கன்னி பெண்களுக்கு, புதிய ஆடை பரிசளிப்பது, நவராத்திரியின் முக்கிய அம்சமாகும்
* நவதானிய சுண்டல், நவக்கிரக நாயகர்களை திருப்திப்படுத்தும்; கோள்களால் வரக்கூடிய துன்பங்களை தடுக்கும்
* குஜராத்தில், நவராத்திரி ஒன்பது நாட்களும், பெண்கள், கும்மியடித்து நடனமாடுவர். இந்த நடனத்துக்கு, 'கரவோ' என்று பெயர்
* நவராத்திரி ஒன்பது நாட்களும், மகா சக்தியை, ஐதீகப்படி வணங்கினால், முக்தி பேறு கிட்டும்; வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்
* நம் ஊரில் முளைப்பாரி வைப்பது போல, மகாராஷ்டிரா மாநிலத்தில், நவராத்திரியின் முதல் நாளன்று, நவதானியங்களை மண் கலசங்களில் வைப்பர். விஜயதசமியன்று, அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஆறுகளில் கரைத்து விடுவர்.