
* நவராத்திரி நாட்களில் பெண்கள், கன்யா பூஜை செய்தால், சகல செல்வங்களையும் பெறலாம்
* நவராத்திரி பண்டிகையை, ராமர் தான், முதன் முதலில் கொண்டாடியதாக, புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவராத்திரி விரதத்தை ராமபிரான், கடைப்பிடித்த பிறகு தான், அவருக்கு, சீதை இருக்கும் இடம் தெரிந்தது என்று, தேவி பாகவதம் சொல்கிறது
* நவராத்திரி நாட்களில், இரவு, 7:00 - 9:30 மணி வரை, தேவி வழிபாடு செய்ய உகந்த நேரம்
* பங்குனி மாத, அமாவாசைக்கு பின், பிரதமையில் துவங்கும், லலிதா நவராத்திரி; மாசி மாதம் வரும், ராஜ மாதங்கி நவராத்திரி; ஆடி மாதத்தில் வரும், மகாவராகி நவராத்திரி; புரட்டாசியில் வரும், சாரதா நவராத்திரி ஆகிய நான்கையும் பெண்கள் கடைப்பிடித்தால், அம்பிகையின் அருளை முழுமையாக பெறலாம்
* அனைத்திலும் தேவியே இருக்கிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே, நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது
* கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக, நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்று அர்த்தம்
* ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால், பிறகு, வாழ்நாள் முழுவதும், வைக்க வேண்டும்
* நவராத்திரியின் ஒன்பது நாட்களும், தினமும் பகலில், 1,008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால், அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்
* ஸ்யவன மகரிஷியையும், சுகன்யா தேவியையும் தியானித்தபடியே, தினமும், நவராத்திரி பூஜையை துவங்க வேண்டும்
* குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளர, நவராத்திரி நாட்களில், அரிசி மாவால் கோலமிட வேண்டும். சுண்ணாம்பு மாவால் கோலம் போட்டால், எதிர்மறையான விளைவுகளே உருவாகும்
* ஒன்பது நாட்களிலும், தேவியாக பாவித்து துதிக்க, நமக்கு சொந்தம் அல்லாத, பிறர் வீட்டு குழந்தையை அழைத்து வந்து உபசரிக்க வேண்டும்
* நவராத்திரி பூஜையின் நிறைவாக, தினமும், மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் ரிப்பன் போன்ற மங்கல பொருட்களை, ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாக பலரும் ஒன்று சேர்ந்து, மங்கல பொருட்களை மிகப்பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பு
* நவராத்திரி ஒன்பது நாட்களிலும், நாராயண சுக்தம், புருஷ சுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சன மந்திரம் மற்றும் கருட மந்திரம் ஆகியவற்றை கூறி, வழிபாடு செய்யலாம்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-செப்-201908:41:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni வீட்டுலே சாமிக்கு விளக்கேற்ற ஒரு ஒரு பலகை அடிப்பாங்களே அதுலேயே மத்திலே ஒரு சிறு பித்தளை அல்லது தாமிர செம்பிலே அரிசி நிரப்பி அதுலே மஞ்சள் கிழங்கும் குங்குமம் பாக்கெட்டும் ஒரு ரூபாய் அல்லது அஞ்சுரூபாய் காயினை வச்சு மாவிலைவச்சு அதன்மீதுமஞ்சள்பொடி கரைச்சு தடவிட்டு சந்தனம் குங்குமம் வச்ச தங்க வச்சு ஒன்பதுநாளும் கும்பிடலாம் கலசத்துள்ளே ஒரு மஞ்சள் அல்லது சிகப்புநிற ரவிக்கை துணிய சுற்றி பாவாடைபோல கட்டணும் தேங்காய் மீது மஞ்சள் நிற ப்ளௌஸ் பட்டால் பொருத்தினால் அம்பாள் ரெடியா வந்தாச்சு தினம் ரெண்டுவேளை தீபம் எர்ரனும் தெரிஞ்ச ஸ்லோகம் சொன்னால் போதும் நீவேதனம் என்று கிஷ்மிஷ் அல்லது பேரீச்ச வச்சுபால்/தேன் சேர்த்து நெய்வேத்யம் கற்பூரம்காட்டி வத்தி ஏற்றினால்போதும் அம்மாவின் அருள் வந்துடும் நான் இதுபோலத்தான் திருமணமாய் 55 வருஷமா செய்றேன் என்னவருக்கு சதாபிஷேகம் ஆயாச்சு நானும் என் எண்பதுவயது அடையப்போகிறேன் எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஸ்வாமிபூஜையும் ஸ்லோகம் கல் சான்டிங் ம் தான் எப்போதும் பொதுபஜனைக்கல்லே போனதில்லே என்னவருக்கு பிடிக்காது என்பதால்
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
23-செப்-201910:47:25 IST Report Abuse
Krish கொலு வைக்க இடம் இல்லாதவர்கள், சிறு கலசம் (சொம்பு) மாவிலை வைத்து, அம்மனாக நினைத்து வழிபடலாம், கோவில் கொலுவை நம் கொலுவாக நினைத்து வேப்பிலை, வெள்ளை மல்லிகை, சிகப்பு செம்பருத்தி மலர்களால் வழிபாடு செய்யலாம். நம் வீடு பெண்கள் அனைவரும் அம்மனாக நினைத்து அவர்களுக்கு மரியாதையை செய்து கொள்ளுங்கள்., மகிஷாசுரமர்த்தினி அருளால் சந்தோசம் வரும்,
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
23-செப்-201910:45:40 IST Report Abuse
Krish கொலு வைக்க இடம் இல்லாதவர்கள், சிறு கலசம் (சொம்பு ) மாவிலை வைத்து, அம்மனாக நினைத்து வழிபடலாம், கோவில் கொலுவை நம் கொலுவாக நினைத்து வேப்பிலை, வெள்ளை மல்லிகை, சிகப்பு செம்பருத்தி மலர்களால் வழிபாடு செய்யலாம். நம் வீடு மருமகள் மாமியார் அனைவரும் அம்மனாக நினைத்து அவர்களுக்கு மரியாதையை செய்து கொள்ளுங்கள்., மகிஷாசுரமர்த்தினி அருளால் சந்தோசம் வரும்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X