ஜனவரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2010
00:00

தமிழகம்


ஜன. 7: சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.


ஜன. 11: ஈரோட்டில் மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை. சோகம் தாங்காமல் குடும்பத்தினர் மூவரும் தற்கொலை.


ஜன. 12: இடைத்தேர்தல் வெற்றி: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் முடிவு ஜன.12ல், அறிவிக்கப்பட்டது. தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிட்டார். வெற்றிக்கு காரணமாக இருந்த மு.க.அழகிரிக்கு, ஜன.13ல், தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.


ஜன. 15: இலங்கையில் போர்நிறுத்தத் துக்காக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னையில் உண்ணாவிரதம்.


ஜன. 16: துவரங்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் மூவர் பலி.


ஜன. 19: புதுச்சேரியில் ராஜிவ் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு.


ஜன. 21: தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் 1 கோடி பேர் பலன் பெறும் வகையில் புதிய காப்பீட்டு திட்டம். * தமிழகம் வந்த தலாய்லாமா சென்னை பல்கலைக்கழக மாணவர்களிடையே உரை. * தமிழகத்தில் நடந்த கள் இறக்கும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது.


ஜன. 23: இலங்கையில் போர்நிறுத்தம் மேற்கொள்ள தமிழக சட்டசபையில் இறுதி தீர்மானம். * கலர் "டிவி' ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செல்வகணபதி விடுவிப்பு.


ஜன. 24: ஏர்வாடியில் மனநலம் பாதிக் கப்பட்டவர் தீவைத்ததில் 4 பேர் பலி.


ஜன. 25: முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக முதல்வர் கருணாநிதி சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதி.


ஜன. 27: நெல்லை அருகே வேனும், லாரியும் மோதியதில் 6 பெண்கள் உட்பட 15 பேர் பலி. ஜன. 30: முத்துக்குமரன் தீக்குளிப்பு இலங்கையில் போரை நிறுத்தி தமிழர்களை காப்பாற்ற வேண்டும் எனக் கோரி சென்னை சாஸ்திரி பவன் முன் ஜன.30ல் முத்துக்குமரன் என்ற இளைஞர் தீக்குளித்தார்.


இந்தியா


ஜன.1: அசாமில் கவுகாத்தி நகரில் மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலி.


ஜன. 8: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.


ஜன. 9: மே.வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் நந்திகிராமில் திரிணாமுல் வெற்றி. காங்கிரஸ், மா.கம்யூ., கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி.


ஜன.12: ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த சிபு சோரன், எம்.எல்.ஏ.,வாக இல்லாததால் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தலில் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.


ஜன. 20: உ.பி., முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பா.ஜ.,வில் இருந்து விலகல்.


ஜன. 24: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடந்தது.


* சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை டில்லி ஐகோர்ட் நீக்கியது.


ஜன. 25: நொய்டாவில் இருந்து டில்லிக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள்,போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை.


* இளம் பெண்கள் மீது தாக்குதல்:  ஜனவரி 24: பெண்கள் போதைப் பொருட்களை உட்கொண்டு ஆபாசம் நடனம் ஆடுகின்றனர் என்று குற்றம்சாட்டி, ராம்சேனா அமைப்பினர், மங்களூரு ஓட்டலில் இருந்த பெண்கள் மற்றும் ஆண்களை கண்மூடித் தனமாக தாக்கினர். இதில் இரு இளம் பெண்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கையில் அவர்கள் இறங்கியிருக்கக்கூடாது என்று கண்டனங்கள் எழுந்தன.


ஜன. 26: மும்பை தாக்குதலின் போது பயங்கரவாதிகளை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த ஹேமந்த் கர்காரே உள்ளிட்ட 11 பேருக்கு டில்லியில் குடியரசு தின விழாவின் போது "அசோக சக்ரா' விருது.


ஜன. 27: போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை குறித்து ராஜபக்சேயுடன் பேச இலங்கைக்கு சென்றார் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.


ஜன. 31: அரசியல் சார்புடன் செயல்படும் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு கடிதம்.


உலகம்


ஜன. 2: விடுதலைப்புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றியது இலங்கை ராணுவம்.


ஜன. 4: இந்தோனேஷியாவின் பப்புவா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் பலி.


ஜன. 6: வங்க தேசத்தில் நடந்த பார்லி., பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 230 இடங்களை கைப்பற்றியது.


* வங்கதேச அதிபர் இஜா உதீன் அகமது, அதிபர் மாளிகையில் ஷேக் ஹசீனாவுக்கும் 23 அமைச்சர்களுக்கும் ஜன. 6ம் தேதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை ஹசீனா பிரதமராக பதவி வகித்தார்.


ஜன. 7: விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடை. ஜன. 9: பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலி.


ஜன. 12: "ஸ்லம்டாக் மில்லினர்' என் ஹாலிவுட் படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு "கோல்டன் குளோப்' விருது.


* பணியிடத்தில் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி பலியானதால், பக்ரைனில் உடன் பணியாற்றிய நான்கு இந்திய தொழிலாளர்கள் கைது.


ஜன. 15: சத்யம் நிறுவனத்தில் பணிபுரிந்த அக்ஷய் விஷால் என்ற இளைஞர் அமெரிக்காவில் ஆர்கான்சசில் சுட்டுக்கொலை.


* புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தலைவராக காஷ்மீரின் கூடுதல் டி.ஜி.பி., ராதா வினோத் ராஜு நியமனம்.


ஜன. 20: வரவேற்றார்... விடைகொடுத்தார்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, ஜன. 20ல், அதிபராக பதவியேற்றுக்கொண்டார். எட்டு ஆண்டுகாலம் அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் புஷ் மக்களிடம் இருந்து விடைபெற்றார்.


ஜன. 25: விடுதலைப்புலிகளிடம் இருந்து முல்லைத்தீவை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.


ஜன. 29: அப்பாவி தமிழர்கள் வெளியேறும் வகையில் இலங்கையில் 48 மணிநேர போர் நிறுத்தம்.


விளையாட்டு


ஜன. 6: இலங்கை அணி, வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது.


ஜன. 7: தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது.


ஜன. 11: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரரான சோம்தேவ் தேவ்வர்மன், குரோஷியாவின் மரின் சிலிக்கிடம் தோல்வியடைந்தார். ஜன. 12: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஹைடன் ஓய்வு.


ஜன. 15: ரஞ்சி கோப்பை பைனலில் உ.பி., அணியை வீழ்த்திய மும்பை அணி 38 வது முறையாக கோப்பை வென்றது.


* பஞ்சாபில் நடந்த அகில இந்திய பளு தூக்கும் போட்டியில், அதிக புள்ளிகளை பெற்ற தமிழக அணி யினருக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.


ஜன. 18: இளைஞர் ஒலிம்பிக் ஹாக்கி பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.


ஜன. 31: புதிய வரலாறு: மெல்போர்ன் நகரில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் புதிய வரலாறு படைத்தார் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி. ஜூனியர் ஒற்றையர் பிரிவு பைனலில் யூகி பாம்ப்ரி, ஜெர்மனியின் அலெக்சாண்டிரோஸ் பெர்டினாண்டோஸ் ஜியார்கோடாசை 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, முதன்முதலில் சாம்பியன் கோப்பை வென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற புதிய சாதனை படைத்தார்.


* நான்காவது முறை ஜன. 31: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் டினரா சபினாவை 6-0, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தி, சாம்பியன் கோப்பை வென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலியன் ஓபனில் நான்காவது முறையாக (2003, 2005, 2007, 2009) பட்டம் வென்றார். இது இவரது 10 வது கிராண்ட்ஸ்லாம்பட்டம்.


Advertisement

 

மேலும் வருடமலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கிஷோர்குமார் - Pudhucherry,இந்தியா
01-செப்-201019:28:45 IST Report Abuse
கிஷோர்குமார் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு... தினமலரில் வரும் கம்ப்யூட்டர் மலர் மிகவும் உபயோகமாய் உள்ளது. புத்தகங்களை E-Book வடிவில் தருவது பாராட்டத்தக்கது. ஆனால் சில அல்லது முந்தைய பதிப்புகள் எளிதில் E-Book வடிவில் கிடைக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X