கனவு தவிர்... நிஜமாய் நில்! - நீர்க்கட்டிக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2019
00:00

வயிற்றுப் பகுதியில் வலி என்று வரும் இளம் பெண்ணை, 'ஸ்கேன்' பரிசோதனை செய்யச் சொல்வதற்கு, தொற்று, குடலிறக்கம், பேட்டி லிவர், என, பல காரணங்கள இருக்கின்றன.
என்ன பிரச்னை இருந்தாலும், அதோடு சேர்த்து, இலவச இணைப்பைப் போல, 'பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் - பி.சி.ஓ.டி.,' என்று, ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு விடுகின்றனர்.
அந்த பெண், அவரின் பெற்றோருக்கு, வாழ்க்கையே போய் விட்டதைப் போன்று கவலை வந்து விடுகிறது.
என்ன பிரச்னைக்காக ஸ்கேன் செய்யச் சொன்னோமோ, அதை விட்டு விட்டு, பி.சி.ஓ.டி., இருக்கே டாக்டர், 18 வயசு தான் ஆகுது... இன்னும் கல்யாணம் ஆகவில்லை; குழந்தை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் வரும்...
கருக்குழாயில் நீர்க் கட்டி என்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர்... இவளுக்கு அது மாதிரி தேவை இருக்குமா என்று அடுக்கிக் கொண்டே போகின்றனர்.
சம்பந்தப்பட்ட பெண், உடனடியாக கூகுளில் தேடுகிறாள். கூகுளில், உலகத்தில் இல்லாத பிரச்னைகள் எல்லாம் இருக்கும்.
அதில் குறிப்பாக, இந்த பிரச்னை இருந்தால், குழந்தையின்மை, சீரற்ற மாதவிடாய், உடல் பருமன் போன்ற பிரச்னைகள் வரும் என்று இருக்கும். எல்லாத் தகவல்களையும் படித்து, குழம்பி, பயந்து போகிறாள்.
உடல் நலன் குறித்த விழிப்புணர்வை, பெண்களுக்கு ஏற்ப்படுத்தும் விதமாக, இந்திய வர்த்தக மையத்துடன் சி.ஐ.ஐ., இணைந்து, பள்ளி, கல்லுாரிகளில் தொடர் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி, பேசி வருகிறேன்.
மாணவியர் அவர்களின் பெற்றோர் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்வி, பி.சி.ஓ.டி., எனப்படும் கருக்குழாய் நீர்க்கட்டி பற்றியது; அந்த அளவிற்கு இது பொதுவான பிரச்னையாகி விட்டது.

நீர்க்கட்டி என்றால் என்ன?
இது பற்றிய சரியான புரிதல் நம்மிடையே இல்லை. கூகுளில் படித்து விட்டு, இந்தப் பெயரைக் கேட்டாலே, ஏதோ வரக் கூடாத பேரழிவு வந்து விட்டதைப் போன்று உணர்ச்சி வசப்படுகின்றனர்.
நீர்க்கட்டி வருவதற்கான சாத்தியங்கள் கொண்ட மரபணு, நம்மிடையே மிகவும் பொதுவான விஷயம்...
சர்க்கரைக் கோளாறைப் போன்று, உடல் கோளாறு வருவதற்கான வாய்ப்பு நம் மரபணுவில் இருந்தாலும், அதை துாண்டுவதற்கான சூழல் அதனுடன் சேர்ந்தால், பிரச்னை வெளிப்படுகிறது.

நீர்க்கட்டி வருவதற்கான சாத்தியங்கள் எவை?
பதினான்கு வயதிலிருந்தே, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம், குழந்தைகளுக்கு துவங்கி விடுகிறது. போதுமான துாக்கம் கிடையாது.
ஒரு நாளின், 24 மணி நேரத்தில், உடற்பயிற்சி செய்வதற்கோ, விளையாடுவதற்கோ நேரம் கிடையாது; சாப்பிடுவது பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவுகளான, தேவையற்ற சர்க்கரை, கார்போஹைட்ரேட் உள்ள, பேக்கரி தயாரிப்புகள், ஜங்க் உணவுகள் சாப்பிடுவது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், நாங்கள் செய்த கள ஆய்வில், 25 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி மாணவியர், அதிக உடல் பருமனுடன் உள்ளது தெரிய வந்தது.
தற்போது, இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். நம்முடைய முதல் எதிரியே சர்க்கரை தான். மரபணுவில் நீர்க்கட்டி வருவதற்கான சாத்தியங்கள் இருந்து, ஆரோக்கியமற்ற உணவுகள், மன அழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணிகள் சேரும் போது, நீர்க்கட்டி வெளிப்படுகிறது.
கோளாறு வருவதற்கான மரபணு இருப்பதைப் புரிந்து கொண்டால், பிரச்னையை கட்டுப்படுத்த முடியும்.

மரபியல் சாத்தியத்தை தெரிந்து கொள்ள...
வளர் இளம் பருவத்தில், உயரத்திற்கு அதிகமான உடல் எடையுடன் இருப்பது, முகத்தில் ரோமம் வளர்வது, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் வராமலேயே இருப்பது, ஆண்டிற்கு, நான்கு முறை அல்லது அதற்கும் குறைவாக வருவது, அதிக ரத்தப் போக்கு, முகத்தில் அதிக பருக்கள் வருவது.
மேலும், வயது தாமதமாக பருவமடைவது, கழுத்தைத் சுற்றி கரு வளையம், அடி வயிற்றைச் சுற்றி மட்டும் பருமனாவது போன்ற பிரச்னைகள், 18 வயதிற்குள்ளேயே இருந்தால், நீர்க்கட்டி வரும் வாய்ப்பு அதிகம்; மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
இது உடல் உள் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தால் வரும் கோளாறு என்பதால், ஸ்கேன் அல்லது அல்ட்ரா சவுண்டு பரிசோதனை மட்டும் செய்து, நீர்ககட்டி இருப்பதை உறுதி செய்வது தவறு.
நேரடியாக மகப்பேறு மருத்துவர் பரிசோதனை செய்த பின், அவரின் ஆலோசனையின் படி, ரத்தப் பரிசோதனை செய்து, நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டையும் தெரிந்து கொள்வது முக்கியம்.

உடற்பயிற்சி
இளம் வதிலேயே பிரச்னையைப் புரிந்து, உணவு, உடற்பயிற்சி உட்பட வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றத்தாலேயே, பிரச்னையை கட்டுப்படுத்த முடியும்.
கவனிக்காமல் வட்டு, திருமணம் ஆனபின், குழந்தை வேண்டும் என்ற காரணத்திற்காக சரி செய்யும் போது, ஹார்மோன் சரியாக வேலை செய்யாமல் போனதற்காக சிகிச்சை தர வேண்டும்.
இந்த நிலையிலும் கருக்குழாயில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை செய்து, அகற்றுவது என்பது தேவையில்லாதது; அதைத் தொடவே கூடாது.
எங்கள் மையத்தில் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையம் உள்ளது. இங்கு வரும் பெண்களுக்கு, நீர்க்கட்டி பிரச்னை மட்டும் இருந்தால், எளிதில் சரி செய்து விட முடிகிறது.
ஆனால், இளம் வயதில், நீர்க்கட்டிகளை அகற்றியவர்களுக்கு, இது சுலபமாக செய்ய முடிவதில்லை.
காரணம், கருக்குழாயில் உள்ள நீர்க்கட்டிகளை அகற்ற செய்யும் சிகிச்சையில், துளை போடுவது, பொசுக்குவது என்று செய்யும் போது, கருக்குழாயே பொசுங்கி விடும்.
குழந்தை வேண்டும் என்று இவர்கள் வரும் போது, கருக்குழாய் சுருங்கி, கருமுட்டை இல்லாமல் போகிறது.
வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றம், இந்தப் பிரச்னைக்கு முதல் தீர்வு, முறையான மருத்துவ ஆலோசனை, மருந்துகள், அடுத்த தீர்வு.

டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன்,
இயக்குனர், மகளிர் சிறப்பு மையம், மதர்ஹூட் மருத்துவமனை, கோவை, 94437 93931

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X