இந்திய தபால் துறை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2019
00:00

அக்.,10 தேசிய அஞ்சல் தினம்

* உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையை கொண்ட நாடு, இந்தியா. இரண்டாவது, சீனா. இந்தியாவில், 57 ஆயிரம் அஞ்சலகங்கள் இயங்குகின்றன
* முதன்முதலாக, 1764ல், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, சென்னை, மும்பை மற்றும் கோல்கட்டாவில், அப்போதைய கவர்னர், வாரன் ஹேஸ்டிங் என்பவரால், அஞ்சலகங்கள் துவங்கப்பட்டன
* ஜூலை 1, 1852ல் வெளியிடப்பட்ட தபால் தலை, வட்ட வடிவில் அமைந்திருந்தது.
* விக்டோரியா மகாராணி உருவம் பொறித்த தபால் தலை, 1854ல் வெளியிடப்பட்டது
* இந்தியாவில், 1.54 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் இயங்குகின்றன. நாள் ஒன்றுக்கு, இரண்டு லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன
* இந்திய தபால் துறை, 150 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சேவை புரிந்து வருகிறது. 2001ம் ஆண்டு கணக்கின்படி, 5.95 லட்சம் ஊழியர்கள்,
இதில் பணிபுரிகின்றனர்
* 21 சதுர கி.மீ.,யில், 6,000 பேருக்கு ஒரு அஞ்சலகம் என்ற கணக்கின்படி செயல்படுகிறது. தமிழகத்தில் மட்டும், 10 ஆயிரத்து, 263 அஞ்சலகங்கள் இயங்குகின்றன
* அக்காலத்தில், 100 மைல், அதாவது, 161 கி.மீ., துாரத்திற்கு கடிதம் எடுத்து செல்ல செலவு, இரண்டணா தான். (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு)
* ஆறு இலக்கம் கொண்ட, அஞ்சல் குறியீட்டு எண், 1972ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் இலக்கம் - மண்டலம், இரண்டாவது - துணை மண்டலம், மூன்றாவது - அஞ்சல் பிரிப்பக மாவட்டம், கடைசி மூன்று - அஞ்சல் வட்டத்தின், அஞ்சல் நிலையத்தை குறிக்கும்
* அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள சேமிப்பு திட்டங்கள்: செல்வ மகள், பொது சேம நல நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி சேமிப்பு கணக்கு, காப்பீடு திட்ட சேவை, மாத வருவாய் திட்டம், வைப்பு தொகை திட்டம், கடவுச் சீட்டு விண்ணப்பம் மற்றும் தங்க காசு விற்பனை.
- ஜோல்னாபையன்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Krithivasan - Manama,பஹ்ரைன்
08-அக்-201913:06:39 IST Report Abuse
K.Krithivasan In one place it is said there are 57,000 post offices and in another 1.5 lakhs post offices in India Which is correct?
Rate this:
Cancel
Raja - chennai,இந்தியா
06-அக்-201920:32:20 IST Report Abuse
Raja "இந்தியாவில், 1.54 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் இயங்குகின்றன. நாள் ஒன்றுக்கு, இரண்டு லட்சம் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன. "இரண்டு லட்சம் கடிதங்கள் தானா?
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
06-அக்-201903:16:22 IST Report Abuse
.Dr.A.Joseph இப்போதெல்லாம் தபாலை அலுவலகம் வந்து வாங்கி செல்லுங்கள் என்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X