இளஸ்... மனஸ்! (15)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 அக்
2019
00:00

அன்பு சகோதரி மெடோசுக்கு!
என் வயது, 35; தனியார் நிறுவனத்தில், வரவேற்பு பெண்ணாக பணிபுரிகிறேன். என் கணவருக்கு வயது, 40; தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவிபொறியாளராக பணிபுரிகிறார். எங்களது ஒரே மகனுக்கு வயது, 10; மெட்ரிகுலேஷன் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறான்.
கடந்த, ஆறு மாதங்களாக, அவன் நடவடிக்கையில், பெரும் மாற்றங்கள் தெரிகின்றன. என், 'ஐப்ரோ' பென்சிலால், மீசை வரைந்து கொள்கிறான்; கணவர் உபயோகிக்கும், 'ஷேவிங் கிரீம்' எடுத்து கன்னங்களில் தடவி, முகச்சவரம் செய்ய முயற்சிக்கிறான்.
கரடு முரடான குரலில் பேச எத்தனிக்கிறான். என்னை, 'வாடி...போடி...' என்று, ஒருமையில் அழைக்கிறான்.
'இப்படியெல்லாம் செய்ய கூடாதுப்பா...' என கெஞ்சினால், 'நான் என்ன இன்னும் சின்னப்பயன்னு நினைக்கிறீங்களா... பெரிய மனுஷனாய்ட்டேன்...' என்கிறான்.
இரண்டு மாதங்களுக்கு முன், 'அடியே அம்மா... நான் எங்க கிளாஸ் டீச்சரை காதலிக்கிறேன்; அவங்களும், என்னை காதலிக்கிற மாதிரி தான் தெரியுது; நீயும், உன் புருஷனும், டீச்சர் வீட்டுக்கு போய் திருமணம் பேசி முடிங்க... வர்ற சம்மர் லீவுல கல்யாணத்த வெச்சுக்கலாம்...' என்றான்.
பதறியடித்து, 'இப்படி எல்லாம் பேசக் கூடாதுப்பா... திருமணம் எல்லாம் படிச்சு முடிச்சு, வேலைக்குப் போனதுக்கு அப்புறம் தான்; அதுக்கு இன்னும், 15 ஆண்டுகளாவது ஆகும்...' என்றோம். கேட்பதாய் இல்லை.
'நீங்க திருமணம் செய்து வைக்கலன்னா... டீச்சரை கூட்டிட்டு போய், கோவில்ல திருமணம் செய்துப்பேன்...' என, மிரட்டுகிறான். வீடே நரகமாகி விட்டது.
என் பையனுக்கு, நல்ல புத்தி புகட்டி, திருந்த வழி சொல்லுடீயம்மா.

பெற்ற மகனால், நொந்து வெந்து கொண்டிருக்கும் அக்காவுக்கு,
எதிர்பாலின கவர்ச்சி, ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் பிறந்த உடனே ஆரம்பித்து விடுகிறது. அம்மாவைப் போல, மனைவி வேண்டும் என, ஆணாய் பிறந்தவர்கள் ஆசைப்படுகின்றனர். பருவ வயதில் சுரக்க வேண்டிய ஹார்மோன்களை, அதற்கு முன்னதாகவே, துரித உணவுப் பழக்கம் சுரக்க வைத்து விடுகிறது.
உன் மகன் துர்நடத்தைக்கு, கீழ்க்கண்டவை காரணங்களாக இருக்கக்கூடும்...
* வயதுக்கு மீறிய சினிமா, 'டிவி' சீரியல்களை பார்த்து, மனம் திரிந்து போயிருக்கலாம்
* பள்ளி வேன் கிளீனரோ, சீனியர் மாணவர்களோ, தெரு இளைஞர்களோ, கெட்டவற்றை பேசி, மனதில் விஷத்தை கலந்திருக்கலாம்
* அக்கம் பக்கத்து இளைஞர்களின் நடவடிக்கையை அனிச்சையாக பார்த்து, அது போல் நகலெடுக்க முயன்று இப்படி செய்கிறானோ என்னவோ...
* வகுப்பு ஆசிரியை, மாணவர்கள் மீது, அன்பும், அக்கறையும் பொழிந்திருக்கக்கூடும். அவர் மீதான அபிமானத்தை, உன் குட்டி இளவரசன், தவறாக மொழி பெயர்க்க வாய்ப்பு உண்டு
* உங்களுடன் சீரான தகவல் தொடர்பு இல்லா விட்டால், தனிமையில் வாடும் சிறுவன் மனதில், விபரீத எண்ணங்கள் பூக்க வாய்ப்பு உண்டு.
இது போன்ற நடவடிக்கைகளால், மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்; அவன் நடத்தையை சீரமைக்க, சில யோசனைகள் சொல்கிறேன்...
உன் மகன் நடத்தையை மாற்றுவது சுலபம் என்று முதலில் நம்பு; அவன் படிக்கும் பள்ளிக்குச் செல்; வகுப்பாசிரியை, எந்த விதத்தில் அவனை வசீகரித்திருக்கக்கூடும் என, அவதானி. சக மாணவர்களின் நடத்தை பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்.
வகுப்புச் சூழல் சரியில்லை என்றால், வகுப்பு பிரிவை மாற்று; ஒட்டு மொத்த பள்ளியின் தரமே சரியில்லை என்றால், பள்ளியை மாற்றவும்.
துரித உணவு வகைகளை தவிர்த்து, உன் செல்லத்திற்கு, பராம்பரிய வகை உணவுகளை உண்ணக் கொடு; இதனால், உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உன் பூனைக்குட்டியின் நட்பு வட்டத்தை கண்காணி; கூடா நட்பு இருந்தால் கத்திரித்து விடு. அவன் பார்க்கும் சினிமா, 'டிவி' தொடர்களைக் கண்காணித்து விலக்கு. அலைபேசிகள், உன் பொன்னுக்குட்டி கைக்கு போகாமல் பார்த்துக் கொள்.
மகனுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்து; பாட்டி, தாத்தா இருந்தால், அவர்கள் மூலம், உறவின் உன்னதத்தை புரிய வைக்க முயற்சி செய்.
ஷேவிங் க்ரீம், பிளேடு, ஐப்ரோ பென்சில் போன்றவை, அவன் கைகளில் சிக்காமல் பார்த்துக்கொள்.
உன்னை, 'வாடி, போடி' என, அழைத்தால், அவனை அலட்சியப்படுத்து; கண்ணியமாக அழைத்தால் மட்டுமே, தேவைகள் பூர்த்தி செய்வேன் என, எளிமையாக புரிய வைக்க முயற்சி செய்.
'மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற மதிப்பில், குரு நிலையில் வகுப்பாசிரியையை வைத்து தினமும் வணங்க கற்றுக்கொள் செல்லம்...' என்ற அறிவுரையை அடிக்கடி, அவன் காதில் விழும்படி சொல்.
காதல், நட்பு, அன்பு, அபிமானம் போன்ற, மனித உணர்வு நிலைகளை வித்தியாசப்படுத்தி அறிய, நாசுக்காக கற்றுக் கொடு.
எல்லாவற்றுக்கும் மேலாக, உன் கன்றுக்குட்டியை, ஒரு மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று, நடத்தையை சீராக்கும் ஆலோசனையை பெறுவது உத்தமம்; உன் மாயக்கண்ணன், விரைவில் நேர்வழிக்கு திரும்பி, வாழ்வில் சிறக்க வாழ்த்துகிறேன்.
- பிரார்த்தனைகளுடன், மெடோஸ்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X