உலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. ஆனால் எப்போதும், ஒரு சில வகை உயிரினங்கள் மீதே நம்முடைய முழு கவனமும் இருக்கிறது. நகரமயமாக்கலில் விரைவாக அழிந்துவரும் உயிரினம்தான் தட்டான்கள். நம்முடைய நன்னீர் நிலைகளைப் பாதுகாக்கும் முக்கியப் பணிகளைத் தட்டான்கள் செய்து வருகின்றன.
நம்முடைய நீர்நிலைகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க சில அளவீடுகள் உள்ளன. உதாரணமாக, நீர்நிலைத் தாவரங்கள், பாசிகள், மீன்கள், முதலைகள், ஆமைகள், நீர்நாய்கள், தட்டான்கள் என அதற்குள்ளும் உணவுச்சங்கிலி அமைப்பு காணப்படுகிறது.
வாழிடம் சிதைத்தல், மாசுபாடு ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால், தட்டான்கள் அழிந்துவரும் நிலை அதிகரித்து வருகிறது. நமக்கு நல்ல சுத்தமான நீர் கிடைக்க வேண்டும் என்றால் தட்டான்களைப் பாதுகாப்பது அவசியம்.