கனவு தவிர்... நிஜமாய் நில்! - மன அழுத்தத்தால் மாறும் மாதவிடாய் சுழற்சி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2019
00:00

இளங்கலை மருத்துவப் படிப்பு முடித்து, முதுகலை படிப்பில் சேர, நுழைவுத் தேர்வுக்கு தயாரான சமயத்தில், மூன்று மாதங்களாக, மாதவிடாய் வரவில்லை என்று ஆலோசனைக்கு வந்தார், மருத்துவ மாணவி ஒருவர். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், தேர்வு பயத்தால் ஏற்படும் மன அழுத்தம், இவற்றில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த மாணவிக்கும் அப்படித் தான்.
மாதவிடாய் ஆரம்பித்த, முதல் மூன்று ஆண்டுகளில், ஒழுங்கற்ற மாதவிடாய் வருவது இயல்பு; இது பற்றி கவலைப்பட தேவையில்லை.
அதன் பின், 14 வயதில் இருந்தே, அடுத்தடுத்து வரும் பொதுத் தேர்வுகள் தரும் அழுத்தம் காரணமாக, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவது, தற்போது அதிகமாகி விட்டது. பள்ளி, கல்லுாரியில், எவ்வளவு அழுத்தம் இருந்தாலும், வீட்டில், குழந்தைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்.
பிளஸ் 1 படிக்கும் மாணவியை, மாதவிடாய் தள்ளிப் போகிறது என்று, அழைத்து வந்தனர். குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேர் உடனிருந்தனர். 'இவளுக்கு பீரியட்ஸ் வந்து இன்றோடு, 102 நாட்கள் ஆகி விட்டது' என, அவளின் பாட்டி, தேதியுடன் சொன்னார்.
அவர்களை வெளியில் அனுப்பிவிட்டு, இந்தப் பெண்ணிடம் பேசிய போது, 'தினமும் வந்துருச்சா வந்துருச்சா என்று, நான் ஏதோ தவறு செய்வதைப் போல கேட்கின்றனர்; எனக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது' என்றாள்.
மகளின் மாதவிடாய் நாட்கள், அம்மாவுக்கு தெரிந்து, ஆதரவாக இருக்க வேண்டும். அதேசமயம், அதீத கவனிப்பு என்ற பெயரில் இப்படி அழுத்தம் தருவது தவறான அணுகுமுறை.
மன அழுத்தம் அதிகமாகும் போது, 'புரோலாக்டின்' என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரந்து, கரு முட்டை வளர்ச்சியை தடுக்கும்; மாதவிடாய் தாமதமாகும்.
ரத்தப் பரிசோதனை மூலம், இந்த ஹார்மோன் சுரப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அடுத்து, தைராய்டு ஹார்மோன் சீராக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
மாதவிடாய் தொடர்ந்து வராமல் இருந்தால், கர்ப்பப் பை மற்றும் கருக் குழாயின் வெளி அடுக்கில், செல்கள் சேர்ந்து, நீர்க் கட்டிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
துரித உணவுகளை அதிகம் சாப்பிட்டு, உடலுழைப்பே இல்லாமல் இருந்தால், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும்.
மாதவிடாய் சுழற்சியில், ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் இரண்டும், ஒன்று அதிக அளவில் சுரக்கும் போது, மற்றது குறைவாக சுரக்கும். இப்படி இல்லாமல், அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிட்டால், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, கரு முட்டை வளர்ச்சியை தடுத்து, மாதவிடாய் வராது.
அவசியமான சில மருத்துவப் பரிசோதனை மூலம், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
உடல் ரீதியிலான பிரச்னை எதுவும் இல்லை; மன அழுத்தம் மட்டுமே காரணம் என்றால், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
எந்த வயதினராக இருந்தாலும், மன அழுத்தம் குறைந்ததும், 90 நாட்களுக்குள் தானாகவே மாதவிடாய் வந்து விடும்.

டாக்டர் அஜந்தா சஞ்சீவி,
மகப்பேறு மருத்துவர்,
சென்னை, 044 - 6166 6666

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X