கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2010
00:00

கேள்வி: என்னுடைய எக்ஸெல் ஒர்க்புக்குகளில், பல வகுப்பு மாணவர்களுக்கான ஒர்க் ஷீட்கள் நிறைய உள்ளன. அடுத்த ஒர்க் ஷீட்களுக்குச் செல்ல, கீழே உள்ள டேப் அழுத்தாமல், எந்த கீகளைப் பயன்படுத்திச் செல்ல முடியும்?
–நா. புகழேந்தி, திருவான்மியூர்
பதில்: கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், அடுத்த ஒர்க்ஷீட்டிற்குச் செல்லலாம். கண்ட்ரோல் +பேஜ் அப் அழுத்தினால், முந்தைய ஒர்க்ஷீட்டிற்குச் செல்லலாம்.


கேள்வி: எக்ஸெல் தொகுப்பில் சம் பார்முலா பயன்பாடுகளைச் சுருக்கமாகத் தரவும்.
–சி. வெற்றிவேந்தன், திண்டிவனம்
பதில்: SUM  மிக எளிமையாகக் கையாளக் கூடிய பார்முலா. இந்த பார்முலாவில் எண்கள் அல்லது செல்களில் இருக்கும் மதிப்பைக் குறிக்க அந்த செல்களையே தரலாம். இதற்கான பார்முலா அமைப்பு SUM (numberl, number2, .,.) எடுத்துக் காட்டாக SUM (3, 2)என்பது 5 என்ற விடையைக் கொடுக்கும். இதே போல செல்களில் உள்ள மதிப்புகளைக் கூட்டிக் காண அந்த செல்களின் எண்களைத் தரலாம். எடுத்துக் காட்டாக செல் Al  முதல் A30 வரை உள்ள மதிப்புகளைக் கூட்டிப் பெற =குக்M (அ1:அ30) என பார்முலா அமைக்க வேண்டும்.


கேள்வி: என் பேஸ்புக் தளத்தில் என் நண்பர்கள், செய்திகளுடன் சின்ன சின்ன பட அடையாளங்களை, க்ளாவர், ஹார்ட் போன்ற சீட்டுக் கட்டு படங்கள், சூரியன், மியூசிக் நோட்ஸ் என இவை பலவாறாக இருக்கின்றன. சிறியதாகவும் உள்ளன. இவற்றை எப்படி, எந்த கீ மூலம் அமைப்பது?
–சி. முத்துராஜ், மதுரை
பதில்: பார்ப்பதற்கு அழகாக, உங்களைக் கவர்ந்துள்ளதால் இந்த கேள்வி என்று நினைக்கிறேன். இவை எல்லாம் ஆல்ட் கோட் (Alt Code) =SUM (A1:A30) என்று கூறலாம். ஆல்ட் கீயுடன் நம்பர் ஒன்றை ஏற்படுத்தினால், இவை கிடைக்கும். ஒரு இலக்கம் என்று இல்லை; பல எண்கள் அமைந்த இலக்கமும் அமைக்கலாம். பேஸ்புக்கில் இவற்றை உங்கள் எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி அமைக்கலாம். ஆல்ட் கீ அழுத்தியவாறு, சில எண்களை அமைத்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியவரும். ஆனால் இந்த எண்களை அமைக்கும்போது, நம்பர் பேடில் உள்ள எண்களுக்கான கீகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம் லாக் கீ அழுத்திப் பின் இந்த கீகளை அழுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண் கீகளை பயன்படுத்தக் கூடாது.


கேள்வி: நான் எப்போது என் டெஸ்க் டாப்பிலேயே நடப்பு பைல்களை வைத்து இயக்குகிறேன். இதனால் என் டெஸ்க் டாப் குப்பையும் கூளமுமாகத்தான் இருக்கும். இது எனக்குப் பிடிக்கிறது. ஆனால் விண்டோஸ் அடிக்கடி இந்த குப்பையைக் கிளீன் செய்யவில்லையா என்று கேட்டு செய்தியைக் காட்டுகிறது. இதனை ஓரத்தில் கிளிக் செய்து அலட்சியப்படுத்தி விடுவேன். இந்த செய்தி கிடைக்காமல் இருக்க என்ன செய்திட வேண்டும்?
– சி. கலைமணி, கோவை
பதில்:
உங்களுடைய உணர்வுகள் எனக்குப் புரிகிறது. நிஜமான டெஸ்க் டாப்பான மேஜையில் நான் இப்படித்தான் பொத்தகங்களையும், பைல்களையும், மொபைல் போனையும், பேனா பென்சில்கள் மற்றும் பேப்பர்களையும் குப்பையாக வைத்திருப்பேன். அடிக்கடி என் மனைவி என்னை இதக் கிளீன் பண்ணா என்ன? என்று கேட்கும் போது, ஒரு சிரிப்போடு சமாளிப்பேன். மனைவியை இப்படிக் கேட்காதே என்று சொல்ல முடியாது. ஆனால் கம்ப்யூட்டரைச் சொல்ல முடியும். எப்படி என்று பார்ப்போமா!
உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)  தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties)  திரை கிடைக்கும். இதில் டெக்ஸ்க்டாப் (Desktop)  டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items) என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் "Run Desktop Cleanup Wizard every 60 days" என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடுங்கள். சிரித்துக் கொண்டே ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.


கேள்வி: வேர்ட் தொகுப்பில் ஸ்பெல் செக்கர் உள்ளது. இதே போல பிரவுசர்களில் உள்ளதா? நாம் டைப் செய்வதைத் திருத்தித் தருமா? அதனை எப்படி இயக்குவது?
–கே. பொன்னம்பலம், மதுரை
பதில்
: நல்ல கேள்வி. பல படிவங்கள், பதில்கள் என நாம் இணைய தளங்களில் நிரப்புகையில் தவறு ஏற்படக் கூடாது அல்லவா! ஆனால் இந்த நோக்கத்தில் பார்க்கையில் எனக்கு ஆச்சரியம் தான் வந்தது. மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசரில் மட்டும் தான், அதிலேயே ஸ்பெல் செக்கர் உள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கு ஸ்பெல் செக்கர் இன்னும் தரப்படவில்லை. விரைவில் வரும் என நினைக்கிறேன்.
பயர்பாக்ஸில் இருப்பதை எப்படி இயக்குவது என்று பார்ப்போமா! பொதுவாக இந்த பிரவுசர் இன்ஸ்டால் செய்கையிலேயே, இதுவும் மாறா நிலையில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிடும். இருப்பினும், இந்த வசதியை உங்களால் பயன்படுத்த முடியவில்லை என்றிருந்தால், அதனை எப்படி இயக்குவது என்று பார்க்கலாம். பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி Tools>Options>Advanced என்று செல்லவும். அங்கு கிடைக்கும் ஜெனரல் ("General")  டேப்பினை தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள "Check my Spelling as I Type"  என்று இருப்பதில் டிக் மார்க் அடையாளம் ஒன்றினை ஏற்படுத்தவும். பின் மீண்டும் பிரவுசருக்குத் திரும்பவும். இனி நீங்கள் ஏதேனும் பிழையுடன் ஒரு சொல்லை டைப் செய்தால், அந்த சொல்லின் கீழாக ஒரு சிகப்பு நெளிவு கோடு கிடைக்கும். இதில் ரைட் கிளிக் செய்தால், சரியான ஸ்பெல்லிங் கொண்டு பல சொற்கள் கிடைக்கும். இதில் உங்களுக்குத் தேவையான சொல்லைக் கிளிக் செய்தால், பிழை திருத்தப்பட்ட சொல் அமையும்.


கேள்வி: கம்ப்யூட்டர் பற்றிய கட்டுரைகளில் ரியல் டைம் என்ற சொல் அடிக்கடி இடம் பெறுகிறது. இந்த டைம் எதனைக் குறிக்கிறது? சாதாரண நேரத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
–சா. கிள்ளிவளவன், திண்டிவனம்
பதில்:
ரியல் டைம் (Real Time) என்பது அப்போது என்ன நடக்கிறதோ அதுதான். ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போது என்ன நேரமோ அதுதான் ரியல் டைம். ஒரு வீடியோ காட்சி உங்களுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் கிடைத்து நீங்கள் பார்த்தால், அது ரியல் டைம். அதே போல வெப் கேமரா மூலமாக நீங்கள் பார்க்கும் காட்சி ரியல் டைம் காட்சி. ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது அதனை லைவ் ரிலே என்று சொல்கிறார்கள் இல்லையா! எனவே அது ரியல் டைம். அப்போது உங்கள் அபிமான வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், உங்களுக்கு ரத்த அழுத்தம் எகிறும். இதையே மறு நாள் ஹைலைட்ஸ் எனக் காட்டினால் அது ரியல் டைம் இல்லை. (என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்கு தெரியும் என்பதால், உங்கள் ரத்த அழுத்தமும் மாறாது)
கம்ப்யூட்டர் வழியே தகவல் பெற்று, உடனே அதற்கு நீங்கள் பதில் அளிக்கும் வகையில் செயல்களை மேற்கொண்டால், அது ரியல் டைம். இதைத்தான் Real time operating systems என்று கூறுவார்கள். சுருக்கமாக (RTOS).. கூகுள் இப்போது ரியல் டைம் சர்ச் மேற்கொள்வதாகக் கூறுகிறது. அதாவது கூகுள் தேடலை மேற்கொள்கையில் அது உலகில் அப்போது நடக்கும் விஷயங்களைத் தருகிறது. ஒரு தேடலை மேற்கொள்கையில் அது குறித்து அப்போது இன்டர்நெட்டில் வந்திருக்கும் செய்தி உங்களுக்கு ரியல் டைம் சர்ச்சில் கிடைக்கும்.
இந்த ரியல் டைம் விஷயத்தில் இன்னொரு தகவலையும் தரட்டுமா! இதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ஹார்ட் ரியல் டைம் (hard real time). நீங்கள் கார் ஓட்டிக் கொண்டு போகும்போது, காருக்கு முன்னால் நடந்து போகும் ஒருவர் திடீரென நிற்கிறார். உடனே நீங்கள் பிரேக்கை சட் என்று அழுத்த வேண்டும். இது ஹார்ட் ரியல் டைம். இதில் சில விநாடிகள் கூட லேட் ஆகக் கூடாது. நீங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறீர்கள். பயண நேரம் என்னவென்று அவ்வப்போது ரியல் டைமாக தருகிறார்கள். இது சாப்ட் ரியல் டைம் (soft real time)   இதில் சில நிமிடங்கள் முன்னே பின்னே ஆனாலும் சிக்கல் இல்லை.


Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X