அக்டோபர் 14, 1970 - உலக தர நிர்ணய நாள்
உற்பத்தி செ ய்யும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது. நுகர்வோருக்குத் தரமானதை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த இந்த நாள் கடை ப்பிடிக்கப்ப டுகிறது.
அக்டோபர் 15, 1931 - அப்துல் கலாம் பிறந்த நாள்
அறிவியலாளர், ஏவுகணை நாயகன், இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார். இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா ' உட்பட பல விருதுகள் பெற் றுள்ளார்.
அக்டோபர் 16, 1945 - உலக உணவு நாள்
உணவு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் சரியாகச் செ ன்றடைய வேண்டும் என்பதற்காக ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தொடங்கப்பட்டது. உணவுப் பிரச்னை , பசி, வறுமைக்கு எதிராகப் போராடுவது இந்த நாளின் நோக்கம்.
அக்டோபர் 18, 1956 - மார்டினா நவரத் திலோவா பிறந்த நாள்
மூன்று வயதில் டென்னிஸ் மட்டையை ப் பிடிக்கத் தொடங்கிய செக்கோஸ் லோவேக்கியா வீராங்கனை. 18 தனிநபர், 40 இரட்டையர் 'கிராண்ட் ஸ்லாம்' பட்டங்களுடன் விம்பிள்டன் பட்டங்களை 9 தடவை வென்றிருக்கிறார்.
அக்டோபர் 19, 1888 - நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்த நாள்
சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் அறிஞர். எளிய சொற்களால் தேசபக்திப் பாடல்கள் பாடி சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தினார். 'தேசியக்கவி' என போற்றப்பட்டு, தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். 1971இல் 'பத்ம பூஷண்' விருது பெற்றார்.
அக்டோபர் 19, 1910 - சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த நாள்
சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியர், வானியல் அறிஞர் என, பன்முகம் கொண்டவர். விண்மீன்களின் கட்டமைப்பு பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். தாம் செய்த ஆய்வுகளைத் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.