பெரியவர் ஆறுமுகம் (60), தேனியைச் சேர்ந்தவர். பெயின்டிங் காண்ட்ராக்ட் உட்பட பல வேலைகள் செய்த இவரை, இணைய உலகத்திற்குள் அழைத்து வந்தது இவரது மகன் கோபிநாத். அருமையாக சமைக்கத் தெரிந்த அப்பாவிற்காக யூடியூப்பில், வில்லேஜ் புட் பேக்டரி ( Village food factory) என்ற சானல் தொடங்கினார். ஆறுமுகத்தின் யூடியூப் சானலை இன்று 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். இவரைப்பற்றி பி.பி.சி. வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.