* தையல் சாமான்கள் வைக்கும் பெட்டியில், சிறிய காந்தத்தை வைத்துக் கொண்டால், தைக்கும் ஊசி, சோபாவிலோ, தரையிலோ, மெத்தையிலோ விழுந்தால் எடுக்க வசதியாக இருக்கும்
* புடவைக்கு, 'பால்ஸ்' தைக்கும் முன், அதை சரியான நிலையில் குண்டூசிகளால் பொருத்தி வைத்திருந்தால், சீராக தைக்க முடியும்
* பட்டு, பருத்தி துணிகளை, நீண்ட நாட்கள் துவைக்காமல் வைத்திருந்தால், அதில் உள்ள கஞ்சியால், ஓட்டை விழுந்து விடும். கஞ்சியை போக்க, சோப்பு போடாமல், துணியை நல்ல தண்ணீரில் அலசி, உலர்த்தி, இஸ்திரி போட்டு வைத்தால், கிழியாமல் இருக்கும்
* துணிகளில் ரத்த கறை படித்தால், முதலில் குளிர்ந்த நீரிலும், பிறகு சோப்பில் ஊற விட்டால், கறைகள் அகலும். வெந்நீரில் அலசினால், கறைகள் உறுதியாக பிடித்துக் கொள்ளும்.