பொய் சொன்னேன்! திருந்தினேன்!! | பட்டம் | PATTAM | tamil weekly supplements
பொய் சொன்னேன்! திருந்தினேன்!!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 அக்
2019
00:00

பொய் பேசாதிருத்தல் பற்றி வாய்மை என்று வள்ளுவர் ஓர் அதிகாரமே எழுதி இருக்கிறார். அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பொய்யை அவரும்கூட அனுமதிக்கிறார். மாணவர்களிடம் சமீபத்தில் நீங்கள் சொன்ன பொய் எது? யாரிடம்? என கேட்டிருந்தோம். கோவை, சிவானந்தபுரம், இளங்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.

சூரியபிரபா, 10ஆம் வகுப்பு
ஒரு முறை வீட்டுப்பாடம் செய்துவிட்டதாக அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு, விளையாடச் சென்றுவிட்டேன். ரொம்ப நேரம் விளையாடியதில் வீட்டுப்பாடம் செய்யமுடியாம போய்விட்டது. மறுநாள் மிஸ் கேட்டபோது, செய்துவிட்டோம்னு எல்லோரும் சொல்ல, அவங்க என்னை மட்டும் எப்படிக் கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலை. நோட்டை 'செக்' பண்ணினாங்க. 'மாட்டிக்கிட்டேன்'. அந்தச் சமயம் வந்த பயம் இருக்கே.. அப்பப்பா... உண்மையைச் சொல்லி இருந்தால், அந்த மாதிரி பயப்பட வேண்டாம்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

பிரணவ்தேவா, 8ஆம் வகுப்பு
என்னை வீட்டிலேயே இருக்கச் சொல்லிட்டு, அம்மா வெளியில போய் இருந்தாங்க. அவங்க போனதும் நான் நண்பன் வீட்டுக்கு விளையாடப் போயிட்டேன். அம்மா வருவதற்கு கொஞ்சம் முன்னாடிதான் எங்க வீட்டுக்கு வந்தேன். அம்மா வந்ததும் சாப்பிட்டியா என்று கேட்டாங்க. நண்பன் வீட்டிலேயே சாப்பிட்டதாகச் சொன்னேன். உண்மையில் சாப்பிடவில்லை. அதனால நடுராத்திரி பசி எடுத்து அம்மாவை எழுப்பி, உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன்.

பிரதீபிகா, 10ஆம் வகுப்பு
என்னையும் தம்பியையும் வீட்டில் விட்டுட்டு எல்லோரும் வெளியில் போனார்கள். அவங்க இல்லாத இரண்டு மணி நேரமும் டிவி பார்த்துவிட்டு, கேம்ஸ் எல்லாம் விளையாடினோம். வீட்டுக்கு வந்ததும் படிச்சியான்னு கேட்டாங்க. ஆமான்னு பொய் சொல்லிட்டேன். ஆனா தம்பி, உண்மையைச் சொல்லிட்டான். அம்மா, என்னை ரொம்பத் திட்டினாங்க... நீ, 'என்ன வேண்டுமானாலும் சொல்; ஆனால், பொய் மட்டும் சொல்லாதே' என கண்டிப்புடன் சொன்னாங்க.

ஹரிபிரியா, 8ஆம் வகுப்பு
எங்க கிளாஸ் மிஸ் எப்போதும் காய்கறிகளை நிறைய சாப்பிடணும்னு சொல்லுவாங்க. எனக்கோ அவை பிடிக்காது. தினமும் மதிய உணவு முடிஞ்சதும், இன்னிக்கு என்ன காய்கறி சாப்பிட்டன்னு வந்து எல்லோர்கிட்டயும் கேட்பாங்க. நான் பொய் சொல்லிடுவேன். ஒரு நாள் பொரியலை சாப்பிடாமல், கீழே கொட்டும்போது மாட்டிக்கொண்டேன். ரொம்ப நேரம் மிஸ், அதன் பலன்களை எடுத்துச் சொன்னாங்க. சாரி கேட்டுவிட்டு அன்றோடு பொய் சொல்வதை விட்டுவிட்டேன். இப்போ காய்கறிகளும் சாப்பிடுகிறேன்.

சஞ்சீவ், 10ஆம் வகுப்பு
எங்க கிளாஸ் மிஸ், எல்லோரும் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து படிக்கணும்னு சொல்லி இருக்காங்க. படிப்பதை உறுதிசெய்ய, அதேநேரத்துக்கு அவங்களுக்கு போன் செய்யணும். தினமும் எல்லோரும் கால் செய்வோம். ஒரு நாள் நான் காலையில போன் செய்துவிட்டு, திரும்பவும் படுத்துத் தூங்கிவிட்டேன். ஸ்கூலுக்குப் போனதும் 'இன்னிக்கு நீ என்ன படிச்சன்னு' டீச்சர் கேட்டாங்க. நான் ஏதோ சொல்லி சமாளிச்சேன். “பொய் சொல்லாதே, நீ படிக்கவே இல்லை. படுத்துத் தூங்கிட்ட, தினமும் இப்படித்தான் செய்யுறியான்னு?” அவங்க கோபமாக கேட்க, நான் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டேன். பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும், அம்மா சொன்னாங்க. காலை 6 மணிக்கு டீச்சர் போன் செய்த விவரத்தை! அன்னியோட பொய் சொல்லுறதையே விட்டுட்டேன்.

சக்தி கணேஷ், 9ஆம் வகுப்பு
அப்பா தினமும் என்னையும், எனது தம்பியையும் காலையில் பள்ளியில் விட்டுட்டு வேலைக்குச் செல்வார். பர்மிஷன் போட்டு, மாலை 3 மணிக்கு வந்து அழைச்சுட்டு வந்து வீட்டுல விட்டுட்டு ஆபிஸுக்குத் திரும்பப் போயிடுவார். சீக்கிரமே வீட்டுக்கு வந்து விடுவதால், விளையாட நேரம் கிடைக்கவில்லை. பிளான் செய்து, ஒரு வாரம் ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு அப்பாவை ஒரு மணிநேரம் லேட்டா வாங்கன்னு சொல்லிட்டேன். அப்பா, 3 மணிக்கு தம்பியை அழைச்சுட்டுப் போயிடுவார். எனக்காகத் திரும்பவும் 4 மணிக்கு வந்தார். அதிக நேரம் பெர்மிஷன் போட்டதால் அடுத்த மாச சம்பளத்தில், அதிகம் பிடிச்சிட்டதாக அப்பா சொன்னார். நான் சொன்ன பொய்யால்தான் இப்படி ஆகிடுச்சுன்னு உணர்ந்து வருந்தி, அப்பாவிடம் உண்மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்டேன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X