அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2019
00:00

கே
கணினி தொழில்நுட்ப துறையில் ஈடுபட்டுள்ள நண்பர் ஒருவர், 'பீச் மீட்டிங்'கில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவர் கூறிய சம்பவம் இது:
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு, புதுப்புது, 'மொபைல் ஆப்'களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. அதில் ஒன்று, 'காஸ்டில்' என்ற 'ஆப்!'
அதன் வேலை, புதுப்புது சவால்களை கண்டுபிடித்து, தன் வாடிக்கையாளர்களை செயல்படுத்த வைப்பது தான்.
அந்த சவாலை செய்து, புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும். அதில் சிறந்தவைக்கு பரிசு தருவர். பரிசு பெறுபவர், ஒரு பங்கு தொகையை, சமூக நல சேவைக்கு வழங்க வேண்டும்.
இந்த வகையில், சமீபத்திய சவால் என்ன தெரியுமா?
பசுவுக்கு முத்தம் கொடுத்து, அதை புகைப்படமாய் எடுத்து அனுப்புவது தான்.
'அட கஷ்ட காலமே...' என்றார், ராமசாமி அண்ணாச்சி.
'உமக்கு தான் ஓய்... அது கஷ்டம். ஆனால், வெளிநாட்டை சேர்ந்தோர் உடனே செய்யத் துடிக்கின்றனர்...' என்று, தொடர்ந்தார், நண்பர்:
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பக்கெட் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்... மெதுவாக ஓடும் காரிலிருந்து இறங்கி, 'டான்ஸ்' ஆடுவது என்று, பல சவால்கள் நடத்தப்பட்டன. உலகம் முழுவதும், சிறிது காலம் பரபரப்பாக இருந்தது. அது போன்றது தான், இதுவும்...
ஆனால், இந்த பசு முத்த சவாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, ஆஸ்திரிய நாடு. 'ஆபத்தான விளையாட்டான இதை, நாட்டு மக்கள் தவிர்க்க வேண்டும்...' என, ஆலோசனை கூறியுள்ளது.
இதற்கு ஒரு பின்னணி உண்டு. இந்த சவால், பிரபலமாவதற்கு முன், ஆஸ்திரியா நாட்டில் ஒரு பெண்ணை, பசு மாடு ஒன்று, மிதித்து கொன்று விட்டது. இது வழக்காக மாறி, சமீபத்தில் தீர்ப்பும் கூறப்பட்டது.
அதாவது, 'பசு மாட்டின் சொந்தக்காரர், அந்த பெண்ணின் கணவருக்கு, 4.90 லட்சம் யூரோ, இந்திய மதிப்பில், 4 கோடி ரூபாய், நஷ்டஈடு வழங்க வேண்டும்...' என தீர்ப்பு வழங்கியது.
'இது, ஏற்க முடியாத தீர்ப்பு...' என, பசுவின் சொந்தக்காரர், மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளார்.
இவருக்கு, ஆஸ்திரிய விவசாயிகள் கழகத்தின் ஆதரவும் உள்ளது.
இனி, தீர்ப்பு எப்படி வரப்போகிறதோ என எதிர்பார்த்துள்ளனர்.
இப்போது புரிகிறதா... ஆஸ்திரிய அரசு, இதை ஏன், ஆபத்தான தொல்லை சவால் என வர்ணித்துள்ளது... என்று கூறி முடித்தார், நண்பர்.


காவல் துறையில், டி.ஜி.பி., ஆக இருந்து, ஓய்வு பெற்றவர், பொன்.பரமகுரு. 'ஒரு போலீஸ் அதிகாரி, எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி வாழ்ந்து காட்டியவர்...' என, பலர் பாராட்டப்பட்டதுண்டு!
இவர் எழுதிய, 'காவல் நினைவுகள்' புத்தகத்திலிருந்து, ஒரு சுவையான தகவல்:
காஞ்சிபுரத்தை சேர்ந்த கோவில் யானை, ஜானகி. ஒரு சமயம், சென்னை, சைதாப்பேட்டையில் நடந்த, அய்யப்பன் வழிபாட்டிற்காக அழைக்கப்பட்டிருந்தது. யானையுடன், பாகன் வரவில்லை; மாறாக, உதவியாளன் தான் வந்திருந்தான். யானைக்கு, அவன் சரிவர உணவு அளிக்கவில்லை.
இதனால், கடும் கோபம் அடைந்த யானை, சைதாப்பேட்டையிலிருந்து, அண்ணாசாலை வழியாக பிளிறியபடி ஓடியது; இறுதியாக, எழும்பூர், 'கமாண்டர் இன் சீப்' சாலையில் ஆட்டம் போட்டபடி நின்று கொண்டிருந்தது.
சாலையின் இருபுறமும், வேடிக்கை பார்க்க, பெரும் கூட்டம் கூடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், எனக்கு போன் செய்து, யானையை சுட உத்தரவிட்டார், அப்போதைய, ஐ.ஜி.,
அன்று, மெரினா கடற்கரை குடியிருப்பில் நடந்த கலவரத்தை அடக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். உடனே, 'ஒயர்லெஸ்' மூலம், ஐ.ஜி.,க்கு, 'சார்... யானையை சுட தேவையில்லை; நான் நேரில் சென்று, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்...' என்று கூறி, அந்த இடத்திற்கு புறப்பட்டேன்.
யானை இருக்கும் இடத்திற்கு சென்றதும், அங்கிருந்த ஒரு காவலரை கூப்பிட்டு, அருகில் இருந்த ஓட்டலிலிருந்து சாதம் வாங்கி வர கூறினேன்.
அதேசமயம், அருகில் இருந்த மற்றொரு காவலரிடம், அப்பகுதியின் தென்னை மரத்திலிருந்து, தென்னை மட்டைகளை வெட்டி எடுத்து வரச் செய்தேன்.
கூடுதலாக, புரசைவாக்கம் இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, கரும்பு கட்டு ஒன்றை தேடிப் பிடித்து வாங்கி வரும்படியும் கட்டளையிட்டேன். மேலும், மிருககாட்சி சாலை, 'சூப்பிரண்டெண்'டுக்கு போன் செய்து, அங்குள்ள கோரைப் புல்லை வெட்டி, உடனே அனுப்புமாறு வேண்டினேன்.
இதனிடையே, யானையை நெருங்கிய என்னை, 'வேண்டாம் சார்... யானை கோபத்தில் உள்ளது. ஏதாவது ஆபத்து நேரிடலாம்...' என எச்சரித்தனர், கூட்டத்தினர்.
'பரவாயில்லை... யானைக்கு உதவ தானே போகிறேன். யானை தாக்கினால், கவிஞர் பாரதியாருக்கு ஏற்பட்ட முடிவு, எனக்கு ஏற்பட்டாலும் கவலையில்லை...' எனக் கூறி, பயமின்றி யானை அருகே சென்றேன்.
நான் நெருங்குவதை பார்த்ததும், சாலையை விட்டு விலகி, ஒரு புளிய மரத்தடியில் போய் நின்றது, யானை. ஓட்டலிலிருந்து வாங்கி வந்த சாதத்தை, உருண்டையாக எடுத்து, 'கணேசா... இந்தா, பசியாறு...' எனக் கூறி, அதை யானைக்கு அளித்தேன்.
யானையும், தன் துதிக்கையால் அதை வாங்கி சாப்பிட்டது. அடுத்து, மற்றொரு காவலர் வெட்டி வந்த, தென்னங் கீற்றுகளையும் பிய்த்து சாப்பிட்டது.
இதனிடையே கரும்பும் வந்து சேர்ந்தது. அதையும் யானைக்கு போட்டனர். கூடுதலாக கோரைப் புல்லும் வர, அதுவும் யானைக்கு போடப்பட, அனைத்தையும் கபளீகரம் செய்தது; பசி அடங்கி, அமைதியானது, யானை.
இதனிடையே, காஞ்சிபுரத்திலிருந்து, பாகனை வரவழைத்து, அவனிடம், யானை ஒப்படைக்கப்பட்டது.
'பரமகுருவின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரியவலம் நல்லுார். கரி என்றால், யானை. யானை வலம் வந்த ஊரை சேர்ந்தவர் என்பதால், யானையை மடக்கி பிடித்து விட்டார்...' என, யானையுடன், பரமகுரு இருந்த படத்தை போட்டு, பாராட்டியது, ஒரு வார இதழ்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
30-செப்-201910:21:05 IST Report Abuse
pattikkaattaan மாடு என்றதும் எனக்கு ஒரு சுவையான பழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது .. எங்கள் கிராம பண்ணைவீட்டிற்கு நான்கைந்து நண்பர்கள் ஒருமுறை வந்திருந்தார்கள் .. அதில் ஒருவர் தூங்கியெழுந்தவுடன் இயற்கை உபாதைக்காக வீட்டிற்கு பின்புறம் சென்று குத்தவைத்து அமர்ந்துள்ளார் .. திடீரென்று தன்னை யாரோ பின்னாலிருந்து அலேக்காக தூக்கியுள்ளனர் .. அதிர்ந்துபோய் இவர் திரும்பி பார்த்தால், தான் ஒரு மாட்டின் தலைமேல் இருப்பதையும் , அதன் இரு கொம்புகளும் தன் தொடைகளுக்கு நடுவே இருப்பதையும் உணர்ந்துள்ளார் .. பயத்தில் கத்தவும் முடியவில்லை .. மாட்டினால் அவரை முட்டித்தள்ளவும் முடியவில்லை .. இவர் கைகளால் அதன் இரு கொம்புகளை பிடித்துக்கொண்டுள்ளார் .. மாடும் அப்படியே இவரை சிறுது தூரம் தூக்கிச்சென்று, அருகில் இருந்த தானியம் அடிக்க பயன்படும் கல் உருளையின்மேல் இடிக்க முற்பட்டுள்ளது .. இவர் அதுதான் சமயம் என்று கல் உருளையின்மேல் எட்டிக்குதித்து , தலை தெறிக்க ஓடிவந்து வீட்டிற்குள் புகுந்துவிட்டார் .. அவருடைய நல்லநேரம் , மாட்டின் கொம்பு படாத இடத்தில் எங்கும் படவில்லை .. இன்றும் அவரை நினைக்கும்போது சிரிப்பு வரும் ..
Rate this:
Cancel
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
29-செப்-201909:23:46 IST Report Abuse
Nagarajan Duraisamy பொன்.பரமகுருவின் ஜீவகாருண்யத்துக்கு ஈடில்லை. கண் மண் தெரியாமல் சுடுவது யாருக்கும் பயனளிக்காது, கையில் ஆயுதம் இருந்தால் எல்லா பிரச்சினைகளையும் அதை கொண்டு தீர்ப்பது மதியிழந்தோர் செயல். பிரச்சினைகளை இயற்கையின் வழியில் தீர்ப்பதே மதியூகிக்கு அழகு.
Rate this:
Cancel
29-செப்-201900:52:27 IST Report Abuse
Ranjith Rajan CHINESE ULLA OLYMPICS STADIUM THAN ADHU.. ANDHUMANI POSE KODUKKUM BUILDING.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X